Main News
அல்லாஹ்வின் துணையால் அச்சம் கொள்ளத் தேவையில்லை..
சனாஸ் முஹம்மத் கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் இன்று 3000 யுவதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,முன்னாs; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றத்தின் தேவையுணர்ந்து எமது சமூகத்தின் நன்மைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அனைத்து மக்கள் பிரதி நிதிகளுடன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்த போது இந்த தையல் இயந்திரங்கைளை வறிய…
‘வழிபாட்டு தலங்களில் அரசியல் உரை நிகழ்த்தத் தடை’
பொதுத் தேர்தல் கால எல்லைக்குள் ஆலயம் விகாரை, தேவாலயம், பள்ளிவாசல் போன்ற சமய ஸ்தாபனங்களில் அரசியல் கூட்டங்கள் நடாத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதி முறைகள் இம்மாதம் 6ம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். அரச உற்சவங்களின்போது தேசியக் கொடி, மாகாணக் கொடி போன்றவைகளை ஏற்றுவதல் லமால் ஏனையவைகளைத் தேர்தல் காலத்தில் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். பாடசாலை உற்சவங்களிலும் கூட அரசியல் உரை நிகழ்த்துவது தவிர்க்கப்பட வேண்டு மென்பதுடன் அரசாங்க அபிவிருத்தி…
ஜனாதிபதி சிங்கம் போன்று செயற்பட வேண்டும் – சோபித தேரர்
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எவருக்கும் அடிபணியாமல் நாட்டில் நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமென மாதுலுவாவே சோபித தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டார். நாட்டின் சட்டத்தில் எவரும் தலையிடாதவாறு நாட்டின் நலனுக்காக சகலதையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட மாதுலுவாவே தேரர், எவருக்கும் தலைவணங்க வேண்டிய அவசியமில்லையெனினும் ஜனாதிபதி அவர்கள் சிங்கம் போன்று தலைநிமிர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மாக்கும்புரவில் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியுடன்…
10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் -ரணில்
எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் தொழில் வாய்ப்பு வழங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தின் கீழ் குளியாப்பிட்டியவில் ஜேர்மன் வொக்ஸ்வேகன் வாகன உற்பத்தி தொழிற்சாலையொன்று நிறுவப்படும். இந்த தொழிற்சாலையில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் அதேநேரம், இதன் மூலம் 10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும். மேற்படி வெளிநாட்டு முதலீட்டுக்காக அரசாங்கத்தின் பொரு ளாதாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இத்தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த…
மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கியது மிகப் பெரிய துரோகம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானமானது, அண்மையில் செய்த மிகப் பெரிய துரோகம் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பிரதம செயலாளர் டில்வில் சில்வா இதனைக் கூறியுள்ளார். ஜனவரி 8ம் திகதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்களின் நோக்கம் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பது மட்டுமே என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார். எனினும்,…
இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேறிய இளம் நடிகர்!
கடந்த சில நாட்ககளுக்கு முன் இளம் நடிகரை ஈர்த்த இஸ்லாம் தலைப்பில் ரங்கூன், போடா ஆண்டவனே நம்ம பக்கம் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டுள்ள விக்னேஷ் எனும் இளம் நடிகருக்கு திருக் குர் ஆன் வழங்கிய செய்தியை பதிவிட்டு இருந்தோம் ! வாங்கிச் சென்ற குர் ஆனை கதவைத் தாழிட்டு படித்து வந்து இருக்கிறார்! ஒருநாள் கதவை மறந்து தாழிடாமல் படித்த போது அவருடைய தாய் வந்து பார்த்து கத்திக் கதறி வீட்டில் பிரச்சனையாகி…
மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் அரசியலுக்கு திடீரென நுழைந்தவன் அல்ல, எனக்கு 49 வருடகால அரசியல் அனுபவம் காணப்படுகிறது. கட்சி தொடர்பான தீர்மானங்களின் போது ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற அமைதிப் புரட்சிக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். அந்த…
மனிதனை கொன்ற ‘ரோபோ’
மனித மூளையின் அரிய கண்டுபிடிப்பு ‘ரோபோ!’ ஆனால் அதுவே, வருங்காலத்தில் மனிதனின் அழிவிற்கும் காரணமாகக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதை நிரூபிப்பது போல், ஜெர்மனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிராங்க்பர்ட் அருகே, பானட்டால் பகுதியில் உள்ளது, ‘வோக்ஸ்வேகன்’ நிறுவனத்தின் கார் தொழிற்சாலை. இங்குள்ள, ‘அசெம்பிளிங்’ பிரிவில், பல்வேறு வேலைகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, இரும்புத் தகடுகளை எடுத்து, அடுக்கி வைக்கும் பணியையும் வழங்க, நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக, ரோபோவை தயார்படுத்திக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர்….
சு.க. தலைவர் என்றவகையில், நான் எடுக்கும் முடிவுகள் மிகத் தெளிவானவை – மைத்திரி
ஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை ஒருபோதும் மீறப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக வீதியின் கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான வீதியை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 49 வருட அரசியல் அனுபவத்தைத் தான் கொண்டுள்ளதாகவும், திடீரென அரசியலுக்குள் பிரவேசிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தன்னால் எடுக்கப்படுகின்ற முடிவுகள் அனைத்தும் மிகத் தெளிவாக எடுக்கப்படுவதாகவும்…
‘மொஹமட் ஷியாம் கொலை’ சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரி
பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தனவுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிரியந்த சஞ்சீவவுக்கு சாட்சி வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாட்சிகாரர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஏழு பேர் பெயரிடப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் வழக்கிற்கான சாட்சிகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி உட்பட 07 பேரை அழைப்பதா இல்லையா என்பதனை நீதிபதியின் தீர்ப்புக்கு பின்னரே தீர்மானிக்கப்படும். சமீபத்தில்…
மஹிந்த ராஜபக்ஸ உலக நீதிக்கு, முரணாக செயற்படுகிறார் – அமில தேரர்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் பலத்தை மீண்டும் காண்பிக்க வேண்டும் என புதிய தலைமுறைகள் அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது. ”ஜனவரி எழுச்சியை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில், மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் இந்த விவாதம் நடைபெற்றது. ”ஜனவரி எழுச்சியை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில், மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் இந்த விவாதம் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உலக நீதிக்கு முரணாக செயற்படுகின்றார் என இதன் போது கலாநிதி தம்மபர அமில தேரர்…
பேஸ்புக் லோகோ மாற்றம்?
பேஸ்புக் தன்னுடைய லோகோவில் மாற்றம் செய்துள்ளது. 24 மணி நேரமும் பேஸ்புக்கே கதியாக கிடந்தாலும் நாம் லோகோ மாற்றத்தை கவனித்திருக்க மாட்டோம் என்பதால், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு படம் வரைந்து பாகங்களின் குறிப்புடன் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுக! facebook என்ற எழுத்துகளில் மிகச் சிறிய அளவில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழுத்தின் அளவு ஏறக்குறைய ஒரே அளவாக உள்ளது. அதேசமயம் மொத்த அளவு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. a, e, b,…
