Main News
மக்களுடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்ய முடிவு
தமக்குரிய காணிகளை ஜி. பி. எஸ். (GPS) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு எதிராக மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குளி மற்றும் முள்ளிபுரம் ஆகிய மக்கள் நீதிமன்றம் செல்லவிருப்பதாக கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் வில்பத்து விளாந்திபுரம் இந்நாட்டு…
மியன்மார் (BURMA) தூதுவருக்கு அமைச்சர் றிஷாத் கடிதம்
ஏ.எச்.எம்.பூமுதீன் மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று காலை (27) குறித்த கண்டனக் கடிதம் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ காரியாலயத்திலிருந்து மியன்மார் தூதுவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் உள்ள முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளை எண்ணி இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனையை அடைந்துள்ளனர். இலங்கையைப் போன்று மியன்மாரும் ஒரு பௌத்த நாடாகும். புத்த பெருமான் மற்றுமொரு…
வில்பத்து தேசிய வன அழிப்பின் பின்னணியில் யார்? உண்மைகளை அம்பலப்படுத்திய நெத் FM
ஏ. எச்சித்தீக் காரியப்பர் உண்மைகள் ஊர்சுற்றி வரும் வரையும் அரங்கேறிக் கொண்டிருக்கும் பொய்மைகளானது எப்போது உண்மைகள் வந்து வாசற் கதவை தட்டுகின்றவோ அப்போதிருந்தே இல்லாத இடம் தெரியாமல் போய் விடும் என்பார்கள் அல்லவா? அதுபோன்ற சம்பவம் ஒன்றுதான் இன்று வில்பத்து விவகாரத்தில் இடம்பெற்றுள்ளது. வில்பத்து தேசிய வனப் பகுதியில் அமைச்சர் றிஷாத்தின் அனுசரணையில் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பச்சை நிர்வாணப் பொய்களை சிங்கள இனவாதிகள் அவிழ்த்து வந்த நிலையில் சிங்கள இணையமான நெத் எம். எப்….
இலங்கை ஒரு வர்த்தக மையமாக காணப்படுகின்றது – அமைச்சர் றிஷாத் பதியுதீன்
ஊடகப் பிரிவு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியரின் டாடா குழுமத்தினர் அமைச்சர் றிஷாத் பதியுதீனை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர். இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையில் உள்ள வர்த்தக தொடர்புகள் பலம் வாய்ந்தவையென அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு எடுத்துரைத்தார் இலங்கை வர்த்தக மையமாக காணப்படுகின்றது என்றும் கூறினார். இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கையில் முதலீடுகளை செய்வதுடன் உற்பத்தி துறையில் அதிக ஆர்வத்தை தாங்கள் கொண்டுள்ளதாகவும்,அதற்கான…
ஜனஹண்ட நிகழ்ச்சி – அமைச்சர் றிஷாத் சிங்கள மக்களுக்கு தெற்கு முசலி மீள்குடியேற்றம் தொடர்பாக தெளிவுபடுத்தினார்
– அபூஹஸ்மி – கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற TNL ஜனஹண்ட நிழ்ச்சியில் அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்கள் கலந்துகொண்டு பூர்வீக கிராமங்களாக காணபட்ட பாலக்குழி, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, கொண்டச்சி, காயக்குளி தொடர்பாக வினவப்பட்ட கேள்விகளுக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்கள் நன்கு தெளிவுபெறும் வகையில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை விளக்கிக்கூறினார். அவர் மேலும், ஜனஹண்ட நிழ்ச்சியில் பேசுகையில், நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்த வடக்கு முஸ்லிம்கள் புலிகளின் கொள்கைக்கு உடன்படாத ஒரே காரணத்தினால்…
அந்த வார்த்தை திடீரென எனக்குத் தெரியாமலே வந்துவிட்டது
நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தகாத வார்த்தைகளால் எசியமை, நான் தெரியாமல் செய்த தவறாகும். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தை திடீரென வந்துவிட்டது. எவ்வாறாயினும், நான் அதை தெரிந்தே சொல்லவில்லை’ என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணாயக்கார கூறினார். கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வாசுதேவ, ‘தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை நம்பிக்கையில்லாப் பிரேரணையின்…
பாகிஸ்தான் உட்பட 33 நாடுகளுக்கு புதிய உயர்ஸ்தானிகர்களை நியமிக்க நடவடிக்கை
33 நாடுகளுக்கு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை நியமிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதில் 17 பேர் இராஜதந்திர சேவையில் உள்ளவர்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனையவர்களில் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள் அடங்குகின்றனர். பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் தயா ரத்னாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அனுமதிக் கிடைத்தவுடன் புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
பர்மா முஸ்லிம்கள் தொடர்பில் றிஷாத் பதியுதீன் முஸ்லிம் அமைப்புக்களை சந்திக்க திட்டம்
இலங்கைக்குள் 1990 ஆம் ஆண்டு தமது தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நான் உட்பட எமது வடமாhகாண முஸ்லிம் சமூகம் அனுபவித்த அகதி வாழ்வு எவருக்கும் எங்கும் ஏற்படக் கூடாது என்று எண்ணும் எமக்கு எமது சகோதர ரோஹிங்யோ முஸ்லிம்கள் எதிர் கொண்டுவரும் துயர் சம்பவங்கள் மனதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இது தொடர்பில் எமது அளுத்தத்தை உரிய அரசுக்கு வழங்கும் வகையில் இலங்கையில் உள்ள முக்கிய…
முஸ்லிம் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் றிஷாத் பதியுதீன் செயற்படுகிறார் – ஊடகவியலாளர் சலீம்
பி.எம்.எம்.ஏ.காதர் இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும்,முஸ்லிம்கள் அழிக்கப்பட்டாலும் வாய் மூடி மௌனிகளாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருக்கின்றார்கள்.; இவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒருவராக அமைச்சர் ரிசாத்பதியுதீன் இருக்கின்றார் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித்தலைவரும்,சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(24-05-2015)நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு ஆராதனை மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் இரண்டாவது அமர்வாக நடைபெற்ற…
ஊடகவியலாளா்களுக்கு சலுகை அடிப்படையில் 1500 வீடுகள்
அஸ்ரப் ஏ சமத் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுததாபணத்திற்கு சொந்தமான கோமகமவில் உள்ள காணியில் 1500-2000 வீடுகளை நிர்மாணிதது ஊடகவியலாளா்களுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று ஊடக அமைச்சா் ஜயந்த கருநா திலக்க அமைச்சின் செயலாளா் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் அதிகாரிகள் இக் காணியை பாா்வையிட்டதுடன் இக் காணியில் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் பாா்வையிட்டாா்கள்.. இவ் வீடுகள் கொழும்பில் ஊடக நிறுவனங்களில் கடமைபுரிகின்றவா்கள் வாடகை வீடுகளில் வாழுகின்ற ஊடகவியாளா்களுக்கு வழங்கப்படும்.இதற்காக ஜனாதிபதி மற்றும்…
எதிர்க்கட்சிகள் பலமிருந்தால் பாராளுமன்றத்தை கலைத்துக்காட்டட்டும் : ரவி கருணாநாயக்க
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அவ்வாறாயின் எதிர்க்கட்சிக்கு முடியுமாக இருந்தால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்துக் காட்டுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்தார். இந்த பாராளுமன்றத்தினால் நீண்ட காலம் பயணிக்க முடியாது. நிரந்தரமான அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு புதிய பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக திருடர்களின் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டார். எமக்கு ஆட்சியை ஒப்படையுங்கள். பாராளுமன்றத்தை நாம் கலைத்துக் காட்டுவோம் என்று தினேஷ் குணவர்தன எம்.பி.விடுத்த சவால் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு…
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த 65 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த மூவாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதில் 65 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பதவிகாலம் ஆரம்பமானபோது தினம்தோறும் சுமார் 200 முறைப்பாடுகள் வரை கிடைத்தபோதிலும் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இலட்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சுமார் 65 முறைப்பாடுகள் வரை தினமும் கிடைப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.இலஞ்ச ஊழல்…
