Main News
கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதிரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரிசோதனை
கொட்டதெனியாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் துனேஷ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா பொரளை ஜீன் டெக் நிறுவனத்தில் நேற்று விசேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். நீர்கொழும்பு சிறைச் சாலையில் இருந்து சிறை அதிகாரிகளால் பொரளையில் உள்ள ஜீன் டெக் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு விசேட மருத்துவ நிபுணர்களால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொண்டயா எனப்படும் சந்தேக நபரின் உடலின் பல…
சபாநாயகருக்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறையிட்டுள்ளோம் :வாசுதேவ
பாராளுமன்றத்திற்குள் உரையாற்றுவதற்கு எமக்கு சட்டரீதியான “கால வரையறையை” வழங்குமாறு அரசை வலியுறுத்தும் போராட்டத்தை எம்மோடு இணைந்துள்ள 50 எம்.பிக்கள் முன்னெடுக்கவுள்ளார்கள் எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார இது தொடர்பாக 50 எம்.பிக்கள் கையெழுத்திட்ட கடிதமும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவருக்கான எமது உரிமை பறிக்கப்பட்டது. இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான எமக்கான பேச்சுரிமை…
உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக வழக்குத் தொடர்வதென்றால் அதிக அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரனுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிராகவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்பினருக்கு மாத்திரம் வழக்குத் தொடர்வது நியாயமாகாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக எவரையும் வேட்டையாடக் கூடாது. இலங்கையின் அரசியலமைப்பையும் மக்களின் இறையான்மையும் பாதிக்காத வகையில் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும். இதற்காக ஐ.நா. வில் எமக்கு ஆதரவளித்த அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் எனது நன்றியை…
விரைவில் புதிய அரசியலமைப்பு
நாட்டில் விரைவில் புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரி மைகளை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்கள் எனக்கு வழங்கிய அதிகாரத்தை மக்களுக்காக சரியான முறையில் பயன்படுத்துவேன் என்றும் ஜனாதிபதி சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
விநியோக கட்டமைப்பிற்கு அதிகளவான மின்சாரம் கிடைத்தமையே மின்சாரத் தடைக்கு காரணம் : மின்சார சபை தகவல்
நாடுபூராகவும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்சார தடைக்கு பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிகாலை 3.30 க்கும் 4.00மணிக்கும் இடையில் நிலைமை வழமைக்கு திரும்பியதாக இலங்கை மின்சாரசபை தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் நாடுபூராகவும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே இதற்கான பிரதான காரணமாகும். என்றாலும் சில மணித்தியாலங்களுக்குள்…
செவ்வாயில் ஓடுகிறது தண்ணீர்… உறுதிப்படுத்தியது நாசா
செவ்வாய் கிரகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதனால் அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சூழ்நிலை குறித்த சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கி விடவுள்ளனர். மார்ஸ் ரீகனயனஸன்ஸ் ஆர்பிட்டர் (எம்.ஆர்.ஓ) மூலம் கிடைத்துள்ள தகவல்களை ஆய்வு செய்து பார்த்து இந்த முடிவுக்கு நாசா வந்துள்ளது. முன்பு எப்படி அபரிமிதமாக அங்கு தண்ணீர் இருந்ததோ அதேபோல இப்போதும் அங்கு தண்ணீர் இருப்பதாக கூறுகிறது நாசா. செவ்வாயில் உள்ள மலைப்…
பிரபல நரம்பியல் நிபர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்களிடம் வைத்தியம் செய்ய வேண்டுமா?
சென்றவாரம் பிரபல நரம்பியல் நிபுணர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்ட்டவர்களின் உறவினர்கள் பலர் இவரிடம் வைத்தியம் பெறுவதற்காண தேவை தமக்கும் உள்ளதெனவும். சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை செய்யும் பொருட்டு Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் தம் சிகிச்சை நேரங்களை அறிவித்துள்ளார்கள். அதன்படி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நோயாளிகள் சிகிச்சை பெறலாம்….
“தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்களுக்கு, இனிமேல் பொலிஸ் பதிவு கட்டாயம்”
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றுவோர் மற்றும் குடியிருப்பவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற…
ஒபாமாவை சந்தித்தார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பகல் போசன விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த விருந்துபசாரத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
25 ஆயிரம் வீடுளை சீமெந்தினால் பூசி பூரணப்படுத்த நிதி ஒதுக்கீடு
– அஸ்ரப் ஏ சமத் – ஜக்கிய நாடுகள் அமையத்தினால் வருடா வருடம் அக்டோபா் 5 ஆம் திகதியில் பிரகடனப்படுத்தியுள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வீடமைப்பு அமைச்சு நாடுபூராவும் வீடுகளை நிர்மாணித்து சீமெந்தினால் தமது வீடுகளின் சுவா்களை பூசிக் கொள்ள முடியாமல் உள்ள 25 ஆயிரம் வீடுளை சீமெந்தினால் பூசி பூரணப்படுத்துவதற்கென கடந்த வாரம் 250 மில்லியன் ருபா நிதியை அமைச்சரவை அங்கிகரித்துள்ளன. என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா் (28)ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில்…
சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!
சட்டக் கல்லூரி அனுமதி – 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தமிழ் பேசும் பரீட்சார்த்திகளுக்கு திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு, அநீதி இடம்பெறுகின்றது என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது. இவை சம்பந்தமாக பரீட்சார்த்திகள்…
முஸ்லிம்கள் மீதான யுத்த குற்றங்கள் கவனத்தில் கொள்ளப்படுமா?
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் – இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார். உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். LLRC கற்றுக்…
