Main News
தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய தலைவராய் ஹம்ஜாட் நியமனம்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான பொல்கொல்லையில் இயங்கும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத் தலைவராக ஹம்ஜாட் அமைச்சர் றிஷாட் புதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரான ஹம்ஜாட் புதிய பதவியினை தேசிய கூட்டறவு அபிவிருத்தி திணைக்களத்தில் பொறுப்பேற்றதன் பின்னர் இங்கு உரையாற்றிய நிறுவனத் தலைவர், கடந்த காலங்களை விட இந்த நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல தன்னால் முடியுமான முயற்சிகளை அமைச்சர் றிஷாட் பதியுதீனோடு இணைந்து முன்னெடுக்கவுள்ளேன் என்று தெரிவித்தார். இலங்கையில் கூட்டுறவுத்துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கவும்…
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதிகளில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டட்த்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அமீர் அலி
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகம் மற்றும் ஓட்டமாவடி செயலகப் பிரிவில் இரண்டு சமூர்த்தி கிராமங்களை தெரிவு செய்து மக்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதிகளில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையிலான கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்…
வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை கிராம சேவகர் பிரிவில் செமட்ட செவண வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. ஒட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உதவி பிரதேச செயலாளர் ஏ.அப்கர், செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்…
சாய்ந்தமருது மக்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்று நிறைவேறுகிறது. -இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாஸா வாகனம் பயன்பாட்டில்!
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசலின் கோரிக்கைக்கு அமைய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் முயச்சியால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிஷாட் பதியூதீன் அவர்களால் கடந்த வருடம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்திற்கு புத்தம் புதிய ஜனாஸா வாகனம் ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது. இப்பிரதேச மக்களின் முக்கியமான தேவையாக இருந்த இந்த ஜனாஸா வாகனம் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சில மாதங்களாக…
போருக்கு பின்னரான வெறுமையில் திசைதிரும்பும் தமிழ் அரசியல்
சிறுபான்மை சமூகத்தினரின் புரிந்துணர்வுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில், சில விடயங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைவைத் தூரப்படுத்துகின்றமை கவலையளிக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதை எடுத்தாலும் தற்போது இவ்விரு சமூகங்களும் ஏட்டிக்குப் போட்டியில் ஈடுபடுகின்றன. கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தூரப்படுத்தும் மனநிலையில் நோக்கவும் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசியே தமிழர்களின் வாக்குகளை பெறலாம் என்ற மனநிலையும் சிலரிடம் வளர்வது துர்ப்பாக்கியமே. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அபிவிருத்தி அரசியலை விமர்சித்து…
மன்னார் நாகதாழ்வு வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்…..
மன்னார் மாவட்ட தலைமை பொலிஸ் பெருப்பதிகாரி ரத்நாயக்க தலைமையில் மன்னார் பிரதேசபையுடன் இணைந்து மன்னார் நாகதாழ்வு வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது…. இந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்ட நிகழ்வில் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர்.மன்னார் மாவட்ட பொலிஸ் தலைமைப்பொறுப்பாளர் ரத்நாயக்க பொலிஸ் அதிகாரிகள் பிரதேசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்……
ஆஷிக் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வெளிநாட்டு உறவுகளின் ஊடாக விருதோடை வட்டார மக்களுக்கு 30 குடிநீர் பைப்கள் கையளிப்பு …
வர்த்தக மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் பெறப்பட்ட வெளிநாட்டு உதவியின் மூலம் சேனைக்குடியிருப்பு மற்றும் ரெட்பானா ஆகிய கிராமங்களுக்கு குடி நீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் பைப் வசதிகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டது . தூய குடிநீரின்றி தவிக்கும் விருதோடை , வட்டார மக்களுக்கான குடி நீர் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் விருதோடை வட்டார அமைப்பாளரும் , கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான…
ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், கரத்தை சொந்தகாரர்களுக்கும் சமுர்த்தி வழங்கவும் அமைச்சர் ஹரிசனிடம், அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கோரிக்கை!
வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு!!! திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த சமுர்த்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர் ஹரிசன், சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டார் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் 38000 அதிகமான சமுர்த்தி பெறுவோர் இருக்கின்றனர் , மேலும் 19500 சமுர்த்தி கொடுப்பனவுகள் வேண்டியிருக்கின்றது இதில் எந்தவிதமான வேறுபாடின்றி வறுமையை எதிர்கொள்பவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும்….
‘எஞ்சியுள்ள காலங்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
எஞ்சியுள்ள காலங்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம் என கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பிரதேச மீனவர் சங்கத்தின் பலநோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நடும் விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! பெரும்பான்மை சமூகத்தினரிடத்தில் தேடல் முயற்சி அதிகமாக உள்ளது. தமது சொந்தக் கையை நம்பும் தைரியம்…
“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்” வரக்காபொலையில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில், கைத்தொழில், வர்த்தக அமைச்சினூடாக வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு வரக்காப்பொலயில் நேற்று (30) இடம்பெற்ற போது, பிரதம…
உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது. – அமைச்சர் ரிஷாட்
ஊடகப்பிரிவு- நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையின் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்தல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். 3 நாள் இடம்பெறும் இந்த கண்காட்சியில் கட்டிடம், நிர்மாணம், பொறியியல் மற்றும் கட்டடகக்கலை தொழிற்துறையில் உள்நாட்டு,…
முசலியும் அமைச்சர் ரிசாட் பதியுதீனும்….
நாட்டில் எப்போதும் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருந்து வருகிறார். பல்வேறு விமர்சனங்கள், சரி பிழைகளுக்கு மத்தியில் ஒருசில விடயங்களை மாத்திரம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முசலிப் பிரதேசத்திலிருந்து அமைச்சர் ரிசாட் பதியுதீனை அகற்றிவிட பல முனைகளிலும் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் முசலிப் பிரதேசம் குறித்து எவ்வித கரிசனையும் அற்றிருந்தவர்கள் – முசலி மக்களைக்காட்டி பணம் சம்பாதித்தவர்கள் – முசலி மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்கள்…
