Headlines

30 ஆம் திகதிக்கு முன்னர் முடிவு எடுப்போம்




உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியன்று நிறைவடையும். அந்த மன்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்பேன் என்று மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி கேட்ட குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறுக்கு கேள்வியை எழுப்பிய எம்.பி, எதிர்வரும் 30ஆம் திகதியன்று நிறைவடையவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படும் இல்லையேல் பதவிக்காலம் நீடிக்கப்படும் என்று கேட்டார் அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *