Main News
பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு ஆளாகியவர்கள்
இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலை மாணவ, மாணவிகளில் ஆயிரம் பேரில் ஒருவர் புகையிலை பாவனைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம், 16 சதவீதமான மாணவர்களும் 5 சதவீதமான மாணவிகளும் புகையிலை பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. புகைத்தல் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் 80 சதவீதமான…
துபாய், ரியாத், டோக்யோ உட்பட உலகின் பல நகரங்களை பின்தள்ளி உலகின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகராக கொழும்பு முதலிடம்
இலங்கையின் தலைநகர் கொழும்பு, உலகின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமாக இடம்பிடித்துள்ளது. மாஸ்டர்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளபட்ட ஆய்வின் முடிவிலே கொழும்பு முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நகரங்களும் ஆராயப்பட்டு கடந்த ஆறு வருடங்களில் ஆசியாவில் 7 நகரங்கள் top 10 இல் இடம்பிடித்துள்ளது. அதில் 21% வளர்ச்சி வேகத்துடன் கொழும்பு சீன தலைநகரத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை அடைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு குறிப்பிட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பொது அமெரிக்காவின் Houston நகர்…
வில்பத்து விவகாரம்; 02 இலட்சம் கையெழுத்துக்களைப் பெறுதல் உட்பட பல விடயங்களில் இணக்கப்பாடு
அஸ்ரப் ஏ சமத் வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களை மீளக் குடியேற்ற வேண்டும் என்று மேல், கிழக்கு மத்திய மாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இணக்கம் வடக்கு முஸ்லீம்களை மீள் குடியேற்றும் விடயத்தில் நேற்று (04) இரவு அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தலைமையில் வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில் அனைத்து கட்சிகளின் முஸ்லீம் பிரநிதிகள் கூட்டமொன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் அங்கம் வகிக்கும் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வடக்கு…
முஸ்லிம்களின் வெறுப்பும், பொதுபல சேனாவால் தோற்ற மஹிந்தவும்.. காதர் ஹாஜியாரிடம் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் கூறியவை
மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல. அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்’ என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்தார். ‘கடந்த ஆட்சியின் போது பொதுபல சேனாவின் செயற்பாடுகள் காரணமாக அவ்வரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தனர்’ எனவும் அவர் தெரிவித்தார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஏ.ஆர்.எம்.ஏ.காதர்,…
கடந்த ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு அமெரிக்க பிரஜையிடம் இருந்த போது எவரும் வாய் திறக்கவில்லை.. இப்போது மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராக குற்றம் சுமத்த வேண்டாம்
நாட்டின் பாதுகாப்பு கடந்த ஆட்சியில் அமெரிக்க பிரஜையான கோத்தாபயவுக்கும், வெளிநாட்டுசேவை அவுஸ்திரேலிய பிரஜை பாலித கொஹணவுக்கும் வழக்கப்பட்டபோது வாய் திறக்காதவர்கள் மத்திய வங்கி ஆளுநராக வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நியமிக்கப்பட்டதாக கேள்வியெழுப்புவதில் எந்தளவு நியாயமானது. வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு மத்திய வழங்கி ஆளுநர் பதவி வழங்க சட்டத்தில் எந்தத் தடையும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அர்ஜுன மகேந்திரன் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டும் தொகையைவிட 270 மடங்கு அதிக தொகை கடந்த ஆட்சியில் மோசடி…
திஸ்ஸ மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாகத் தெரிவித்து திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்…
ஜனாதிபதி இன்று கட்சித் தலைவர்களுடன் அவசர சந்திப்பு
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய அமைக்கப்படவிருக்கும் அரசியலமைப்புப் பேரவையை அமைக்கும் விடயத்தில் எதிரணிகள் குந்தகமாகச் செயற்பட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்குத் தடையாகச் செற்பட்டதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி நடவடிக்கைளிலிறங்குவதற்குத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. . இதனடிப்படையில் எந்த வேளையிலும் பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடியச சாத்தியம் அதிகரித்து வருவதாகவும் அறியவருகின்றது. அரசியலமைப்புப் பேரவையை அங்கீகரித்ததன் பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த…
களவு பிடிபட்டது!
அஸ்ரப் ஏ சமத் இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஊடக பணிப்பளரும் ஊடகப் பேச்சாளருமான – மகேசினி கொலோன் இன்று ஊடக மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள்.. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்க கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுத கிடங்கு கொண்ட கொள் கலனை உக்ரைனுக்கு கொண்டுவருவதற்கு கடந்த வாரம் முயற்சித்துள்ளார். இந் நடவடிக்கையை வெளிநாட்டு அமைச்சினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவர் உலகில் எந்த நாடுகளில் இருந்தாலும் அவரை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவர…
யூன் 15ற்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பியுங்கள்
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார அறிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நாடு முழுவதிலும் பாடசாலைகளினூடாக 4 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு முறையாக விண்ணப்பங்களை நிரப்பி யூன் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும்….
இலங்கை – ஜப்பான் ஊடக அமைச்சர்கள் சந்திப்பு!
அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் சனா டாகாச்சியை சந்தித்து கலந்துரையாடினார். இவ்விஜயத்தின் போது மேலும் பல உயரதிகாரிகளை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடினார். இச்சந்தர்ப்பத்தில் ஐ.தே.க டோக்கியோ கிளை தலைவர் யசேந்திர சமரசேக்கர மற்றும் செயலாளர் சந்தரன விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு
இலங்கையில் எந்தக் காரணத்திற்காகவும் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டை பலமுறை தெளிவாக தெரிவித்துள்ளது, இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை,என ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து சிந்தித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூருக்கு அழைப்பு வந்தது: ஆனால் செல்லமாட்டேன் : கோத்தா
நான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூருக்கு செல்ல மாட்டேன் என்பதை உறுதிப்பட தெரிவித்து கொள்கின்றேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தன்னை சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பிதல் வந்தமை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பலர் கவலை தெரிவித்து எனக்கு செய்திகளை அனுப்பி இருந்தார்கள். நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை நான் மதிக்கின்றேன்….
