Main News
அமைச்சர் றிஷாத் மைத்திரிக்கு அவசர கடிதம்
மன்னார் சிலாவத்துறையில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை மீண்டும் அம்மக்களுக்கு பெற்று்க் கொடுப்பதற்கான உதவிகளை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு வடக்கில் மன்னார் சிலவாத்துறையில் கடற்படைக்கான தளமொன்றினை பிரதேசத்தின் பாதுகாப்பு நோக்கம் குறித்து தற்காலிகமாக அமைக்கப்பட்டது.அதன் பிற்பாடு இது நிரந்தரமானதொரு முகாமாக மாற்றப்பட்டுவருகின்றது. சிலவாத்துறையின் பிரதான சனநெருக்கடி மிக்க பிரதேசத்தில் இந்த முகாம் இருப்பதால்,வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரிதும் சிரமங்களை…
அமைச்சர் றிஷாத் – பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சஹீத் சகீல் அஹமத் இன்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். பாகிஸ்தான் அரசு கடந்த காலங்களில் இலங்கை அரசுடன் முன்னெடுத்த வர்த்தக செயற்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும், புதிய அரசாங்கத்தின் கீழும் இச்செயற்பாடுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை தொடர்ந்து பயனுள்ளதாக முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் இச்சந்திப்பின்…
நெஞ்சில் பலகை குத்திய மாணவன் மரணம்
களுத்துறை – புளத்சிங்கள பிரதேசத்தில் மரத்திலிருந்து விழுந்து நெஞ்சுப் பகுதியில் பலகைத் துண்டு குத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் இன்று உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையிலே இவர் காலை 10.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதான குறித்த மாணவன் தனது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்ற வேளை அங்கு மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கீழே விழுந்துள்ளார். இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த…
வீரவன்சவின் செயற்பாடுகள் கவலைக்குரியது! ரஞ்சன் ராமநாயக்க
குற்றம் செய்துவிட்டு அதனை வார்த்தை ஜாலங்களால் மறைக்க முயலும் விமல் வீரவன்சவின் செயற்பாடுகள் கவலைக்குரியது என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளார். அதன் மூலம் சட்டத்தை மீறிய அவர் தற்போது எதுவுமே நடைபெறாதது…
பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: மாணவர் ஒன்றியம்
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகி சுமார் பத்து மாணவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பலருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கை தொடர்பான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு…
மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து கொண்ட பிரதமர்
மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து கொண்ட அவற்றுக்கு தீர்வு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வார நாட்களில் மக்கள் தங்களது பிரச்சினைகளை கூறி தீர்வு பெற்றுக்கொள்ள சந்தாப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வார நாட்களில் சிறிகொத்தவிற்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வார்கள். நேற்று அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் இரான் விக்ரமரட்ன ஆகிய அமைச்சர்கள் மக்களின் பிரச்சினைகளை…
பொலிசாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்! ஆணைக்குழுவுக்குத் திண்டாட்டம்
பொலிசாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் குவியும் நிலையில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. தேசிய அரசாங்கம் முன்வைத்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு, தற்போது செயற்படத் தொடங்கியுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்ட போதிலும், அதன் அலுவல்களை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் நிறைவு பெறாத நிலையில்…
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 39 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இரண்டு பிக்குமார் மற்றும் மாணவியரும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான காயங்களுக்குட்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெறும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் இன்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். எனினும் இச்சம்பவத்தின் போது சாதாரண காயங்களுக்குள்ளான ஆறு பொலிசார் கொழும்பு…
பாரிய நிதி நெருக்கடிக்குள் அரசாங்கம்!
ஆளும் அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதை தவிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண, ஜனவரி மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில்…
மஹிந்த தரப்பு விளம்பரத்திற்கு பாரிய தொகை செலவு
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்கு மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டுள்ளது. பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது நேற்று இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரி- சந்திரிக்கா தரப்புக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சந்திரிக்காவின் உரையிலிருந்து மிஸ்டர் பிரபாகரன்…
கொண்டயா ஒரு குற்றவாளியே – ருவான் குணசேகர
கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த சார்பில் குரல் கொடுத்து வரும் சட்டத்தரணி உந்துல் பிரேமரத்னவின் செயற்பாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த துனேஷ் பிரியசாந்தவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் இல்லை என…
கொண்டயாவின் புகைப்படங்கள்! (photo)
கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த காவற்துறையின் தடுப்பில் இருக்கும் போது தாக்கப்படவில்லை என காவற்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். எனினும் காவற்துறையினர் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியிருந்த துனேஷ் பிரியசாந்த, காவற்துறையினரின் தாக்குதலில் உடலில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் காட்டும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இதனால், காவற்துறைப் பேச்சாளார் தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறியிருப்பது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிறுமி சேயாவின் கொலை சம்பந்தமான…
