Headlines

பயணத்தின் இடையில் சாதாரண பாதணி கடையில் ஜனாதிபதி…..

முன்னர் இந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் மிக ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர்கள். அவர்கள் மக்கள் பணத்தையும் சேர்த்து செலவு செய்தார்கள், அவர்களின் பிள்ளைகள் அணியும் பாதணிகளின் பெறுமதி 3 இலட்சத்தை கடந்தது. அவ்வாறானவர்கள் பயன்படுத்திய இடுப்பு பட்டியின் விலை 1 இலட்சத்திற்கும் அதிகமானதாகும். இப்படியிருக்கும் போது பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட பல்லேவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்ற சாதாரண ஒருவரை இந்நாட்டு ஜனாதிபதியாக நியமித்தது இந்நாட்டு மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சியாகும். இவ்வாறு நியமிக்கப்பட்ட…

Read More

ஜனாதிபதியின் தன்சலின் போது தீப்பற்றிக்கொண்ட முச்சக்கர வண்டி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்சலை ஆரம்பித்த போது முச்சக்கர வண்டி தீப்பற்றிக்கொண்டுள்ளது. பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகாமையில் இந்த தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதேச மக்கள் இணைந்து தீயை அனைத்துள்ளனர். முச்சக்கர வண்டி முற்று முழுதாக தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தன்சலுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

Read More

உலக புகைபிடித்தல் எதிா்ப்பு தினத்தையொட்டி பிரதமருக்கு மாணவா்கள் கொடி அணிவிப்பு

அஸ்ரப் ஏ சமத் உலக புகைபிடித்தல் எதிா்ப்பு தினத்தையொட்டி பிரதமா் ரணில் விக்கிரகசிங்கவுக்கு பாடாசலை மாணவா்கள் கொடியொன்றை அணிவித்தனா். இது அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இந் கொடி விற்பனை தினத்தை சமுாத்தி அதிகரிகள் ஊடகா அமுல் படுத்தபட உள்ளது. படத்தில் சமுா்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதியமைச்சா் அமீர் அலியும் காணப்படுகின்றனா்.

Read More

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 எண்ணெய் கிணறுகள் – விலைமனு கோர திட்டம்

நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் படலத்தை பெற்றுக்கொள்வதற்கு விலைமனு கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 மாதங்களுக்குள் விலைமனு கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ் படகொட தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விலைமனு கோரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பீ.எம்.எஸ் படகொட மேலும் கூறினார்.

Read More

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை : ஜனாதிபதி

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனை கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுப் பேச்சுக்கான முன்னெடுப்பொன்றை யோசனையாக முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மரணதண்டனையைக் கொண்டு வருவது தொடர்பில் தீர்மான மொன்றுக்கு வரவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “மரணதண்டனையை மீளக்கொண்டு வருவதற்கு சர்வதேச மனித…

Read More

15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஜந்தாண்டு திட்டம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இலங்கையில்  முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் அதிக கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதற்கான திட்டமொன்றினை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் முதல் கட்டமாக 15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஜந்தாண்டு திட்டமொன்றினை நடை முறைப்படுத்தவுள்ளதாக கூறினார். புத்தளம் தில்லையடி உமராபாத் அன்சார் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இன்று (2015.06.01) இடம் பெற்ற ஜந்தாம் ஆண்டு புலமை பரிசில்…

Read More

அமைச்சர் றிஷாதை தீவிரவாதி போல் சித்திரிக்க முயற்சிக்கும் சிங்கள ஊடகம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் பொரளை பள்ளிவாசலின் கண்ணாடிகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான செய்தியை லங்கா சீ நியூஸ் என்ற விமல் வீரவன்ச சார்பு இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்தச் செய்தியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஒரு தீரவாதியாக காட்ட முயற்சித்துள்ளமையை என்னால் உணரக் கூடியதாக உள்ளது. பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றதும் அசாத் சாலி அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் அங்கு சென்றார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு தேவையான உதவிகளை (ஆலோசனைகளை) அவர்கள் வழங்கினார்கள் என்று எழுதப்பட்டிருந்தது,…

Read More

கொழும்பு – பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)

 கொழும்பு – பொறள்ளயில் அமைந்துள்ள ஜாமியுல் அல்பார் பள்ளிவாசல் மீது இன்று இரவு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், பள்ளிவாசலின் நிலைமைகளை பார்வையிட அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் அப்பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.   

Read More

மூடி மறைக்கப்பட்ட பைல்கள் மீண்டும் திறக்கப்படும் – ஜனாதிபதி மைத்திரி

நாட்டில் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மூடி மறைக்கப்பட்டுள்ள ‘பைல்கள்’ மீள திறக்கப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சட்டத்தரணிகள் சங்க நிகழ்வொன்றில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி நல்லாட்சிக்கான வழி திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீண்ட தூர பயணத்தில் சகல தரப்பினதும் ஒத்துழைப்பு கிட்டும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும்தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி: இலங்கை…

Read More

இந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு அலங்கரிக்க விரும்பவில்லை -கபீர் ஹாசீம்

அஸ்ரப் ஏ சமத் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்லவே நாம் ;விரும்புகின்றோம். 100 நாட்கள் முடிந்து தற்பொழுது 150 நாட்கள் கடந்து விட்டன. இன்னும் காலம் தாழ்த்துவதை ஜ.தே.கட்சி ஒருபோதும் விரும்பவில்லை. அடுத்த பாராளும்னறத் தேர்தலில் நாம் கட்டாயம் வெற்றி பெற்று பெரும்பான்;மை ஆசனத்தினை பெற்று ஆட்சியில் அமர்வோம் அதில் மீண்டும் பிரதமராக ரணில் பதவி வகிப்பார். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும். என ஜ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். நேற்று பி;.பகல்…

Read More

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ; பர்மா கொடியும் எரிப்பு (Photo)

அஸ்ரப் ஏ சமத் ஜக்கிய சமாதாண இயக்கம் ஏற்பாடு செய்த பர்மாவில் வாழும் முஸ்லீம்களுக்கான அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு தெவட்டகா பள்ளியில் இருந்து ஆரம்பித்து ரொஸ்மிட் பிளேசில் உள்ள மியன்மார் ;தூதுவரடிடம் கண்டன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சர் றிஷாத் பதியுதீன், மேல்மாகாண சபை உறுப்பிணர்கள் முஜிபு ரஹ்மான், பைருஸ் ஹாஜி, தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி ஆகியேர்ர் ஊர்வலமாகச் சென்று தூதுவரிடம் கண்டன அறிக்கையும் அப்பாவி மக்களை…

Read More

புத்தளத்தில் மியன்மார் முஸ்லிம்களுக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களுடன் பிக்குகளும் களத்தில் குதிப்பு

முஹ்ஷி மியன்மார் முஸ்லிம்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலைகளை வன்மையாக கண்டித்தும், இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமும் உடனடியாக இதில் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியும் புத்தளம் நகரில் இன்று (29.05.2015) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதில் சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Read More