Main News
ஆட்சியமைக்க விடமாட்டேன்: ரணில்
மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீளவும் ஆட்சிப்பீடத்திற்கு ஏற்றவே தற்போதைய பாராளுமன்றம் முயற்சிக்கின்றன. எனவே மக்களின் ஆணையை இழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் இனிமேல் ஏற்படுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது பெறப்பட்ட புரட்சிகரமான வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு புதிய பாராளுமன்றம் அவசியமாகும். எனவே அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை கருத்திற் கொண்டாவது பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றும்…
கல்வி அமைச்சர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு
– முஹம்மது சனாஸ் – மலையக தோட்டப்புற தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாடினார். அதேவேளை, இது தொடர்பில் அகில இலங்கை மக்கள்…
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட இடமளிக்கமாட்டோம்…!
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் குறிப்பிட்டார். நேற்று மாலை கண்டி மடவளை பிரதேசத்தில் அமைச்சர் கிரியால்ல அவர்களின் பாததும்பரை ஹாரிஸ்பத்துவை தொகுதிகளுக்கான முஸ்லிம் இணைப்பு செயலாளராக நியமனம் பெற்ற மடவளை பஸார் அல்ஹாஜ் ஹனீப் அவர்களின் அனுசரணையில் தெரிவு செய்யபட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நிழ்கவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இங்கு மேலும்…
ரமழான் மாதத்தில் தாக்குதல் மைத்திரி கண்டனம்
ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சார்க் வலய அங்கத்தவ நாடொன்றின் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருந்தத் தக்கது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தை சீர்குழைக்க முடியாது என என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்டின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடைய செய்யும் முயற்சியாக இது அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு, மகிழ்ச்சியான செய்தி
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றாக நீக்கப்பட்டிருப்பதாக கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார். இதற்கான முழுமையான ஒத்துழைப் பினையும் அனுமதியையும் வழங்கக் கோரி பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கமைய கடந்த காலங்களைப் போன்று வியாபாரிகள் நடைபாதையில் தமது வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வியாபாரிகள் வழக்கம் போல நடைபாதை வியாபாரங்களை முன்னெடுக்க…
புரட்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை ; பிரதமர்
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தேசிய இளைஞர் முன்னணியின் சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிப்பதி தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை. இந்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு தெளிவான எதிர்காலமொன்றை உருவாக்கிக் கொடுப்பதே இந்நாடு எதிர்கொண்டுள்ள பாரியதும் முதன்மையானதுமான பிரச்சினையாகும். வெளிநாட்டு முதலீடுகளை நம்…
அரசியல் இலாபங்களை எவரும் பார்க்கக் கூடாது – றிஷாத் பதியுதீன்
மாணவ சமூகத்திற்கான கல்வியினை பெற்றுக் கொடுக்கின்றபோது அதில் அரசியல் இலாபங்களை எவரும் பார்க்கக் கூடாது, கடந்த அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்ததன் படியால் இந்த மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கு மஹிந்தோதய ஆய்வு கூடங்களை கொண்டுவர முடிந்தது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இதன் மூலம் பிரதேசத்தின் கல்வி துறை போட்டித்தன்மைக் கொண்டதாக மாறும் என்றும் கூறினார். மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்கையன்குளம் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வு…
மைத்திரி படுகொலை முயற்சி வழக்கின் தீர்ப்பு இன்று
பொலன்னறுவையில் வைத்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் வகையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பு இன்று (22) வழங்கப்படும். 2000 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரொருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 15 வருடங்களாக நடந்துவந்தது. இதன் மீதான தீர்ப்பே இன்று வழங்கப்படுகிறது. பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி…
சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பின்றி 20 திருத்தம் – பிரதமர் உறுதி
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் நேற்று உறுதியளித்தார். 20வது திருத்தம் குறித்த அதிருப்தி களை இச்சந்திப்பில் கலந்து கொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இதன் போதே தன்னை சந்தித்த சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடமே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ்த்…
சிங்கள வாக்குகளால் மட்டும் அரசமைக்க முடியாது – ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார். அதற்கமைய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள பெளத்த, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியமென்றும் அவர் கூறினார். நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி நுவரெலிய புதிய நகர சபை மண்டபத்தில் நேற்று சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தனியாக முன்னணி…
அனைத்து கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க ஒருபோதும் உடன்படமாட்டேன்! பிரதமர் அறிவித்ததாக றிஷாத் பதியுதீன் தெரிவிப்பு
ஏ.எச்.எம்.பூமுதீன் இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.. அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்றும் பிரதமர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற சிறிய மற்றும் சிறுபான்மை கட்சித் தலைவர்களுடான சந்திப்பின்…
என்னமா! இப்படி பண்றீங்களே மா!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு முன்னாள் போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை பாலிநகர் மகா வித்தியாலய மண்டபத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது. இதன்போதே முன்னாள் போராளியொருவர்…
