Headlines

இன்று வர முடியாது: FCID பிரிவிற்கு சஷி வீரவன்ச அறிவிப்பு




பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவென சஷி வீரவன்சவை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு இன்று அழைத்திருந்தது.

எனினும் இன்று தன்னால் வர முடியாது என்றும் வேறு தினம் ஒன்றை வழங்குமாறும் சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

மற்றுமொரு தினம் வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *