Main News
கைது செய்யப்பட்டார் சஜின் வாஸ்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரச காணிகள் பற்றிய தகவல்களை திரட்ட பணிப்புரை
வடகொழும்பு, மத்திய கொழும்பு தொகுதிகள் உள்வரும் கொழும்பு பிரதேச பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை மற்றும் மாவட்ட செயலகம் ஆகிய அரச அமைப்புகளுக்கு சொந்தமான மற்றும் பயன்படுத்தபடாத தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும்படி கொழும்பு பிரதேச செயலக பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும் மத்திய தர…
ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் திட்டம்
-சுஐப் எம்.காசிம் – தேசிய கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் முடிவுக்கிணங்க இன்று (27/06/2016) கொழும்பு, விகாரமகா தேவி பூங்காவில் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தன மரக்கன்று ஒன்றை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அண்மையில் பிரபல பாடகர் இராஜ் விக்கிரமரத்ன, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு மரக்கன்றையாவது நாட்டிக் காட்டட்டும் என்று அவர் சவால் விடுத்தும் இருந்தார். இந்தப் பின்னணியில் சந்தன மரக்கன்று ஒன்றை…
நாட்டின் கடன்தொகை இரட்டிப்பாகியுள்ளது!- மஹிந்த
நாட்டின் கடன்தொகையானது இரட்டிப்பாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த கால அரசு பெற்ற கடன் தொடர்பில் பிரச்சாரங்கள் செய்வதற்குதற்போதைய அரசாங்கம் அதிக பணங்களை செலவு செய்வதாகவும், இதனை சேமித்தால்மக்களுக்காக உதவிகளையாவது செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பண்டுவஸ்நுவர விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே மஹிந்தஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது 9 வருட அரசாங்கத்தில் பெற்ற கடனைவிட கடந்த ஒன்றரை வருடங்களிலநல்லாட்சி பெற்ற கடனானது இரட்டிப்பு என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!
துரிதமாக பரவிவரும் டெங்கு நோயை தடுப்பதற்கான கிரமமான வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் டெங்கு நோய்த் தொற்று துரிதமாக பரவி வருகின்றமையை தொடர்ந்து இதற்குத் தீர்வு காணும் வகையிலே வீடுகள் தோறும் சென்று டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்கண்டு அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய இன்று முதல் குறித்த சிரமதானப் பணிகளில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் சிவில் பாதுகாப்பு…
இந்திய மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி
வட பிராந்திய கட்டளையகத்தின் ஆழ்கடல் ரோந்து படகு சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடி படகொன்றில் நிர்கதியான நிலையில் தத்தளித்தித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களுக்கான உதவிகளை மேற்கொண்டனர். இயந்திர கோளாறு காரணமாக தலைமன்னார் கடல் பிராந்தியத்தில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட மேற்படி மீன்பிடி படகின் அமைவிடத்திற்கு விரைந்த கடற்படையினர் மீன்பிடிப்படகினையும் மீனவர்களையும் பாதுகாப்பாக காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கு கொண்டுவந்து சேர்த்ததுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை யாழ் கடற்றொழில் தினக்கலத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்கத்துக்கு கெடுபிடி
ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துக்கு, இவ்வாரம் கெடுபிடி நிறைந்ததாகவே அமைந்திருக்கும் என்று, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கம், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட கொள்கைக்கு அமைவாகச் செயற்படாவிடின், அந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு நன்மை பயப்பனவாய் அமையாதுவிடின், அந்த அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு அஞ்சமாட்டேன் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…
புளுமெண்டல் பகுதியில் பதற்ற நிலை – பொலிஸார் குவிப்பு
புளுமெண்டல் பகுதியில் சட்டவிரோதமாக அமையப்பெற்றுள்ள வீடுகளை உடைத்தமையினால் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள பொலிஸாரையும் மீறி வீடுகள் உடைக்கப்படும் இடத்தை நோக்கி மக்கள் படையெடுக்க முயற்சிக்கின்றமையால் பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மேலும் புளுமெண்டல் பகுதியில் பிரதான வீதியில் சில மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக, அல்லாஹ்வுக்கும் அனுப்பவும் – ஞானசார
பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள இணையத்தளமொன்றுக்கு பொது…
முன்னாள் பொலிஸ்மா அதிபர் அரசியலமைப்பு சபையின் உபகுழுவிற்கு தெரிவு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் அரசியலமைப்புக் குழுவின்உபபிரிவு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் குழுவிற்கு சட்டமா திணைக்களத்தின் பிரதானசொலிஸ்டரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோத்தாகொடவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அரசியலமைப்பு சபையில் உபகுழுக்களாக 5 குழுக்கள் இவ்வாறுசெயற்படுவதாகவும், அதன் நியமனங்கள் அனைத்தும் சுயேட்சையானது என்றும் இதில் உள்ளஅதிகாரிகளுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கடல் வலயம் 2020 அதிகரிக்கும்!
இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான கடல் பகுதி இலங்கைக்கு சொந்தமாகவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையை போன்று 60 மடங்கு வரையான கடற்பரப்பு தற்போது இலங்கைக்குச் சொந்தமாக உள்ளது எனவும், எதிர்காலத்தில் மேலும் இலங்கையைப் போன்று 23 மடங்கு கடற்பரப்பு சொந்தமாகும் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும்,…
‘மக்களது கருத்துக்களைக் கொண்டே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்’
பெறப்பட்டுள்ள மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி வித்தியாலோக மகா பிரிவெனாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பொதுமக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே அன்றி அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதன் மூலம் இந்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம்…
