Main News
தேர்தல்கள் ஆணையாளர் இன்று கட்சி செயலாளர்களை சந்திக்கிறார்
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று (02) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
115 ஆசனங்களுக்கு அதிகம் பெற்று ஐ.தே.க. வெல்லும் – லக்ஷ்மன் கிரியெல்ல
இந்த முறைப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 115க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்ளும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு 55 ஆசனங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நாடுபூராகவும் உள்ள விகாரைகளுக்கு சென்று வாக்கு சேர்க்க முயற்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐ.தே.க.வின் தலைமையகத்தில் இன்றுகாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு…
பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் விசாரணை
முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் நிதி குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காணி விவகாரம் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. vk
கல்முனை சாஹிராக் கல்லுாாி; கொழும்புக் கிளையினரின் வருடாந்த இப்தாா்
அஸ்ரப் ஏ சமத் கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் வருடாந்த இப்தாா் வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் கோட்டலில் இச் சங்கத்தின் தலைவா் டொக்டா் சனுாஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு கல்லுாாியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம் துலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினாா். கல்லுாாியின் 80 திட்டங்கள் அடங்கிய 2020 எதிா்காலத்திட்டம் பொறியியலாளா் எம்.சி.எம் பாருக் செயலாளா் தௌபீக் கான் ஆகியோரினால் கல்லுாாி அதிபா் பதுா்த்தீனிடம் கையளிக்கப்பட்டது.
மகிந்த தேர்தலுக்கு வருவது பொருத்தமற்றது; நீதி அமைச்சர்
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த அரசியலுக்கு மீண்டும் வருவது பொருத்தமற்றது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். மேலும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும், புதிய அரசை அமைப்போம் என்றும் முன்னாள் ஜனாதிபதி சூழுரைத்துள்ளார். அவரின் அறிவிப்புத் தொடர்பிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் மீண்டும் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிட்ட சந்தர்ப்பம் இலங்கை வரலாற்றில் இதுவரைகாலமும் இடம்பெறவில்லை. மீண்டும் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிடுவதென்பது ஜனாதிபதி…
க.பொ.த உயர்தரத்திற்கு புதிய அட்டவணை; 309,069 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தயார்
ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 90 ஆயிரத்து 69 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பாடசாலையினூடாக 2 இலட்சத்து 36ஆயிரத்து 72 பேரும் தனிப்பட்ட ரீதியில் 72 ஆயிரத்து 997 பேரும் தோற்றவுள்ளனர். கடந்த வருடத்தை விடவும் இம்முறை சுமார் 12 ஆயிரம் பரீட்சார்த்திகள் அதிகமாக தோற்றவுள்ளனர் என்றும் பரீட்சைக்காக 2 ஆயிரத்து 180 பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை,…
மஹிந்தவின் முடிவு தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தும்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிட எடுத்திருக்கும் தீர்மானம் தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது. மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடனான வெற்றியை இலகுவில் பெற்றுத்தருமென்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பல்வேறு ஊழல் மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை தம்வசம் வைத்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களை மக்கள் நிராகரிப்பது…
பலசேனா நாக பாம்பு தலைதூக்காமலிருக்க, முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் – விஜித்த தேரர்
நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகவும் ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து போட்டியிடுவதைவிட, ஒன்றுபட்டு ஒரே அணியில் போட்டியிடுவதன் மூலம் பலமான சக்தியாக உருவெடுப்பதுடன் பொதுபல சேனாவையும் எதிர்கொள்ள முடியுமென வட்டரக்க விஜித்த தேரர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் உலமா சபை, முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாட உள்ளேன். சிறுபான்மையினரை சீண்ட பொதுபல சேனா இப்போது நாகப்பாம்பு வடிவத்தில் உருவேடுத்துள்ளது. இந்த விசம் நிறைந்த பாம்பு தலைது!க்காமலிருக்க வேண்டுமென்றால் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட அதிர்வு தொடர்பாக ஆராய்வு
கொழும்பு பம்பலபிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு , நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பம்பலபிட்டி பகுதியில் நேற்று மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம் சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய…
மஹிந்த வந்தால் முஸ்லிம்களை பழிவாங்குவார் – ஹரீன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தனது வாய் காரணமாக மீண்டும் ஒரு முறை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மஹிந்த அரசியல் சண்டியராக மாற முயற்சித்து வருவதாகவும், தவறுதலாகவேனும் மஹிந்த ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டில் உள்ள தமிழ் முஸ்லிம் முற்போக்கு கட்சிகளிடம் பழிவாங்குவார் என்பது நிச்சயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த இல்லாமல் போயுள்ளதாகவும், மஹிந்தவுடன் இணைந்து கொள்ள மைத்திரிக்கு தார்மீக ரீதியான உரிமை கிடையாது எனவும் அவர்…
தேர்தல் விசாரணைப் பிரிவு நாளை முதல் இயக்கம்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தேர்தல் விசாரணைப் பிரிவு இன்று முதல் இயங்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தேர்தல் திணைக்களத்தில் இந்த பிரிவு நாளை முதல் இயங்க உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகங்களில் தேர்தல் விசாரணைப் பிரிவு இந்த மாதம் 6ம் திகதி முதல் இயங்க உள்ளது. தேர்தல் விசாரணைப் பிரிவுகள் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அந்தந்த…
சுதந்திர கட்சி என்னை துரோகி என கவனித்தது
நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் தலைவர்கள் அதனை செய்யவில்லை எனினும் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் அதனை செய்து முடித்ததாக அவர் கூறினார். 19வது திருத்தச் சட்டத்தை எப்படியாவது…
