Main News
அகலக் கால் பதிக்கின்றாரா அமைச்சா் றிஷாத்!
அஷ்ரப் ஏ சமத் வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு தோ்தல் குதிக்கின்றனா். இந்த வேட்பாளா் பட்டியலில் அ.இ.ம.கா. முத்த உறுப்பினரும், முசலிப் பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான டபிய்யு. என் எஹியாக்கான் அத்துடன் சிங்கள சமுகத்தில் 2 வேட்பாளா், தமிழ் சமுகத்தில் இருந்து 5 வேட்பாளா்கள் இந்தப் பட்டியலில் போட்டியிடுகின்றனா். இதேவேளை, அ.இ.ம.கா, ஜ. தே.கட்சியின் யாணைச்…
“கல்குடா பா. உ. பதவியை தக்கவைக்க தயார்”
– அனா – மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு தங்கலாலான அனைத்து உதவிகளையும் தாங்கள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம் என்று வாழைச்சேனை ஹைராத் ரான்ஸ்போட் நிருவாகிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சரமான றிஸாட் பதியுதீன் மற்றும் உயர் பீட உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை ஹைராத் ரான்போட் நிருவாகத்திற்கும் அகில இலங்கை…
பள்ளிவாசல் மீது தாக்குதல்!
ஏறாவூர் தௌஹீத் ஜமாத்திதிட்குரிய -மீராகேணி – பிரதான வீதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளிவாசல் மீது நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்று மேட்கொள்ளப்பட்டுள்ளது. ஏறாவூர் சதாம் ஹுசையின் பிரதேசத்தில் அமைந்துள்ள – அரபிக் கலாசாலை ஒன்றில் இருந்து வந்தவர்களே இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் – ரணில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை அவருக்கு கட்சியின் முழு அதிகாரங்கள் இருக்கவில்லை. எனவேதான் அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அவர் தமக்கு பின்னால் உள்ள சூழ்ச்சிகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கினாலும் மைத்திரிபால சிறிசேன, பொதுத்தேர்தலில் எந்தக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் என்று ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மகிந்தவை தோற்கடிக்க மைத்திரி ஆதரவு அணி ஐ.தே.கவுடன் இணைவு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணி உதயமாகியுள்ளது. ஐ.தே.கட்சியை பிரதானமாக கொண்ட இக் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய , சிறிலங்கா சுதந்திர கட்சியிலுள்ள மகிந்தவிற்கு எதிரானவர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாதுளுவாவே சோபித தேரரின் சமூக நீதிக்கான அமைப்பு உள்ளிட்ட 40ற்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களும் உள்ளடங்குகின்றது. ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கியதேசியக்…
சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்….
பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும் பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி திங்கட்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்புமனுக்களை தயாரிப்பதில் ஜனாதிபதி எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தன்னை ஜனாதிபதி பதவியில்…
முன்னாள் பா.உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தேசியப் பட்டிய லில் இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தீர்மா னித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள் ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்ல விரும்பினால், அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளார். நாட்டுக்காக சேவையாற்றிய புலமையாளர்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கே, தேசியப்பட்டியல் முறை கொண்டு வரப்பட்டது…
முன்னாள் அமைச்சர் நவவி றிஷாத் பதியுதீனுடன் இணைவு; புத்தளத்திலும் போட்டி
– ஜமால் – முன்னாள் வட மேல் மாகாண சபையின் அமைச்சர் நவவி இன்று (10)அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இன்று காலை சிறிகொத்தாவுக்கு வருகை தந்த நவவி புத்தளம் மாவட்டத்தில் ஐதேக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார். அரசியலிலிருந்து சிலகாலம் ஒதுங்கியிருந்த இவர் புத்தளம் மாவட்ட மக்களின் நல்லபிப்பிராயத்தை பெற்றவராகவும் அரசியலில் சேவை புரிந்த ஒருவருமாவார். புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் ஏகோபித்த விருப்பத்தின் அடிப்படையில் தற்போது றிஷாத்பதியுதீனுடன் இணைந்துள்ளார்.
ராஜித உட்பட 06பேர் ஐ.தே.க.வுடன் இணைவு
அஸ்ரப் ஏ சமத் நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான ரவி கருநாயக்க – இன்று கொழும்பு 7 ரொஸ்மிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹூசைனின் வீட்டுக்கு இப்தாா் நிகழ்வுக்கு கலந்து கொள்வதாக அறிவித்திருந்தாா். அதற்காக அஸ்ரப் ஹூசைனின் ஊடகவியலாளா்கள் புத்திஜீவிகள் 50 பேரை அழைத்திருந்தாா். ஆனால் அமைச்சா் சரியாக தாமதித்து 7 மணிக்கே வந்து சோ்ந்தாா். என்னை மன்னித்துவிடுங்கள் சரியாக 5-7 மணிவரை அலரி மாளிகையில் ரணில் தலைமையில் – ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்…
இறுதி முடிவு இன்று ஐ.தே.கவுடன் 3 மாவட்டத்தில் போட்டி
– ஏ.எச்.எம்.பூமுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 03 மாவட்டங்களில் போட்டியிட இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 03 மாவட்டங்களிலேயே ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புத்தளம் மாவட்டத்தில் ஐதேக பட்டியலில் அ.இ.ம.கா சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் நவவியும் குருநாகல் மாவட்டத்தில் டொக்டர் சாபியும், அநுராதபுர மாவட்டத்தில் இசாக் ஹாஜியாரும்…
கொழும்பில் நிலத்தடி ரகசிய முகாம்
கொழும்பு சைத்திய வீதியில் ‘புட்டு பம்பு’ எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் ‘கன்சைட்’ எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்க சந்தேக நபர்களை தடுத்து வைப்பதாக குறிப்பிட்டே இந்த இரகசிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த முகாம்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான…
ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடவுள்ள அ.இ.ம.கா.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. குருணாகல், அநுராதபுரம், புத்தளம், மட்டக்களப்பு, வன்னி, களுத்தரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடும். திகாமடுல்லை மற்றும் கண்டி மாவட்டங்களுக்காக தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
