Main News
தேர்தலில் ஐ.தே.க. தனித்து களமிறங்கும்!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர் தலைமையில் கூடிய செயற்குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அதேவேளை, தேர்தல் தொடர்பிலான முடிவுகள் மற்றும் வேட்புமனு குழுவை நியமிப்பதற்கான அதிகாரங்களை கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
அவதானத்துடன் இருக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கை
உலகின் மிக நலிந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைதிக்கான நிதியம் குழச வெளியிட்டுள்ளது. 178 நாடுகளிடையே நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 34 ஆவது இடத்தை பிடித்துள்ள இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக நலிவுற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தென் சூடான் பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாம்,மூன்றாம், நான்காம் இடங்களை முறையே சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. மிக உயர்ந்த நிலைபேண் தன்மை கொண்ட நாடாக…
‘ஜனாதிபதி மைத்திரியின் இதயம் பலமானது’
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சரவைப் பேச்சாளரும் , அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன பதிலளிக்கும் போது, கேள்வி: அப்படி என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமில்லையா? பதில்: ஏன், இல்லை. அவரும் அவரது குழுவும் நல்லாட்சியின் பின்னால் வரமுடியும். எஸ்.டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்க சாகும் வரை முன்னோக்கி சென்றார். எங்கள் குடும்பமே நாசமாகிவிடும் என்று தெரிந்துகொண்டுதான் நாங்கள் அரசாங்கத்திலிருந்து…
பெரும்பாண்மை இன சகோதரர்கள் அமைச்சர் றிஷாதுடன் இணைவு!
அகமட் எஸ். முகைடீன் அம்பாறை மாவட்டத்தின் தமன, உகன, தெகியத்த கண்டிய, நாமல் ஓயா போன்ற பிரதேசங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாக செயற்பட்ட பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின்பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அரசியல் பயணத்தில் (18.06.2015) இணைந்து கொண்டனர். மறைந்த பெரும் தலைவர் இன மத வேறுபாடு கடந்து தேசிய ஐக்கிய முன்னணியினை உருவாக்கி சகல இனத்தவரையும் ஒரு…
எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்து – இலங்கை மாணவன் சாதனை
மரணத்தை ஏற்படுத்தும் எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற கொழும்பு நாலந்தா கல்லூரியின் ரகித்த தில்ஷான் மாலேவன மாணவன் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். தனது திறமையின் மூலம் இலங்கைக்கு மாபெரும் புகழை ஈட்டித் தந்துள்ள ரகித்த தில்ஷான் மாலேவன மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அம்மாணவனுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவருடைய எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிக்கூறிய ஜனாதிபதி அவர்கள்…
றிஷாத் பதியுதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் சிங்கள ராவய முறைப்பாடு
அமைச்சர் றிஷாத் பதியூதீனை கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு கோரியுள்ளது. சிங்கள ராவய அமைப்பு அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சர் தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டாயத் திருமணப் பட்டியலில் இணைந்தது இலங்கை
பிரித்தானியாவில் குடிபெயர்ந்து வாழும் குடும்பங்களில் கட்டாயத் திருமணம் செய்யும் நாடுகளின் முதல் 10 பட்டியலில் இலங்கை, ஆறாம் இடத்தை வகிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. குறித்த ஆய்வை மேற்கோள்காட்டி, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவை அடுத்து ஆறாம் இடத்தில் இலங்கை உள்ளதாகவும் காட்டாயத் திருமணமானது பிரித்தானியாவில் தண்டணைக்குரிய குற்றமெனவும் என்.டீ.டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாக்கிஸ்தான் 38.3 சதவீதத்துடன் முதலாமிடத்தையும் இந்தியா 7.8 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும் பங்களாதேஷ் 7.1 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் 3 சதவீதத்துடன் நான்காம்…
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க தேசிய கொள்கை!
சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் ஒன்றிணைந்த தேசிய கொள்கை வகுக்கப்படுமென ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்தார். ஜெனீவாவில் ஐ.நா. சபையின் 29 ஆவது அமர்வு ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் இலங்கை சார்பில் ஆரம்ப உரையை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். குடியேற்றகாரர்களை, ஆட்கடத்தல் காரர்களினால் பாதிப்புக்குள்ளானவர்களாக கருதும் இலங்கை அனைத்து சட்டவிரோத குடியேற்றம், ஆட்கடத்தல், கடத்தல் ஆகியவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்…
மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வியில் இனவாதம்?
– றிஹாம் – மேல் மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட நாடகப்போட்டி இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியில் உயர் கல்வி அதிகாரி ஒருவரின் தலைமையில் நேற்று நடைபெற்றது. குறித்த இப்போட்டி நிகழ்ச்சியில் 07 பாடசாலைகள் பங்கு பற்றின. அதில் இரண்டு பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் குறித்த பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றபோதும் அம்மண்டபத்தின் அனைத்து நுழைவாயில்கள், ஜன்னல்கள் குறித்த கல்வி அதிகாரியினால் மூடப்பட்டன. அத்தோடு மூடிய அறையில் அரங்கேற்றப்பட்ட நிகழ்சிக்கு…
பிரதமர் வேட்பாளராக மஹிந்தவுக்கு இடமில்லை: ஜனாதிபதி
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறுத்தமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மைத்திரிபால சிறிசேன தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில், மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆராய ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சுசில் பிரேம் ஜெயந்த, அனுர பிரியதர்சன…
நாளை றமழான் நோன்பு இலங்கையில் ஆரம்பம்
நேற்று, ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத் திலும் தென்படாததால் இன்று ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை (19) ரமழான் முதல் நோன்பை ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள் – கதீப்மார்கள், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள்…
தரம் ஒன்றிற்கு விண்ணப்பங்களை ஜுலை 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவும் – கல்வி அமைச்சு
அப்துல்லாஹ் 2016 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை இவ்வாறான அனுமதியின்போது அரசியல்வாதிகள் தாம் விருப்பிய பிள்ளைகளின் பெயர்ப் பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன்…
