Headlines

சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியாதிருந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் கடப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக ஆதரவளித்த சட்டத்தரணிகளுடன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை…

Read More

சலாவ பிரதேச கழிவுகளை அகற்ற 22 இலட்சம் ரூபா

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் பிரதேசத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வேண்டுகோளுக்கிணங்க மேல் மாகாண நிர்வாக திணைக்களத்தினால் குறித்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு கூறியுள்ளது. அதன்படி இத்திட்டத்திற்காக 22 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக பெகோ மற்றும் டிப்பர் வாகனங்களை பயன்படுத்தி நாளொன்றுக்கு 50 டொன் கழிவுகள் அகற்றப்பட உள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு கூறியுள்ளது.

Read More

ஞானசாரரின் குரோதப் பேச்சு – பூஜிதவிற்கு ஆதாரம் அனுப்பிவைப்பு

பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த இயக்கம் மீளவும் குரோதப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம் பேரவை இது குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான குரோதப் பேச்சுக்களையும் அச்சுறுத்தல்களையும் பொதுபல சேனா இயக்கம் மீளவும் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 23ம் திகதி மஹியங்கனையில் வைத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அலுத்கம சம்பவம் போன்று மீள இடம்பெறுவதற்கு…

Read More

சோமவன்சவின் இடத்திற்கு ஜயந்த விஜேசிங்க

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விரிவான வேலைத்திட்டங்கள் மூலம் கட்சியை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய தலைவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்சி ஆரம்பிக்கப்பட்டதற்கான கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என்றும்,கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சில நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மக்கள் தொழிலாளர்கட்சியின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

அதிகமான செல்வங்கள் இருப்பது ஆசிய மக்களிடமே

உலகிலேயே அதிகமாக செல்வத்தை வைத்திருப்பவர்கள் ஆசியர்கள் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. Capgemini என்ற நிதி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2015ஆம் ஆண்டின் ஆய்வின்படி ஆசிய செல்வந்தர்களின் பணமானது 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் காலப்பகுதிகளில் வட அமெரிக்காவில் உள்ள செல்வந்தர்களின்பணமானது 16.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலராகவும், ஆசிய செல்வந்தர்களின் பணம் 17.4 ட்ரில்லியனாகவும் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை கடந்த 2014 ஆம்…

Read More

எவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கைது

சட்டவிரோத ஆயுத விநியோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட எவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (23) இரவு காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதாக குற்றபுலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. -zn-

Read More

வன்முறைக்கு பொதுபல சேனா முயற்சி – முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்குங்கள்

– ஏ.ஆர்.ஏ.பரீல் – மஹி­யங்­க­னையில் இடம்­பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்­தை­ய­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பு அளுத்­கமை சம்­பவம் போன்ற ஒன்­றினை உரு­வாக்க முயற்­சிப்­ப­தா­கவும் அப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச்  செய்­யு­மாறும் மஹி­யங்­கனை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் ஜாதிக பல­சே­னாவின் செய­லா­ள­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னி­டமும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். அமைச்­சர்கள் இரு­வ­ரையும் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு மஹி­யங்­க­னையில்…

Read More

வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து…

Read More

ஹெந்தவிதாரண, ரணவீரவின் நடவடிக்கைகளில் சந்தேகம்

முன்னாள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் தற்போதைய அம்பாறை சிரேஷ்ட பொலிஸ்அ த்தியட்சகருமான டி.ஆர்.எல்.ரணவீர, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே…

Read More

30 ஆம் திகதிக்கு முன்னர் முடிவு எடுப்போம்

உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியன்று நிறைவடையும். அந்த மன்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்பேன் என்று மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி கேட்ட குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறுக்கு கேள்வியை எழுப்பிய எம்.பி, எதிர்வரும் 30ஆம் திகதியன்று நிறைவடையவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்படுமா? அல்லது…

Read More

ரூ.33 ஆயிரத்துக்கு குறைவு என்றால் பிரச்சினையில்லை

தினசரி பணப்புரள்வு 33 ஆயிரத்துக்கு குறைவாக அல்லது மாதாந்த பணப்புரள்வு 1 மில்லியனுக்கு குறைவான வியாபாரிகள், வெட் தொடர்பில் பதிவுசெய்ய அவசியம் இல்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Read More

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நிபுணத்துவம் பெற்றவர்-விக்கிரமபாகு

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்த துறையில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற ஒருவர் என சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். குறித்த விசாரணைகள் முடிவில் பொருத்தமான தீர்மானம் எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவத்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

Read More