Main News
ஜனாதிபதியின் ஆலோசகராக பைசர் முஸ்தபா நியமனம்
முன்னாள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வித்தியாவின் படுகொலைக்கு விஷேட நீதிமன்றம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ் சென்றுள்ள ஜனாதிபதி, புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவியின் படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று உரிய தீர்ப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வித்தியாவின் படுகொலையுடன்…
ஞானசார தேரர் விடுதலை
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று காலை குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தன் பின்னர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5000 ரூபா பிணையிலும், 10 லட்ச ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி தொடர்பில் பத்தாண்டுத் திட்டம்
வீதி அபிவிருத்தி தொடர்பான பத்தாண்டு திட்டமொன்றை தயாரிப்பதற்கு வீதி அவிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஏனைய வீதி அபிவிருத்தி திட்டங்களையும் கருத்திற்கொண்டு உத்தேச திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் சமன் பண்டார கூறியுள்ளார். தற்காலத்திற்கு ஏற்றவாறு வீதி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம்
எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு இணைப்பாளர் அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாபினால் ஊடக அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 மற்றும் ஜூலை 16…
போதைப்பொருள் வியாபாரிகள், சமூக விரோதிகளை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்றுவேன் – ஜனாதிபதி மைத்திரி
போதைப்பொருள் வியாபாரிகளையும், சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தான் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது இந்த இலக்கை அடைவதற்கு புதிய தேர்தல் முறை உதவும் என்றும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி நடக்குமா அல்லது விகிதாசாரமுறை மற்றும் தொகுதி முறை இணைந்த கூட்டு முறைப்படி நடக்குமா என்று உறுப்பினர்கள் சிலர் கேள்வி…
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரரின் இல்லத்திற்கு மைத்திரி விஜயம்
இரண்டாம் உலகப் போரின் போது இராணுவச் சிப்பாயாக கடமையாற்றிய தனது பழைய நண்பர் சோமவர்டன வீரசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று நலம் விசாரித்தார்.பொலநறுவைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தனது நண்பரான சோமவர்டன வீரசிங்கவின் இல்லத்திற்கு சென்று சந்திப்பை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியை ஆனந்தக்கண்ணீருடன் திரு.சோமவர்டன வரவேற்றார்.இதன்போது சில சுவாரஸ்யமான அனுபவங்களை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பகிர்ந்து கொண்டார்.
Breaking News.. ஞானசார தேரர் சற்றுமுன் கைது!
சட்டவிரோத ஆர்பாட்டம் செய்ததற்காக நீதிமன்றில் ஆஜராக இருந்த நிலையில் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பொதுபல சேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது அறிந்ததே, சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் ஜப்பான் சென்ற அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் நேற்று விமான நிலையம் ஊடாக நாடு திரும்பி இருந்தநிலையில், சற்றுமுன் கருவத் தோட்ட பொலிசாரால் அவர் கைது செய்யபப்ட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மூன்று உயிர்களை எடுத்த பாரிய தீவிபத்து.. உடனடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாத்
மருதானை எல்பின்ஸ்ட்டன் பிரதேசத்தின் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.இந்த தீ விபத்தினால் மூவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இடம் பெற்று ஒரு சில நிமிடங்களுக்குள் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பாதிப்புக்குள்ளான கடைத் தொகுதியினை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலீஸ் உயர் அதிகாரிகளிடத்தில் கேட்டுக்கொண்டார். இதே வேளை இந்த பிரதேசத்தில் தீ…
அனைவருக்கும் மேலாக ஶ்ரீசுக உரிமை எனக்கே உண்டு
அனைவருக்கும் மேலாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உரிமை தனக்கே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா – யக்கல வாராந்த சந்தையை திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் ஒரு பிரிவையே வாக்காளர்கள் நிராகரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் இன்று (25) திங்கட்கிழமை காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என ஜப்பான் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கே சைத்தாமா என்ற பகுதியில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கட்டிடங்கள் சிறிது ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் இதுவரையில் இல்லை. கடல் அடியில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில்…
புடாபெஸ்ட் பிரகடனத்தில் இலங்கைக்கு அங்கத்துவம்
புடாபெஸ்ட் சைபர் குற்றம் தொடர்பான பிரகடனத்தில் அங்கத்துவம் பெறும் முதலாவது தெற்காசிய வலய நாடு என்ற பெயரை இலங்கை பெற்றுள்ளது. இதற்கான தகுதியை இலங்கை பெற்றுள்ளதாகவும் சட்ட ஆவணத்தை ஐரோப்பிய கவுன்ஸிலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப (ICTA) சட்டப் பணிப்பாளர் ஜயந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கவுன்ஸில் செயலாளர் நாயகம் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததற்கு அமைய குறுகிய காலத்தில் சட்ட ஆவணம் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கைக்கு…
