Headlines

ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை: அமைச்சர் மஹிந்த அமரவீர

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு நாங்கள் பயமில்லை. இலங்கையின் கடல் எல்லையை மீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும். அத்துடன் எல்லை மீறி வந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் மீன்பிடி…

Read More

மஹிந்த ஆணைக்குழுவின் முன் பிரசன்னம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்காக செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே இன்றும் நாளையும், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது.

Read More

இரகசிய மாளி­கை­யல்ல; நிலக்கீழ் வதி­விடம் கோத்தா விளக்கம்

ஜனா­தி­பதி மாளி­கையில் நிலத்­துக்கு அடியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சொகுசு மாளி­கை­யா­னது, இர­க­சி­ய­மாக அமைக்­கப்­பட்ட மாளி­கை­யல்ல. மாறாக ஜனா­தி­பதி ஒரு­வரின் பாது­காப்பு கருதி பாது­காப்பு சபை, இராணுவ தள­பதி உள்­ளிட்­டோரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அமைக்­கப்­பட்ட வதி­விடம் மட்­டுமே என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். 2009 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரேயே இந்த நிலக்கீழ் பாது­காப்பு வதி­விடம் அமைக்­கப்­பட்­ட­து.அப்­போ­தி­ருந்த சூழலில் ஜனா­தி­பதி ஒரு­வரின் பாது­காப்புக் கரு­தியே அது நிர்மாணிக்கப்பட்டது. எவ­ரி­னதும் தனிப்­பட்ட தேவைக்­காக அது அமைக்­கப்­ப­ட­வில்லை என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும்…

Read More

ஆணைக்குழு முன் மஹிந்த இன்றும் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார். கடந்த தேர்தல் காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளின் போது அரச தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி குறித்த ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(NF)

Read More

தேங்கிக் கிடக்கும் 6700 முறைப்பாடுகள்

இலஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் லஞ்ச, ஊழல்கள் தொடர்பான 6700 முறைப்பாடுகள் தேங்கிக் கிடப்பதாக அறியக்கிடைத்துள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், இத்தகவல்களை நேற்றைய செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டுள்ளார். இவற்றில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த சில மாதங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவாகும். தற்போதைய நிலையில் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் கீழ் 170க்கும் மேற்பட்ட பொலிசாரும், நான்கு விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழுவின்…

Read More

நிலத்தடி மாளிகையை எட்டிப் பார்ப்பதைக் கூட மஹிந்த விரும்பவில்லை – சரத் பொன்சேகா

ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள நிலத்தடி மாளிகையில் ஒருபோதும் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெறவில்லை என்று பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை தொடர்பான தகவல்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குறித்த மாளிகை ஒரு வசிப்பிடம்…

Read More

மஹிந்தவின் மேலுமொரு நிலக்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி தெனியாய, நாதகல தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை…

Read More

ஜப்பானிய முதலீட்டாளர்களைக் கவர மாநாடு

இலங்கையில் ஜப்பானிய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் டோக்கியோவில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான நாடு என்ற வகையில் இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஏற்பாட்டில் ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு ஜப்பானிய அரச அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகள் அனுசரணை வழங்கியிருந்தமை…

Read More

அவன்காட் கப்பலில், ஜனாதிபதி ஆணைக்குழு

பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர். இன்று (28) பி.ப 1.30 மணியளவில் காலி துறைமுகத்திற்கு வந்த ஆணைக்குழு உறுப்பினர்கள், பொலிஸாரின் கண்காணிப்பில் இருக்கும் அவன்காட் கப்பலுக்குள் சென்றனர்.

Read More

மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – மேர்வின்

மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். மேர்வின் சில்வா தலைமையில், பசு வதையை தடை செய்யும் பொருட்டு மில்லியன் கையழுத்துகளை பெறும் நிகழ்ச்சித் திட்டம், மாத்தறையில் நேற்று ஆரம்பமாகிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மிருகவதைக்கு எதிராக பல செயற்பாடுகளைச் செய்து கடந்த காலங்களில் மேர்வின் சில்வா பிரபல்யமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

விமான சேவை அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

– றிஸ்வான் சேகு முகைதீன் – ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (28) காலை ஆஜரானார். தற்போது, ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால், குறித்த விடயம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரிசல்

கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெறுகின்ற முற்போக்கு சோஷலிச கட்சியின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More