Main News
ஜே.வி.பி.யின் அசத்தலான கோரிக்கைகள் (முழு விபரம் இணைப்பு)
இலங்கையின் துரித மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகள் என்ற தலைப்பில் மக்கள் விடுதலை முன்னணி, தேசிய அரசாங்கத்திடம் பிரதான 20 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அந்த முன்மொழிவுகளின் முழு வடிவம் இதோ, துரித மறுசீரமைப்புக்கான கோரிக்கைகள் ஜனாதிபதி ராஜபக்ஷாவின் ஒரு தசாப்த காலத்திற்கு அண்மித்த ஆட்சியின்போது நாட்டில் சமூக அரசியல் துறையில் புரையோடிப்போயிருந்த அஜீரணமான அரசியல் கலாசாரத்துக்குப் பதிலாக நல்லாட்சி கொள்கையின் அடிப்படையில் புதிய மக்கள் வரணை உருவாக்கி…
ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் SLTJ புகார்
ஹெம்மாதகம பகுதியில் கடந்த 06.09.2015 ம் திகதி ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த மற்றுமத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் அத்து மீறி நுழைந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக்கை தாக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்த சகோதரர்களையும் தாக்க முயற்சி செய்து விற்பனைக்காக வைத்திருந்த மார்க்க புத்தகங்களையும் பலவந்தமாக பறித்து சென்ற பொது பல சேனா (BBS) அமைப்பினருக்கு எதிராக ஹெம்மாதகம பொலிஸ் நிலையத்தில்…
மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது – மங்கள சமரவீர
மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொட்டாதெனிய சேயா என்ற சிறுமி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தூக்கிலிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படும். மரண தண்டனைக்கு எதிராக ஜெனீவாவில் சர்வதேச நாடுகள் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர் மங்கள சமரவீரவும் இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உலகின் பல நாடுகளில்…
ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்டனம்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருப்பதை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டித்துள்ளார். ஐ.நா. அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அறிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; ஐ.நா. அறிக்கையில் கலப்பு விசேட நீதி மன்றத்தை அமைத்து இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நீதி…
கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், இன்று மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோத்தபாய இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையில், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சீருடைகளை மாற்றி ஈடுபடுத்தியமை தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ரக்ன லங்கா பாதுகாப்பு ஊழியர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பாகவும், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இச்சம்பவம் குறித்து கோத்தபாயவிடம் ஏற்கனவே…
5 பில்லியன் டொலர் செலவில் தலைமன்னாருக்குப் பாலம்
5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ…
மஹிந்த ராஜபக்ஷ அநியாயம் செய்திருந்தால் நடவடிக்கை: ராஜித்த
யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரை பின்பற்றியவர்கள் அந்த நீதிமன்றத்தின் முன்னால் சாட்சியளிக்கவேண்டும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, கட்டளையிடும் அதிகாரி மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட யாரோ அநியாயம் செய்திருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். என்னுடைய அனுபவத்தின் பிரகாரம் யுத்தம் ஒரு குற்றமாகும். அதன் பிரகாரம் யுத்தத்துக்காக யாராவது ஒருவர் கட்டளையிட்டிருந்தால்…
முன்னாள் பிரதமரின் மகன் பதவிப் பிரமாணம் – மு.பிரதமர் மற்றும் மைத்திரி பங்கேற்பு
– ஜே.எம்.ஹபீஸ் – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சராக முன்னாள் பிரதமரின் மகன் அனுராதா ஜயரத்தன பதவிப் பிரமாணம் செய்த பின் (17.9.2015) மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சிற்கு விஜயம் செய்து கடமைகளைப் பொறுப்பேற்றார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா, முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன, விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, கடற்றெதழில் நிரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதி அமைச்சரின் துணைவியார்…
ராஜித + கயந்த அமைச்சரவை, பேச்சாளர்களாக நியமனம்
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகிய இருவரும் அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது (17) நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலத்தை மறப்போம், மன்னிப்போம் – வாசுதேவ
கடந்த காலத்தை மறப்போம் மன்னிப்போம். எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவோம் என யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு “வியாக்கியானம்” வழங்கிய ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார சர்வதேச விசாரணைக்கு எதிராக மிதவாதத் தமிழ்த் தலைவர்களை கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்….
UPFA பாராளுமன்ற குழுத் தலைவராக நிமால்
க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுத் தலைவர் என்ற வகையில் தமது கடமைகள் எவ்வாறு அமையும் என்பதனை தெரிந்து கொள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சபாநாயகரை சந்தித்துள்ளார். ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியதாக அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள்…
ஐ.நாவின் விசாரணை அறிக்கை
ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சையிட், ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார். ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் 2002 இல் இருந்து 2011 ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின் வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படுத்துகின்றன. இவ்வறிக்கை,…
