Headlines

பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்

பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில், பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக பிரி­யசாத் டெப் பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டுள்ளார். உயர் நீதி­மன்ற நீதிவான் தேவிகா லிவேரா தென்­னக்கோன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­வா­னாக பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்ட நிகழ்வும் இந்த சந்­தர்ப்­பத்தில் இடம்­பெற்­றது. ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி. அபேயகோனும் நிகழ்வில் பங்கேற்றி ருந்தார்.

Read More

விமலின் கடவுச்சீட்டு மீள வழங்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டை நீர்கொழும்பு நீதிமன்றம் அவரிடம் மீள வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச கடவுச்சீட்டு காலாவதியானமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்குமாறு கூறவில்லை

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நடத்­தப்­ப­ட­வுள்ள விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை பங்­கெ­டுக்கச் செய்ய வேண்­டு­மென நான் எனது அறிக்­கையில் பரிந்­துரை செய்­ய­வில்லை. மாறாக தேவை­யெனில் விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நா­டு­களின் தொழில்­நுட்ப உத­வி­களை பெற்­றுக்­கொள்­ளலாம் என்ற பரிந்­து­ரை­யையே முன்­வைத்தேன் என்று காணாமல் போனோர் குறித்து விசா­ரணை செய்யும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்­றங்கள் குறித்த இறுதி அறிக்­கையை தயா­ரித்த போது எனக்கு எந்­த­வி­த­மான சவாலும் இருக்­க­வில்லை. உண்­மையைக்…

Read More

இலங்­கை கடலில் விழ­வுள்ள மர்­ம­ பொருள்

விண்­வெ­ளி­யி­லி­ருந்து மர்­ம­மான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்­வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்­க­ரைக்கு அப்பால் விழ­வுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. ‘டபிள்யூ.ரி.1190.எப்’ என அழைக்­கப்­படும் மேற்­படி சிதைவு எதிர்­வரும் நவம்பர் 13 ஆம் திகதி பிர­பஞ்ச நேரப்­படி 6.20 மணிக்கு இலங்­கையின் தென் பிராந்­திய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 65 கிலோ­மீற்றர் தொலைவில் இந்து சமுத்­தி­ரத்தில் விழ­வுள்­ள­தாக ‘நேச்சர்’ ஆய்­வேடு அறிக்­கை­யிட்­டுள்­ளது. இந்த 7 அடி நீள­மான சிதைவு அண்­மையில் சந்­தி­ர­னுக்கு விண்­க­லத்தை அனுப்பும் நட­வ­டிக்­கையில் பங்­கேற்ற ஏவு­க­ணையின்…

Read More

ஐ.தே.க.வுடன் இணைந்ததாலேயே சு.க.வை பாதுகாக்க முடிந்தது

ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­வ­தா­லேயே சுதந்­திரக் கட்­சியை பாது­காக்க முடிந்­த­தா­கவும், இல்­லா­விட்டால் அது இல்­லாமல் போவ­தற்­கான அறி­குறி காணப்­பட்­ட­தா­கவும் இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார். பது­ளையில் நேற்று திங்­கட்­கி­ழமை நெடுஞ்­சா­லைகள் அமைச்சுக்­கு­ரிய அலு­வ­லகம் ஒன்றை திறந்­து­வைத்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். இங்கு அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, நான் பிர­தமர் ரணிலின் வாலில் தொங்­கிக்­கொண்டு சென்றேன் என்றும் இறைச்­சியின் எலும்­பு­களை சாப்­பிடச் சென்றேன் என்றும்…

Read More

அவன்ட்காட் ஆயுத கப்பலுக்குள் செல்லும் ஆணைக்குழு அதிகாரிகள் குழு

அவன்ட்காட் ஆயுத கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்று இன்று கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐவர் அடங்கிய குழுவொன்று இன்று காலை கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று காலை விசாரணை நடவடிக்கைகளுக்காக கப்பலுக்குள் செல்லும் இந்த அதிகாரிகள் குழு நாளை மாலை வரை கப்பலில் தங்கியிருந்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய குறித்த காலப்பகுதியினுள் அந்த அதிகாரிகளினால் கப்பலில்…

Read More

நிலக்கீழ் மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன: சஜித்

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசாங்க தலைவரின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழி அவசியமென்றாலும், நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை நிர்மாணிப்பதற்கு பல கோடி செலவு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியொன்று உள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுங்கு குழுயொன்றினை அமைத்திருந்தால் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது….

Read More

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சமூகத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதில் பயனில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் எண்ணங்களை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சமூக விழுமியங்களை மேம்படுத்தி, நற் பண்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதே முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகம்,போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை…

Read More

மேர்வின் சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களனி பிரதேசத்தில் நடைபெற்ற காணி விற்பனையொன்று தொடர்பாகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த ஆட்சியின் போது களனி பிரதேச சபைக்கு உரித்தான காணியொன்றை மேர்வின் சில்வாவும் அவரது ஆதரவாளரான சிங்கப்பூர் சரத் என்பவரும் இணைந்து போலி உறுதிப்பத்திரம் தயாரித்து, விற்பனை செய்துள்ளனர். ஒரு காணித்துண்டு 25 லட்சம் ரூபா வீதம் 31 காணித்துண்டுகள்…

Read More

சுதந்திரக் கட்சியில் இருந்து கருணா ராஜினாமா

முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

நவீன ஸ்மார்ட் வசதி கொண்ட சுப்பர்சோனிக் விமானம் இலங்கைக்கு

இந்தியா இலங்கைக்கு புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இந்திய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது   புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களையே இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கையின் விமானப்படை தளபதி உயர்மார்சல் கஹான் புளத்சிங்க பாகிஸ்தானிற்கு அடுத்த மாதம் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் குறித்து ஆராயவுள்ள நிலையிலேயே இந்தியாவின் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பழைய விமானங்களிற்கு பதில் புதிய விமானங்களை வாங்குவதற்காகவே பாகிஸ்தானிற்கான இந்த விஜயம் நடைபெறவுள்ளதாக தகவல்கள்…

Read More

“போர்க்குற்றத்தில் என்னை சிக்கவைக்க தீவிர முயற்சி”

என்னையும் எமது இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து ஆட்சியை தக்கவைக்கவே ரணில் முயற்சிக்கின்றார். போர்க் குற்றத்தில் என்னை சிக்கவைக்கும் அதி தீவிர முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால் இராணுவத்தை காப்பாற்ற எந்த கூண்டிலும் ஏறத் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறை இருக்கும் போது சர்வதேச தரப்பை அழைப்பது எமது நீதிச் சேவையை அவமதிக்கும் செயலாகும். இதற்கு எனது முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். போர்க்குற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

Read More