Headlines

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியா – இலங்கை இடையே பாலம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய  மத்திய அரசு  ஆரம்பிக்கவுள்ளது. 22 ஆயிரம் கோடி ரூபா செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும் கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்படவுள்ளது. டில்லியில் நேற்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து தொடர்பான  மாநாட்டு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய கப்பல் மற்றும் வீதி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கருத்துத் தெரிவிக்கையிலேயே…

Read More

மஹிந்தவின் பணம் டுபாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் உள்ள பணம் டுபாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “நான் மீண்டுமொரு முறை பொறுப்புடன் சொல்கிறேன். மகிந்த ராஜபக்ஸ குடும்பம் மாத்திரம் குறைந்த பட்சம் 18 பில்லியன் டொலர்கள் திருடி வெளிநாடுகளில் மறைத்து வைத்துள்ளனர். டுபாயில் மகிந்தவின் பணம் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை…

Read More

ஞானசார தேரர் களுத்துறையில் போட்டி….

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞான சார களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என களுத்துறை மாவட்டத்தில் இருந்து பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் களுத்துறையில் போட்டியிடுவார் என  பொது பல சேனாவின்  அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். முன்னதாக ஞான சார தேரர் கண்டி அல்லது குருநாகலையில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த நிலையில் களுத்துறை மாவட்டத்தில் இருந்து பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமையை கருத்தில் கொண்டு…

Read More

“மஹிந்தவுக்கு  வேட்புமனு, இறுதியில் எந்த மாற்றமும் இடம்பெறலாம்”  

-எம்.எஸ். பாஹிம்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட போதும் ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவு எடுப்பார். இறுதி நேரத்தில் வேட்பு மனுவில் எந்த மாற்றமும் இடம்பெறலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை வழங்கியுள்ளோம். இதற்கு மாற்றமாக மோசடி குற்றச்சாட்டுள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் சு.க.விலிருந்து விலகுவதா மாற்று முடிவு எடுப்பதா என்பது…

Read More

அளுத்கம கலவரம் ; பொலிஸாருக்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி

2014ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி இடம்பெற்ற அளுத்கம கலவரத்தின் போது பொலிஸார் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவினால் இந்த மனுக்கள் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. தர்கா நகரினைச் சேர்ந்தவர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி…

Read More

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் – ரணில் உறுதி

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்க ரணில் விக்கிரமசிங்க உறுதிமொழி வழங்கியுள்ளார். சற்றுமுன்னர் சிறிகொத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி தனக்கு வழங்கப்பட்டதாக ஆசாத் சாலி இணையத்திடம் தெரிவித்தார். முழு நாட்டிற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காகவே தனக்கு இவ்வாறு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக சொன்ன ஆசாத் சாலி, ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்த கலந்துரையாடலில் ரவி கருணாநாயக்கா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் உடனிருந்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இதுதொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி…

Read More

பெரோசா முசம்மில் வேட்பு மனுவில் கைச்சாத்து

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சியில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பெரோசா முசம்மில் இன்று சிறிக்கொத்தவில் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டாா். அருகில் பெரோசாவின் கணவா் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மில்  மற்றும் ஆதரவாளர்கள் காணப்படுகின்றாா்.

Read More

ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது நோக்கம்: மைத்திரி

2020 ஆம் ஆண்டில் அரசின் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும்போது ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது அரசின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹலால் வரியின்றி வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க முடியாது என கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் இருந்து வந்த கருத்து இந்த நாட்டை மிகப்பெரும் தேசிய அழிவை நோக்கிக் கொண்டு சென்றுள்ளதாகவும் எனவே ஹலால் வரி வருமானத்தை நீக்கி திறைசேரியை பலப்படுத்துவதை தமது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதி…

Read More

ஐ.தே.கவுக்கு ஆதரவு அதிகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் ஆதரவு வழங்கவுள்ள அமைப்புகளின் எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஐக்கிய தேசிய கட்சி பரந்த கூட்டணியாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும். எனினும் யானை சின்னத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாதென பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். தேர்தல் சின்னமாக யானையை பயன்படுத்துமாறு கட்சிக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் மற்றும் கட்சிகள் அனைத்திடமும் கோரிக்கை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்….

Read More

தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கோத்தபாய

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு யோசனைகள் கிடைத்தன. எனினும், நான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளேன். ஆனால், எதிர்வரும் காலங்களில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு என்னை நான் அர்ப்பணிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜொன்ஸ்டன், மகிந்தானந்த , ரோகித்த, பிரசன்ன போன்றோர் வேட்பு மனு தாக்கல்

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சா்களான ஜொன்ஸ்டன், மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த மற்றும் வசந்த விஜயவா்த்தன மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரனதுங்க ஆகியோா்களுக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் நிதிமோசடிகள் ஈடுபட்டாா்கள் எனவும் இவா்களுக்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்திருந்தும் நேற்று இவா்கள் வேட்பு மனுவில் கைச்சாா்த்திட்டுள்ளனா். வாஸ் குணவா்த்தன, மேர்வின் சில்வா, துமிந்த சில்வா ஆகியோறுக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்படவில்லை

Read More

தேசிய பட்டியலில் பௌஸி – மைத்திரியினால் பரிந்துரை

சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பௌஸி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் முன்னள் அமைச்சர் பௌஸி நியமிக்கபட்டுள்ளதாக சுதந்திர கட்சியிடமிருந்து ஜப்னா முஸ்லிமுக்கு தகவல்கள் கிடைத்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பௌஸி தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். வழமையாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பௌஸி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More