Headlines

வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிப்பு




வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ளார். வாரியபொல நீதிமன்றமே அவரை குற்றவாளியாக இனங்கண்டது. தம்மை, ரொபட் தசன்லேகே சந்திர குமார என்ற இந்த இளைஞர், கேலி செய்ததாக கூறி திலினியால் வாரியபொல பேரூந்து நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டார்.

இந்த தாக்குல், சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பிரசாரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றபோது குறித்த இளைஞரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்ற அடிப்படையிலேயே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கான தண்டனை தீர்ப்பு எதிர்வரும் 29ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *