Main News
பர்மாவில் முஸ்லிம் படுகொலைகள் நிறுத்தப்படாவிட்டால் – தேசியரீ தியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் – றிஷாத் பதியுதீன்
மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்பாவி முஸ்லிம்கள் மீது மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடைத்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிசாத், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை தெரிவித்தார். “மியன்மாரிலுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களும் அரக்கர்களும் கொடூரமான முறையில்…
பர்மா முஸ்லிம்களுக்காக இன்று நடபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும் – மனோ கோரிக்கை
அஸ்ரப் ஏ சமத் இன்று கொழும்பு வாழ் முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் கொழும்பில் நடாத்தும் பர்மா வாழ் முஸ்லீம்களது கொலை செய்யப்படுவதை கண்டன அமைதிப் பேரணியில் தமிழர்களாகிய நீங்களும் இணைந்து கொள்ளல் வேண்டும். நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் புங்குடுதீவு வித்தியாவின் அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக முன்னணித் தலைவர் மனோ கனேசன் கோரிக்கை விடுத்தார். வித்தியாவின் கொலையில் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் இணைந்து கண்டித்து அமைதிப் பேரணியில் இனைந்தது போன்று முஸ்லீம்கள் பர்மாவில் அநியாயமாகக் கொலைசெய்யப்படுவதையிட்டு…
கொலை வெறியை நிறுத்து” இலங்கையிலுள்ள பர்மா தூதரகத்தை முற்றுகையிட அழைப்பு..!
“கொலை வெறியை நிறுத்து” இலங்கையிலுள்ள பௌத்து தூதரகத்தை முற்றுழைகையிட அழைப்பு..! ஜூம்ஆத் தொழுகைக்காக தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டுக்குழு ஐக்கிய சமாதான முன்னணி
பர்மா முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளவர்களின் கவனத்திற்கு!
தாஹா 1. இதன்போது, தயவு செய்து, புத்த மதத்தை இழிவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். புத்த மதத்துக்கும் இந்த வன்முறைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2. இலங்கையிலுள்ள எந்த பிக்குகளையோ அல்லது பௌத்த அமைப்புகளையோ கண்டிக்க வேண்டாம். இது பிரச்சினையை திசை திருப்பும், தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கும். 3. மியன்மார் முஸ்லிம்கள் சம்பந்தமாக முகப்புத்தகத்தில் உலா வரும் அநேக படங்கள் இந்த வன்முறையுடன் கிஞ்சித்தும் தொடர்பற்றவை; பூகம்பத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் படங்கள் அவை. இதுபோன்ற…
”வித்தியா விவகார விசேட நீதிமன்றம்” ஞானசாரரின் கூற்றுக்கு, ராஜித்தவின் பதில்
வடக்கில் மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண சம்பவமாக கணிக்க முடியாது. மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே இதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். முதலில் இந்தியாவில் இவ்வாறு திட்டமிட்ட வியாபாரமாக இந்த செயற்பாட்டை மேற்கொண்டனர். தற்போது இலங்கைக்கும் வந்துள்ளனர். இதனை சாதாரண விடயமாக கருதவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க…
20 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் அடுத்த வாரத்தில்!
இருபதாம் திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இன்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – 20 ஆம் திருத்தச்சட்டத்தை முன்வைப்பது தொடர்பில் எமக்கு 15 ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் பாராளுமன்றத்திலுள்ள…
வாசுதேவ நாணயக்காரவை கண்டிக்கும் அஸ்கிரிய மஹாநாயக்கர்
அஸ்கிரிய மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் பாராளுமன்றத்தில் வாசுதேவ நடத்து கொண்ட விதம் ஒரு போதும் அனுமதிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுடைய குழந்தைகள் தான் நாட்டில் எதிர்கால பிரதமர், ஜனாதிபதிகள் எனவே நாம் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது, பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை…
பர்மா முஸ்லிம்களுக்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் தூ ஆ பிராத்தனை
கொலைக்களமாகும் பர்மா தேசத்தில் எமது சகோதரர்கள் கருனணயின்றி கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்படுகிறார்கள். இது தொடர்பில் இறைவனிடம் மன்றாடுவோம். நாளை ஜும்மா தொழுகையின் பின் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களிலும்” பர்மா நாட்டில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இறைவனிடன் மன்றாடுவோம்”எனும்கருப்பொருளில் துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் தொழுகையில் குனூத் இனணத்துகொள்ளுமாறும் அவர்களின் நிம்மதி வாழ்வுக்காகவும் பிராத்திப்போம். பணிவுடன். ……… அனைத்து சமூக இயக்கங்கள்.
இலங்கைக்கு எந்த நாட்டுடனும் விரோதம் இல்லை!
சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகேஷனி கோலோன்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் சீனாவிற்கு விஜயம் செய்தமையை இங்கு சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் கூறினார். இலங்கை உலகின் எந்தவொரு நாட்டுடனும் விரோதம் காட்டுவதில்லை எனவும்…
20 நிறைவேறாது பாராளுமன்றை கலைக்க இடமளியோம்!
20ம் திருத்தத்தை நிறைவேற்றும்வரை பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் இணங்கியுள்ளதாக அவர் கூறினார். அப்படி இருக்கையில் அமைச்சரவையில் இதற்கு இடையூறு ஏற்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தேரர் தெரிவித்துள்ளார். 20ம் திருத்தத்தை நிறைவேற்றாது பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப்பட மாட்டதெனவும் முடிந்தால்…
இன்று வர முடியாது: FCID பிரிவிற்கு சஷி வீரவன்ச அறிவிப்பு
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவென சஷி வீரவன்சவை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு இன்று அழைத்திருந்தது. எனினும் இன்று தன்னால் வர முடியாது என்றும் வேறு தினம் ஒன்றை வழங்குமாறும் சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு அறிவித்துள்ளார். மற்றுமொரு தினம் வழங்குவது…
வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு அமைச்சர் றிஷாத் உடபட பலர் நியமனம்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடபுல முஸ்லிம்களின் எதிர்நோக்கும் இன்றைய மீள்குடியேற்ற பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினையல்ல. இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வு கண்டு அந்த மக்களுக்கு விமோசனம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து அதன் ஊடாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது….
