Main News
பாலித்த தேவபெரும நல்லாட்சிக்கு விடுத்த கோரிக்கை!
மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு இன்றைய தினம் உரிய தீர்வு கிடைக்காவிடில் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் பாலித தேவபெரும தெரிவித்துள்ளார். மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் முதலாம் ஆண்டுக்காக 10 மாணவர்களை சேர்த்து கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் பெற்றோர்களால் மத்துகம வலயகல்வி அலுவலகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. இதனால்…
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை இன்னும் சில மணிநேரத்தில் நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பதுளையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநரான அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம், நாளை 30ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மனித ஆற்றல் தரவரிசை வெளியீடு: பின்லாந்து முதல் இடம், இலங்கைக்கு 50 ஆவது இடம்
மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதோடு இலங்கை முன்னேறி 50 ஆவது இடம் கிடைத்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை,சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இம் மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது….
வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டங்கள்
வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக குறித்த வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல நகரங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று கிரிபத்கொட, கடவத்த, மாகொள, களனி ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நகரங்களின் வர்த்தகர்கள் நடைபயணத்தை மேற்கொண்டு கிரிபத்கொட சந்தி வரை சென்று அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
71வது பிறந்த நாளைக் கொண்டாடும் சந்திரிக்கா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவரது பிறந்த நாள் நிகழ்வானது அநுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதியில் சமய வழிப்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் ஹொரகொல்லயில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் இலங்கையின் 5வது ஜனாதிபதி என்பதுடன் 1994-2005 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆட்சி செய்த முதல் பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்தான்புல் தாக்குதல் – ஜனாதிபதி இரங்கல்
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வௌியிட்டுள்ளார். அத்துடன், உலகலாவிய தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுமையுடன் நிறுபோம் எனவும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றிரவு சுமார் 10.00 மணியளவில் டாக்சியில் வந்த மூன்றுபேர் பயணிகள் வருகை பகுதி கூடத்துக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவர் இயந்திர துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் பீதியடைந்த மக்கள்…
விண்ணப்பம் கோரல் :சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு
இலங்கை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவைகள் மற்றும் துணைமருத்துவ சேவைகளின் பயிற்சிக்காக பயிலுனர்களை ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுவிண்ணப்பங்களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்தமானியூடாக கோரியுள்ளது. பொதுச்சுகாதார பரிசோதகர் பயிற்சியைத்தவிர ஏனைய 12 தொழிற்பயிற்சிகளும் ஆங்கிலமொழிமூலத்தில் நடத்தப்படும். மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், மருந்தாளர், பற்சிகிச்சையாளர், இதயத்துடிப்பு பதிவாளர் உள்ளிட்ட 12 பயிற்சி நெறிகள் 2 வருடகாலம் இடம்பெறும். பொதுவாக க.பொ.த. (சா.த)…
ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு!
புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முஸ்லிம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் நாட்டில் சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக இதன் போது துஆ பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சகல இனத்தவர்களும் சமாதானமாகவும் நம்பிக்கையுடனும் வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
இலங்கையின் சனத்தொகையில் 23.4 வீதமானோருக்கு புகைப்பழக்கம்!
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார். 2020இல் புகையிலையில்லா இலங்கை என்ற தொனிப்பொருளில் சுகாதார கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பாக விளக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். 20ஆம் நுற்றாண்டின் இறுதி வரை புகையிலையினால் உலகில் 100 மில்லியன் மக்கள் மரணமாகியுள்ளனர். வெண்சுருட்டில், 700 வகையான இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 69 வகையான இரசாயனங்கள் புற்றுநோயை…
கம்மன்பில விவகாரம் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற நடவடிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் முறைகேடு தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள விசாரணையாளர்கள் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியர் ஒருவரின் வங்கிப்பங்கு பத்திரங்களை போலியான முறையில் கைமாற்றி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உதய கம்மன்பில மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது சாட்சிகளாக கையொப்பமிட்ட இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் வாக்குமூலங்களை பெறுவதற்காகவே சர்வதேச காவல்துறையினரின் உதவி கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை தடை தாண்டல் பரீட்சை
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சை யூலை மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் நடைபெற உள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் அரச நிர்வாக சுற்றறிக்கை இல 16/2016 மற்றும் ஒன்றிணைந்த சேவை சுற்றறிக்கை இல. 04/2016 அடிப்படையில், ஆன்லைன் (ONLINE) முறையின் மூலம் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். மேற்கூறப்பட்டுள்ள சுற்றறிக்கையானது அரச நிர்வாக…
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கோரிக்கை
மேல் மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைகள் இடம்பெற்று இரண்டு வருடங்களாகின்ற போதும், அவர்களுக்கு நியமனம் வழங்க, நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களம் அனுமதியளிக்கவில்லை என, குறித்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நியமனங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, நிதி அமைச்சுக்கு வலியுறுத்தி, மேல் மாகாண…
