Main News
மைத்திரி – ரணில் தலைமையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு
நாட்டின் தேசிய ஒற்றுமையைக் காப்பாற்றி, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் எமது ஒவ்வொரு நடவடிக்கையையும் முன்னெடுத்துச் செல்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க தலைமையில் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாகவே பயணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அரசியல்…
கொழும்பில் இன்று பாரிய மாணவர் போராட்டம்!
கொழும்பில் இன்று பாரியளவில் மாணவர் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சபையின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிரில் நடத்திய போராட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவர்களும்…
கட்சி ஆதரவாளர்கள் அதிருப்தி! புத்திக்க பத்திரண
பதவி வழங்கப்படாமை குறித்து என்னை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அதிகளவில் வருந்துவதாக மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். எனது அரசியல் வாழ்க்கையில் பதவிகள் பட்டங்கள் வழங்கப்படாமை எனக்குப் பிரச்சினையில்லை. பதவி கிடைக்கவில்லை என்று மாத்தறை மாவட்ட கட்சி ஆதரவாளர்களே கவலைப்படுகின்றனர். 2009ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நெருக்கடியான தருணத்தை எதிர்நோக்கிய காலத்தில் கட்சி உறுப்பினர்களை பாதுகாத்து பச்சைக் கொடியின் கீழ் ஆதரவாளர்களை அணி திரட்டியிருந்தேன். எனது இந்த தலைமைத்துவம்…
சேயா கொலை தொடர்பான வழக்கினை உயர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரிக்கை
கொட்டாதெனியாவ நான்கரை வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் மஜிஸ்திரேட் நீதிமன்றிடம் கோரியுள்ளனர். சேயா கொலை தொடர்பான வழக்கு நேற்று மினுவன்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர். இந்த வழக்கு எதிர்வரும் 16ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் டி.ஏ.ருவன் பத்திரண அறிவித்துள்ளார். சேயா கொலை தொடர்பிலான முழு விசாரணைகளையும்…
இலங்கையில் இஸ்ரேல்: அமைச்சர் பௌசி அதிரடி
இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்ரேலுக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் இடமளிக்க முயற்சிக்கின்றமையினால் முஸ்லிம்கள் அரசின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். அவ்வாறான நிலைமை உருவானால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் ஐ..தே க. கட்சியையும் ஸ்ரீ.ல.சு. கட்சியையும் புறந்தள்ளி விட்டு ஜே.வி.பி. க்கே வாக்களிப்பார்கள் என தேசிய ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ.ல. சு. கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவருமான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் இது பற்றி இலங்கை முன்னணி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எமது நாட்டின்…
வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது :கோத்தபாய
வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனுடன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாரடைப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு அவரை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தீவிரமில்லை என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது: நிதி அமைச்சர்
சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். முதலீட்டு மேம்பாட்டு நிகழ்வு ஒன்றிற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இலங்கை 5 முதல் 5.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. எனினும்…
அவன் கார்ட் கப்பலை இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை!
அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பலை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனையிட உள்ளனர். இன்று இரசாயன பகுப்பாய்வாளர்கள் கப்பலுக்குள் சென்று பரிசோதனை நடத்த உள்ளனர். கப்பலில் காணப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடந்த 29ம் திகதி கப்பலுக்குள் பிரவேசித்து கப்பலில் காணப்பட்ட 810 ஆயுதங்களையும் பரிசோதனையிட்டுள்ளனர். இந்த ஆயுதக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாஜூடின் விசாரணை: உறவினருக்கு அச்சுறுத்தல்
ரகர் வீரர் வசீம் தாஜூடின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது யார் ஏன் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்பது குறித்து தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தாஜூடினின் தாயாரிடம் இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டு தோண்டி…
தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
நாட்டினுள் சுதந்திரம், ஜனநாயகம் உறுதியாகியுள்ளமையினால் மீண்டும் தாய் நாட்டிற்கு வருமாறு தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் மூலம் உறுதியளித்துள்ள அனைத்து உரிமைகளை வலுப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணைக் குழு நிறுவப்படுவதற்கு தங்கள் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தூதரக அலுவலகத்தினால்…
ரணிலிடம் அறிக்கை கையளிப்பு
கடந்த வியாழக்கிழமையன்று உயர்கணக்கியல் கற்கை நெறி மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஆரம்ப விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இந்த அறிக்கையை கையளித்துள்ளார். இந்தநிலையில் அறிக்கையின் அம்சங்களை கொண்டு இது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸாரின் நடவடிக்கை பிழையானது என்று கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
