Headlines

அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கரிப்பு?

அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி அரசியல் கட்சியின் பிரதான உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரதமரின் மேலதிக செயலாளர், ஐடிஎன் தலைவராக நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி (ஐடிஎன்) வலையமைப்பின் தலைவராக சமன் அதாவுடஹெட்டி இன்று முதல் கடமையாற்றவுள்ளார். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

புகைப்படத்தை விட்டுச் சென்ற கொள்ளையன்

கிரிவத்துடுவ கல்கந்தே பிரதேசத்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களின் முகம், கை, கால்களை கட்டிவிட்டு, 5 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், துணி நெய்யும் இயந்திரத்துக்கு பயன்படுத்தப்படும் பெறுமதியான நூல்களையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளனர். இந்த கொள்ளையில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, கொள்ளையிட வந்தவர்களில் ஒருவர், தனது புகைப்படத்தை சம்பவ இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இது புதுசு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடங்களில் இருந்த ஹேண்ட்பவர் ( சுத்தப்படுத்தும் உபகரணம்) அகற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. நீரை பாவிப்பதன் காரணமாக விமான நிலையத்தில் உள்ள மலசலகூடம் எந்தநேரமும் ஈரமான நிலையில் காணப்பட்டது. அதனால், சிங்கபூரில் நடைமுறையில் உள்ளதைபோல டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சுத்தப்படுத்தும் முறை தொடர்பில் அதிக அவதானம் செலுத்தும் இலங்கையர்கள், இந்த புதிய நடைமுறை காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்….

Read More

பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவியுயர்வு

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிவழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையானது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் (23) கூடவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது இதற்கான அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இதன்போது கொழும்பு – வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன உள்ளிட்டஅதிகாரிகள் 7 பேரே பிரதி…

Read More

காணாமல் போன ஆவணங்களை கண்டறிய நீதிமன்றங்கள்!

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இராணுவம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் இராணுவத்தினால் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பிலும் இராணுவத்தின் வசமிருந்த ஆவணங்கள் தொலைந்துள்ளதாக கூறப்பட்டிருக்கும் அதேவளை, அதனை கண்டுபிடித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், இலங்கை இராணுவ பொலிசாரை உள்ளடக்கிய சிறப்பு விசாரனைப்பிரிவுகளைக் கொண்ட விசாரணை நீதிமன்றதத்தினை இராணுவத் தளபதி அமைத்துள்ளதாக…

Read More

அவுஸ்திரேலியக் கடற்படை கப்பலுக்கு செயலாளர் விஜயம்

அண்மையில் நல்லெண்ண நோக்கில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் ‘எச்எம்ஏஎஸ் பேர்த்’ எனும் கப்பலிற்கு பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று முந்தினம் (20) விஜயமொன்றினை மேற்கொண்டார். இந்நிகழ்விற்கு வருகை தந்த செயலாளர் ஹெட்டியாரச்சியை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்சென் மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி ஆகியோர் வரவேற்றனர். அத்துடன் விஷேட பிரமுகர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ்…

Read More

தேசிய வீடமைப்புத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு!

யூன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டன. காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஸ்தாபகர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிறந்த தினத்தை குறிக்கு…

Read More

குழந்தை பருவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முதல் கணக்கெடுப்பு!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முதன் முறையாக குழந்தை பருவம் தொடர்பில் மதிப்பீடொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் 05 வயதுக்கு குறைவான குழந்தைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள இக்கணக்கெடுப்பினை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நோக்கில் இம்மாதம் 22,23,24 மற்றும் 27 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் உள்ள ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகாரிகளை…

Read More

சிறுவர் தொழிலுக்கெதிரான தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்!

ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 ஆம் திகதி சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இவ்வருடத்துக்கான தொனிப்பொருளாக”விநியோகச் சங்கிலியில் சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல்” பேணப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இலங்கையில் சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் இன்று(22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. உலகளாவிய ரீதியில் சிறுவர் தொழிலைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணக்கரு, 2010 இல் நெதர்லாந்து, ஹேக் நகரில் நடந்த சிறுவர் தொழில் பற்றிய…

Read More

150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம், இந்த ஆண்டு இலங்கையில் 150 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் இந்த எண்ணிக்கையான புலமை பரிசில்கள் பகிரப்பட்டுள்ளன. பத்ரமுல்லை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில் இந்த உதவித் தொகையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உயர்நிலை கல்வி மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுவதுடன்…

Read More