Main News
ஹம்பாந்தோட்டை மக்களை மஹிந்த காட்டிக்கொடுத்து விட்டார் – சஜித்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களை மறந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் வீரகெட்டியவில் இன்று இடம்பெற்றது. ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
மஹிந்தவுடன் ஒரே மேடையில் இருக்கமாட்டேன் – மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தாங்கள் பெரும் கவலையடைவதாகவும் மனம் குழம்பியுள்ளதாகவும் முன்னணி சிவில் அமைப்பின் பிரதிநிதிக் குழுவொன்று ஜனாதிபதியிடம் நேற்று இரவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி காரியாலயத்தில் கடந்த இரவு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் காமினி வியங்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி. சமன் ரத்னபிரிய, ஜோஸப் ஸ்டாலின், தர்மசிறி பண்டாரநாயக்க, ரவி ஜெயவர்தன ஆகியோர் உட்பட தம்பர அமில தேரரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி அலுவலகத்தின்…
நீதிமன்றில் ஆஜராகாத பொது பலசேனா பிக்குகளுக்கு பிடியாணை
கடந்த அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ரிஷாத் பதியுத்தீன் இருந்த போது அவரது அமைச்சிற்குள் பலாத் காரமாக நுழைந்து குழப்பம் விளை வித்த சம்பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் இரு பிக்குகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சமப்வம் தொடர்பில் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த 6 பிக்குமார்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக வழக்குகளுக்கு ஆஜராகாத 4 ஆவது மற்றும் 5 ஆவது சந்தேக நபர்களான பிக்குகளையே கைது செய்ய…
வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிப்பு
வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ளார். வாரியபொல நீதிமன்றமே அவரை குற்றவாளியாக இனங்கண்டது. தம்மை, ரொபட் தசன்லேகே சந்திர குமார என்ற இந்த இளைஞர், கேலி செய்ததாக கூறி திலினியால் வாரியபொல பேரூந்து நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டார். இந்த தாக்குல், சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பிரசாரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றபோது குறித்த இளைஞரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்ற அடிப்படையிலேயே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கான தண்டனை தீர்ப்பு…
உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்
இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் சிவிலியன் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள்…
மயானமாக மாறிய நாடாளுமன்றம் – ரி.பி ஏகநாயக்க
அண்மைக் காலத்தில் பொரல்ல மயானமும் நாடாளுமன்றமும் ஒன்று போல் மாறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. பி ஏகநாயக்க தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் நாடாளுமன்றம் பொரல்ல மயானம் போன்று இருந்ததுடன் நாட்டு மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அம்பாறையில் அ.இ.ம.காவின் வாக்குகள்: புலனாய்வுப் பிரிவின் இரகசிய தகவல் கசிவு
முகம்மட்; அன்சார் – இறக்காமம் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக களமிறங்கவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கட்ட மக்கள் செல்வாக்கு சுமார் 25 ஆயிரம் என புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது. புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அரசியல் விவகாரத்தை கையாளும் பிரிவின் அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறிப்பாக 1994ம் ஆண்டுகளுக்கு பின்னர் முகாவின் அசைக்க முடியாத…
பொன்சேகா வேட்புமனு தாக்கல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
UPFA யில் போட்டியிட கைச்சாத்திட்ட விமல், வாசுதேவ, பந்துல, டலஸ் அழகப்பெரும..
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கது. மகாவலி கேந்திரத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது. இதுவரை விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும…
இது ஜனாதிபதி,மைத்திரியின் சாபம்
பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் காகங்களாகவும், நாய்களாகவும் பிறப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தின் 125ம் ஆண்டு பூர்த்தி நிகழ்வினை முன்னிட்டு இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் நாய்கள், காகங்களாக பிறப்பார்கள் என நிசங்கமல்ல ஆட்சிக் கால ஓலைச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஓலைச் சுவடி இன்றைக்கும் பொருத்தமானது என கருதுகின்றேன். இதனால் குறித்த ஓலைச் சுவடியை அரசாங்க…
இலங்கைக்கு மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகை
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. 2015 ஜுலை முதல் இது நடைமுறைக்கு வருவதுடன் ஏற்கனவே 2013 ஜுலை நிறைவு பெற்றிருந்த காலத்திலிருந்து 2015 வரையில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும் ஜீ. எஸ். பீ. வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த…
பிரசன்னவுக்கு வேட்புமனு கிடைக்காவிட்டால்; தனியாக கேட்பேன் – மஹிந்த
-அஸ்ரப் ஏ சமத்- கம்பஹா மாவட்டத்தில் பாரளுமன்றத் தோ்தலில் போட்டியிருந்த மேல் மாகாண முதலமைசசா் பிரசன்ன ரனதுங்கவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீக்கியமைக்கு எனது எதிா்ப்பைத் தெரிவிக்கின்றேன். மீண்டும் பிரசன்ன ரனதுங்கவின் பெயா் உள் வாங்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் எனது அணியிடன் வேறாக கேட்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாா். பிரசன்ன ரணதுங்கவின் 2 சகோதரா்கள் ஏற்கனவே கம்பஹாவில் தோ்தல் குதிக்கின்றனா் பிரசன்ன ஏற்கனவே முதலமைச்சா்ராக இருப்பதால் சந்திரிக்கா அவரின்…
