Headlines

20 பேருக்கு போட்டியிட தடை: ஜனாதிபதி தீர்மானம்

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் 20 பேரின் வெட்புரிமையை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய் இரவு நடைபெற்ற விஷேட சந்திப்பில் இந்த முடிவுகள் எடுக்கபட்டதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக இவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா,…

Read More

அ.இ.ம.கா.வின் இறுதித் தீர்மானம் நாளை

-எம்.எஸ்.எம். ஹனீபா எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக ஆராயும் அரசியல் அதியுயர் பீடம், அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நாளை வியாழக்கிழமை (09) கூடி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய…

Read More

நேற்று ஜனாதிபதி மைத்ரி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் விபரம்….!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முகமாக இறுதி முடிவொன்றை எடுபதற்கான குகிய கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது .குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்ரியும் கலந்துகொண்டுள்ளதாக அரசியில் உயர்மட்ட செய்திகள் மடவளை நியுசுக்கு உறுதிபடுத்தின. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நியமனக் குழுவுடன் நேற்று மைத்திரிபால சிறிசேன விஜேராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார்.இந்தக் கலந்துரையாடலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த, சிறிலங்கா சுதந்திரக்…

Read More

றிஷாத் பதியுதீனுக்கு எதிராக, சிங்கள ராவய தேர்தல்கள் ஆணையாளரிடன் முறைப்பாடு

தேர்தல் காலத்தில் புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடன் இன்று முறைப்பாடு தெரிவித்துள்ளது. புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் சட்டவிரோதமான முறையில் 60 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார். குறித்த நியமனக் கடிதங்களில் கனியமணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் கையொப்பதற்கு பதிலாக பிறிதொருவரின் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது….

Read More

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள்

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார். புகைப்படங்களை போலியான முறையில் பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக அநேகமானவர்கள் முறைப்பாடு செய்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையே இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக…

Read More

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைப்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப் பத்திரங்கள் கிடைத்தவுடன் அவற்றை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சார்த்திகளின் நலன் கருதி உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் புதிதாக மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடப் பிரிவு. மற்றும் பரீட்சை நிலைய…

Read More

சோபித தேரர் விரக்தி!

சமகால அரசியல் நிலவரங்களால் விரக்தியடைந்துள்ளமையால் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விழிப்புணர்வு செய்தேன். நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பினை தொடங்கி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கு வரையில் நடத்தி வந்தேன். நான் எதிர்பார்த்த தேசிய அளவிலான முக்கிய செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமையினால் விரக்தியடைந்துள்ளேன்….

Read More

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கலாம்: ஆட்பதிவு ஆணையாளர்

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 01 ஆம் திகதியளவில் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க பிரதேச செயலாளர் அலுவலகங்கள் செயற்பட வேண்டுமென திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார். புதிதாக அடையாள அட்டை பெற 10,000 பேரே விண்ணப்பித்துள்ளனர். இதில் 9,000 பேருக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விட்டன. ஏனையவை…

Read More

இராமேஸ்வரம் – தலைமன்னார் ரயில் இணைப்பு குறித்து பேச்சு

இராமேஸ்வரம் – தலைமன்னாருக்கு இடையில் ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தான் முன்மொழிந்துள்ளதாக பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஏற்றுமதி மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பில் தான் கலந்து பேசியதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான சிறுதூர படகு சேவைகள் 1966ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது. தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான கடற்பரப்பில் இலங்கையின் எல்லை தூரம் சுமார்…

Read More

டி.யு.குணசேகர பாரிய மோசடியில் ஈடுபட்டு நாட்டு மக்களை ஏமாற்றி உள்ளார்!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் கோப் குழு தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு அதன் முன்னாள் தலைவர் டி.யு.குணசேகர மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகாரம் இல்லாத போது ஊடக சந்திப்பு நடத்தி எவ்வித சட்ட ஆவணம், அறிக்கை இன்றி டி.யு.குணசேகர மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக சிறிகொத்தவில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். இதன்மூலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 22ம்…

Read More

பரகஹதெனிய பள்ளிவாயல் பிரச்சினை; முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு.

பரகஹதெனிய பள்ளிவாயல் “அமைதி” பதாதை மேல் நீதிமன்ற வழக்கு முடிவு கடந்த வருடம் பொதுபல செனாவினால் பெரும் பிரச்சினையை கிளப்பிவிட்ட பள்ளிவாயல் “அமைதி” பதாதை வழக்கு பள்ளிவாயல்களுக்கு சாதகமாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா இது சம்பந்தமாக குருநாகலில் இடம்பெற்ற அவர்களது கூட்டத்தின்போது பள்ளிவாயல் “அமைதி” பதாதை பொலிசாரினால் அகற்றப்படவேண்டும் அல்லது அவர்களினால் அது தகர்த்தெறியப்படும் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் அதனை பொலிசார் அகற்ற முனைந்தபோது பரகஹதெனிய மக்கள் ஒன்றிணைந்து தடுத்ததன் விளைவாக பொலிசார் இதனை…

Read More

நானுமொரு அகதியென்பதால்;வன்னி மக்களின் வேதனையினை நன்கறிவேன் – றிஷாத் பதியுதீன் உருக்கம்

வடக்கில் மீண்டும் ஒரு வகையான இனவாத யுத்தமொன்றுக்கு சில கட்சிகளும்,அவர்களைச் சார்ந்தவர்களும் துாபமிட்டு வருவதால் எமது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வேண்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமிழர்களும்,முஸ்லிம்களும் இலங்கையில் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள்,அதில் இரண்டு சமூகமும் உறுதியாக இருக்கின்றது என்றும் கூறினார். வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி கிராம அதிகாரி பிரிவில் நெடுங்கேணி,சேனைபிளவு,புளியங்குளம் கிராம யுவதிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்வில் அதிதியாக கலந்து…

Read More