Headlines

இலங்கைக்கு எந்த நாட்டுடனும் விரோதம் இல்லை!




சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகேஷனி கோலோன்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் சீனாவிற்கு விஜயம் செய்தமையை இங்கு சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இலங்கை உலகின் எந்தவொரு நாட்டுடனும் விரோதம் காட்டுவதில்லை எனவும் நடுநிலையாகவே செயற்படுவதாகவும் மகேஷனி கோலோன்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *