Main News
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் -பைசர் முஸ்தபா
அடுத்த வருடம் நடத்துவதற்கு என உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைகள் சுயாதீனமாக இயங்குவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. உள்ளுராட்சித் தேர்தலும் தொகுதி அடிப்படையில் நடத்தப்படுவதே பொருத்தானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டிமல்வத்தை பீட மகாநாயக்கரை சந்திக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.
ஐ.நாவின் அறிக்கைக்கு நாடாளுமன்ற விவாதம் கோருகிறார் வீரவன்ச
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளை ஒன்றை இலங்கையில் நியமிக்குமாறு ஜெனிவா மனித உரிமைகள் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்று கோரப்படவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளை ஒன்றை இலங்கையில் நிறுவுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேநேரம் சீபா உடன்படிக்கை தொடர்பாக தொடர்ந்தும் நாம் எதிர்ப்புகளை வெளியிட விரும்புகின்றோம். எவ்வாறாயினும், சீபா உடன்படிக்கை…
ஆட்சி மாறியிருக்காவிடின் நாடு மோசமடைந்திருக்கும்
ஜனவரி-8இல் இந்த நாட்டில் மாற்றம்ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை மோசமடைந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், மார்ச் மாதம் நடை பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 28ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் முன்னாள் ஆட்சியாளர்கள் பலருக்குப் பயணத்தடை விதிக்கப்படும் நிலைமை காணப்பட்டது. இராணுவப் பிரதானிகள் சிலருக்கும் இப்படியான நிலைமை…
மஹிந்த ராஜபக்ஷவின் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால்
சர்வதேச தரத்திலான விசாரணையையே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை கலப்பு நீதிமன்றம் என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளதே தவிர இது சர்வதேச விசார ணையல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் எமது நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் மற் றும் பல்கலைக்கழகக் கல்வி தொடர்பான அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்திருப்பதாவது, யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை…
இரகசியத் தடுப்பு முகாம்கள்; ஜெனிவாவில் தீவிர ஆராய்வு
இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேசபைக்கு சார்பாக இடம் பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டுகாணாமற்போனோர் விவகாரம் தொடர்பாக நடந்த சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளன.இதில் கலந்துகொண்டகாணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, தனது கணவரை தேடித்தறுமாரு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை…
அமைச்சர் றிஷாத் பதியுதீன் வாழ்த்து
– அமைச்சரின் ஊடக பிரிவு – அம்பாந்தோட்டையில் நடைபெற்ற அகில இலங்கை மட்டத்திலான 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட 15 வயதின் கீழ் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் முதல் சுற்றில் மன்/புத்/றிஷாத் பதியுதீன் வித்தியாலயம் தெரிவாகியுள்ளது. இந்த மாணவர்களின் வெற்றி குறித்து கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொடதெனியாவ சிறுமியின் கொலை: இரண்டு பேர் கைது
கொடதெனியாவ சிறுமியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறுமியின் வீட்டின் அருகில் வசிப்போர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ——————————————- கொட்டதெனியாவையில் சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான மற்றுமொரு மரபணு பரிசோதனை அறிக்கை விசாரணைக் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதான 17 வயதுடைய…
சேயா செதவ்மியின் படுகொலைக்கு, எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஊர்வலம் (படங்கள்)
-முஸாதிக் முஜீப்- அக்கரங்க பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா செதவ்மி (5 வயது) என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்குமாறு வற்புறுத்தியும் நீர்கொழும்பு பெரியமுல்லையில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. நீர்கொழும்பு பெரியமுல்லை ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையின் ஆலோசனையுடன் நீர்கொழும்பு முஸ்லிம் இளைஞர் அமைப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைதி…
லலித் வீரதுங்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஸ்ரீ லங்கா தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் நிதியை முறைகேடான பயன்படுத்தியமை தொடர்பிலயே இவருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது!
“சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்துறை கழிவு அகற்றலுக்கும் அரசாங்கத்தின் இந்த முக்கிய செயற்பாடுகள் பாதுகாப்பாக அமையும்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையில் முதன் முறையாக சர்வதேச தொழில்துறைகளின் “அபாயகரமான பொருட்களின் பாதுகாப்பு மீதான முகாமைத்துவத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நேற்று (17) வியாழக்கிழமை ஹில்டன் ஹேர்ட்டலில் நடைபெற்ற…
ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த, ஜனாதிபதி மைத்திரி திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்ட அமர்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.இலங்கைப் படையினரை அதிகளவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்த ஜனாதிபதி விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஏனைய உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்னை இலங்கைக்கு விஜயம்…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முக்கியத்துவமிக்க பேச்சு..!
”குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறே ஐ.நா கூறியுள்ளது” உண்மையை தெரிந்து பொறுப்புடன் செயற்படவேண்டும்;; ஜே.ஆர். ஜேயவர்தனவின் நினைவு தின நிகழ்வு கொழும்பு ஜெயவர்தன கலாசார நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர்கள் கயந்த கருணாதிலக்க, விஜயதாச ராஜபக்ஷ ஜோன் அமரதுங்க உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும்…
