Main News
தர்கா நகரில் நடந்தது என்ன..?
தர்கா நகரில் 30.06.2015 சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளது இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்துசென்று பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தர்கா நகர் பிரதேசத்தில் கடந்தவருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு அருகில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றபோது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலி பொட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளனர். இதனை நிறுத்துமாறு முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்தும் நிறுத்தாமையினால் முஸ்லிம் இளைஞர்களினால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்….
முஸ்லிம்களுக்கு எமது கட்சியில் இடமுண்டு -ஞான சார தேரர்
முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் புத்திஜீவியாக இருந்தால், எமது கட்சியில் அவர்களுக்கு இடமுண்டு என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நாட்டில் 2500 வருட காலமாக பௌத்தர்களாக இருந்துகொண்டு, எமது உரிமைகளை புதையல் போன்று பாதுகாப்பதற்கு அறிஞர்களால் தான் முடிந்தது. இந்தப் பணிக்காக ஒரு முஸ்லிம் அல்லது தமிழ் புத்தஜீவி முன்வருவாராக இருந்தால் அவருக்கு எம்மிடத்தில் இடமுண்டு. எமது கட்சியில் பொது என்பது புத்திசாலிகளையே குறிப்பிடுகின்றது. நாகப் பாம்பு எமது சின்னமாக நாம்…
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் 600 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதனால் குறித்த முறைபாடுகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் மேற்கொள்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தின் போது பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் வேறு சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகள்…
மீண்டும் மஹிந்த வந்தால் அழிவு நிச்சயம் – சம்பிக்க
சர்வாதிகார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜனநாயகத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் மஹிந்தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் முட்டாள்களாக செயற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்பட்டிருக்கும் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளாக இந்த நாடு பல சவால்களுக்கு…
பொது பல சேனா ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டி?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna(BJP)] என்ற கட்சியில் ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சில தமது பெயர்களையும் , செயலாளர்களையும் மாற்றியுள்ளன. தேர்தல் செயலாளர் காரியாலயத்தின் தகவலின்படி, தேசப்பிரிய ஜாதிக்க பெரமுன என்ற பெயரில் இருந்த கட்சி சிறிலங்கா ஜாதிக்க பலய என பெயர்மாற்றம் செய்யபபட்டுள்ளது. அதன் செயலாளராக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழுத்தலைவர் பியசிறி…
அம்பாறையில் ACMC, SLMC க்கு சவாலாக அமையும் -அமீர் அலி
வீரகேசரி வாரவெளியீட்டில் இன்று (28) பிரசுரமான சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த எம்.எஸ். அமீர் அலி அவர்களின் பேட்டியின் ஒரு சிறு பகுதியை கீழே தருகிறேன். அவர் தெரிவித்துள்ள கருத்து. கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையுமா? பதில் : பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கு…
மஹிந்தவின் மறக்க முடியாத மூவரும்; றிஷாதின் உரிமைப் போராட்டமும்
ஏ.எச்.எம்.பூமுதீன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் இன்றைய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் ரீதியான எதிரும்புதிருமான கருத்துக்கள் தற்போது தேர்தல் களத்தை சூடாக்கிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிள்ளையார் சூழி போட்டு இன்றைய அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார். நான் சாகும் வரை மறக்க முடியாதவர்கள் என மகிந்த ராஜபக்ச மூவரை குறிப்பிட்டு கடும் தொணியில் வெளிப்படுத்தியுள்ள கருத்து அரசியல் , சமுக மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் பாரிய சிந்தனையும்…
என் சமூகம் தோற்றுபோய்விடக் கூடாது! – றிஷாத் பதியுதீன்
-சனாஸ்முஹமத் – புத்தளத்தில் ரிஷாத் பதியுதீன் சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைகள் மறுதலிக்கப்பட்டதனால் தான் இலங்கையில் ஆட்சி மாற்றங்களை அந்த சமூகத்தினர் ஏற்படுத்த முனைந்தனர் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தமது வாழ்வை அலங்கரிக்கும் எந்தெவொரு அரசியல்வாதிகளும் இறைவனிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார். புத்தளம் உலுக்காப்பள்ளம் பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற பாதை அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக…
குருடர் முன் பிச்சைகேட்டு செவிடன் காதில் சங்கு ஊதுகின்றஅரசியல் என்னிடம் இல்லை!
இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக எவ்வளவோ பிரச்சனைகள் வந்தும் முஸ்லிம் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பதுஏன்? என்றுகேள்வி எழுப்பினார் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன். சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பானமுக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று முசலியில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்! ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் போல் நானில்லை.ஊடகங்களில் படம் காட்டவும் பொய்யான பிரதேசவாதம் கூறி வாக்களித்த மக்களை…
ஞானசார தேரரை உடனடியாக கைது செய் – அஸ்வர்
நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்ட விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு அரசாங்கத்திற்கு அருகதையில்லை. ஆகை யால், தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வண க்க வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்தார். முன்னாள் ஆட்சியின் போதே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக கூறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய முஸ்லிம்களுக்கு, இறுதியில் ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது….
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது BREAKING NEWS
பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஐ.தே.க.வின் மடியில் படுத்து சு.க தாலாட்டு கேட்காது: மஹிந்த
ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் படுத்து தாலாட்டு கேட்கும் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றிரவு இரகசியமான முறையில் சந்தித்துவிட்டு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு கூடியிருந்த சு.க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் நேற்று இரவு, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் பிரசன்ன…
