Headlines

தேர்தல்கள் ஆணையாளர் இன்று கட்சி செயலாளர்களை சந்திக்கிறார்




தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இன்று (02) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *