Headlines

20; சிறிய கட்சிகளை அழிக்கும்

தேர்தல் தொடர்பான 20ஆவது திருத்தத்துக்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த திருத்தமானது, நாட்டில் உள்ள சிறிய ஜனநாயக கட்சிகளை அழிக்கும் செயற்பாடு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நாட்டில் உள்ள சிறிய கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இந்நிலையில் புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், அந்தக் கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போய்விடும். இதனை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் உணர்வார்கள் என்று கெக்கிராவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்….

Read More

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கொள்கை தயாரிப்பு

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கொள்கையொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். சிறுவரின் பாதுகாப்பு பொறுப்பு குறித்தும் தற்போது ஆலோசித்து வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்த அரசு  நோன்பு காலங்களில் கிறீஸ் பூதங்களை ஏவி முஸ்லிம்களை அச்சுறுத்தியது!

‘கடந்த நோன்பு காலங்களில் மஹிந்த அரசாங்கம் கிறீஸ் பூதங்களை ஏவி விட்டு முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை சீர்குலைத்து அச்சுறுத்தியதை எவரும் மறந்து விட முடியாது’ என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார். ‘மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்காக வீதிகளில் இறங்கி மண்டியிடுவதானது அவருடைய பதவி மோகத்தையே காட்டுகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சாய்ந்தமருதில் பேரிச்சம்பழம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

“அலி பாபாவின் திருடர்கள், அரசை கைப்பற்ற முயற்சி”?

அலி பாபாவின் திருடர்கள் அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆட்சி செய்தவர்கள் இவ்வாறு ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட திருடர்கள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மரத்தை வெட்டி விட்ட போதிலும் வேர்கள் இன்னமும் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கப்படுவதாகத்…

Read More

நூடில்ஸில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் உரிய பரிசோதனை – றிஷாத் பதியுதீன்

இலங்கையில் உள்ள நூடில்ஸ் உணவில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் வெளியான செய்தியனையடுத்து இத தொடர்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தியாவில் மெகீ நுாடில்ஸ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,அதனை இலங்கைக்குள் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் தாம் சுங்க பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார். நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் –…

Read More

ஐ. தே. க. ஆட்சியில் புதிய அரசியல் யாப்பு – கபீர் ஹாசிம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் வாபஸ் பெறப்பட வேண்டும். அடுத்த பாராளுமன்றத்தில் ஐ.தே.க. ஆட்சியின் கீழ் 20 தாவது திருத்தத்தை நிறைவேற்ற முன்னுரிமை வழங்கி நிறைவேற்றுவதாக ஐ. தே. க செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார். மக்கள் ஆணையுடன் உருவாகும் அடுத்த ஐ. தே. க. ஆட்சியில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்….

Read More

அமைச்சர் றிஷாதின் 20 தொடர்பிலான உரையின் தொகுப்பு

( தொகுப்பு-அபூ அஸ்ஜத் ) பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம்,   கௌரவ குழுக்களின் பிரதி தலைவர் அவர்களே !  இன்று அறிமுகம் செய்ய முயற்சிக்கின்ற தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவ முறையினுல் தொகுதிவாரித் தேர்தல் முறையாகும்.  வர்த்தமானி பிரகடனத்தின் படி 200 பிரதிநிதிகள் மாவட்ட விகிதசரததினுாடாகவும், 37 பேர் தேசிய பட்டியலினுாடாகவும்  நியமிக்கப்பட பிரேரிக்கப்படடிருகின்றது. அதே நேரம் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படுகின்ற 200 பேர்களுள் தொகுதி ரீதியாக தெரிவுசெய்யபடுகின்ற 145 பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குவர்.  அதாவது ஒரு…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி – ஜனாதிபதி சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் வழிகாட்டலில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் முயற்சியினால் பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் பாரிய சுதந்திர வர்த்தக வலயமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியல் பூங்காவும் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றிகரமாகபூர்த்தியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் அழைப்பின் பேரில் வருகை தந்த…

Read More

பிரதமரின் நேற்றைய பாராளுமன்ற உரை

20ஆவது திருத்தச்சட்டமூலத்தை தாமதப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களைப் பெற்று தேர்தல் மறுசீரமைப்பொன்றுக்குச் செல்லவே 20ஆவது திருத்தம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துகின்றோம். இந்த விவாதத்தில் ஆராயப்படும் விடயங்களின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அடுத்த நகர்வுக்குச் செல்லவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் =நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ்த்…

Read More

அரசியலில் ஓய்வு பெற தயார் இல்லை – மஹிந்த

அரசியலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் முயற்சி எடுத்த போது தான் அதற்கு தயார் இல்லை என அவர் கூறியுள்ளார். ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More

12 ஓ.ஐ.சிகளுக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

 நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை

சகல வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலிருந்து சேகரிக்கப்படும் நூடில்ஸ்களின் மாதிரிகள் கைதுதொழில் தொழிற்நுட்ப நிறுவகத்துக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Read More