Main News
நாட்டில் ‘எயிட்ஸ்’ அதிகரிப்பு!
ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார மற்றும் நலனிருப்பு தொடர்பில் இளைஞர்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் காரணமாக அமைகின்றன. அத்துடன், அதிக வயதுடைய பெண்கள்,…
அப்துல் கலாம் இன்று பிரதமர் ரணிலுடன் மதிய போஷனம்
இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கு இன்று மதிய போஷன விருந்தளிக்கிறார். அப்துல் கலாம், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அழைப்பையேற்று மூன்றுநாள் விஜயமாக நேற்றிரவு இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரி – அப்துல்கலாம் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார். சம்பிக்க ரணவக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சீரழியும் முஸ்லிம் யுவதிகள்
அண்மைக்காலமாக பல்வேறு சமூகப்புறழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம்களின் மத்தியிலேயே அதிகரித்த சதவீதத்தில் காணப்படுகிறன. இதன் பின்னணி என்ன? இதை சமூக அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையினரை இலக்கு வைத்து ஊக்கப் படுத்தப்படும் நடவடிக்கையென பொதுவாக கூறுவிட்டு இருக்க முடியாது. வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஹசன் புஹாரி என்ற அன்பர் ஒரு சிறிய சம்பவத்தை எமக்கு அனுப்பியுள்ளார். குறைந்தபட்சம் பெற்றோராவது தமது பிள்ளைகளில் கவனம் செலுத்த இந்த சம்பவங்கள் பகிரப்பட வேண்டுமென…
கரு போட்டியிடமாட்டார்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய, கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்க போவதாக அறிவித்துள்ளார்.
மஹிந்த தேசப்பிரிய ஓய்வு!
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது கடமையிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் – சரத் பொன்சேகா
எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக இந்த நிகழ்வு இடம்பெற்றது. 10 அமைப்பாளர்கள் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.
சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்க வர்த்தகக் குழு சீனா பயணம்!
சீனாவில் நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்பதற்காக உத்தியோக பூர்வ வர்த்தக குழுவொன்று (23-06-2015) சீனா பயணமாகி உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் தெரிவித்தார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் இலங்கையின் மிளகு மற்றும் வாசனைத்திரவியங்கள் ஏற்றுமதியாளர்கள் பங்குபற்றுவதாகவும் மரைக்கார் தெரிவித்தார். சீனாவில் நடைபெறும் வாசனைத்திரவியங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றவதற்காக உயர்மட்ட வாசனைத்திரவிய ஏற்றுமதியாளர்கள் குழுவொன்று மாறுபட்ட சந்தை வாய்ப்புக்களை பற்றி கண்டறிவதற்காகவூம் தெற்கிழக்காசிய…
நூடில்ஸ் விளம்பரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!
நூடில்ஸ் வகைகளுக்கான விளம்பரங்கள் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நூடில்ஸ் விளம்பரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. . நுகர்வோரின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு நுகர்வோர் அதிகாரசபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. நூடில்ஸ் வகைகளில் நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முறை மாற்றம்; சிறுபான்மையை பாதிக்கக் கூடாது! சோபித்த தேரர் அதிரடி
உத்தேச தேர்தல் சீர்திருத்தம் அடங்கிய இருபதாம் சீர்திருத்தினால் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள் பாதித்து விடக்கூடாது எனவும் அதனை நிறைவேற்றுவதில் அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை என்றால் பாராளுமன்றத்தினை இன்றோ அல்லது ஒருவராரத்திலோ கலைத்துவிட்டு பொது தேர்தலுக்கு செல்லுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்துவெளியிட்ட அவர் எதிர்வரும் பொது தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக தேர்தல் சீர்திருத்தை நிறைவேற்றுவதை பிரதான கட்சிகள் முன்னிறுத்தி சிறுகட்சிகள் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படாத வகையில் நிறைவேற்ற வேண்டும்…
510 பயணிகளுடன் இலங்கையில் அவசரமாக இறங்கிய எமிரேட்ஸ்
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து டுபாய் நோக்கி 510 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த எமிரேட்ஸ் வகை விமானமொன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ பயணிகளை ஏனைய விமானங்களில் டுபாய்க்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கிலும், கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்கள் – அமைச்சர் றிஷாத்
வடக்கிலும்,கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கு அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறினார். அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும்,இலங்கைக்கான அமெரிக்க பதில் துதுவர் அன்று சீமானுக்கும் இடையில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இடம் பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார் மேலும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் – அதே வேளை இலங்கையின் நுகர்வு பொருட்களை அமெரிக்க கொள்வனவு…
