Main News
சுகாதார சேவைகளுக்கு வற் வரி விதிப்புக்கள் இல்லை!
மருத்துவ சேவைக்கான வற் வரியை மருந்து வகைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் உள்ளிட்ட வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு இதற்குப் பதிலாக புகையிலை நிறுவனங்களிடம் வரியை 90 வீதம் அறிவிட தீர்மானித்துள்ளோம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், மருத்துவ சேவைக்கான வற்…
பொறுத்திருந்து பாருங்கள் நடக்க உள்ளதை!
புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது, அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்கட்சி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை இன்று பார்வையிட சென்ற போதே செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய இருப்பதை தாம் மறுப்பதாகவும் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் புதிய கட்சி உருவாக்கப்பட மாட்டாது, மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ன நடக்க உள்ளது…
அனைத்து அபிவிருத்திகளையும் ஐ.தே.கட்சியின் அரசாங்கம் செய்தது!- பிரதமர்
ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றால், நாடு முன்னோக்கி செல்லாது எனவும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடந்துள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே செய்தது. நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை சூழ இணைய வேண்டும் எனவும் பிரதமர் குறி்ப்பிட்டுள்ளார். இணையத்தளம் வழியாக…
நாட்டின் அனைத்து மருத்துவ பீட மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு
நாட்டின் அனைத்து அரச மருத்துவபீட மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி ஹைலெவல் பாதையினூடாக தும்முல்லைக்குச் சென்று பம்பலப்பிட்டி, காலி வீதியினூடாக பிரதமரின் அலுவலகம் நோக்கிச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மருத்துவபீட மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹைலெவல் பாதை முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த பாதையினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…
இலங்கை கிரிக்கட் அணி மீதான தாக்குதல் – அறுவர் மீது குற்றப் பத்திரிகைகள் தாக்கல்
2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி மீது பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 6 பேர் மீது குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் பயணித்த பஸ் மீது 2009 மார்ச் 3ம் திகதியன்று தாக்குதல் நடத்தப்பட்டபோது இலங்கை வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸார் உட்பட்ட 8 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது குறித்த 6 பேர் மீதும் குற்ற பத்திரிகைகள்…
ஐக்கிய தேசியக் கட்சியின் APP வெளியீடு
ஐக்கிய தேசியக் கட்சியின் எப் (APP) இன்று (23) கட்சி தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது கட்சி உறுப்பினர்களுக்கு புதிய இணைய அங்கத்துவ அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டிற்கு எப்பொழுதும் புதிய திட்டங்களை ஐ.தே.கட்சியே கொண்டு வந்துள்ளது. இது மகாவளி திட்டம் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் தாமே முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இலங்கையில் முதன் முறையாக ஒரு கட்சி தன்னுடைய எப் (APP) ஐ வெளியிடுவது…
பொதுபலசேனாவின் சகாக்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
பொதுபலசேனாவின் ஆதரவுக்குழவாக செயற்பட்டு வரும் அகில இலங்கை இந்து மன்ற உறுப்பினர்கள் நேற்று (22) ஜனாதிபதியுன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அகில இலங்கை இந்து மன்றத்தின் தலைவர் அருணகாந் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் இக் கலந்துரையாடலில் பங்கு கொண்டனர். ஜனாதிபதியுடன் என்ன விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த இவ் அமைப்பானது பொதுபலசேனாவின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
றிஷாத் மீது வீண்பழி சுமத்தி தாண்டிக்குளம் திட்டத்தை தடுப்பது ஏன்?
வட்டுக்கோட்டைக்கு போகும் வழியைக் கேட்டால் “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு” என்கிறார் சி.வி.. றிசாத்தின் மீது வீண்பழி சுமத்தி தாண்டிக்குளம் திட்டத்தை தடுப்பது ஏன்? சுஐப் எம்.காசிம் வவுனியாவில் பொருளாதார மையம் நிறுவுவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை இன்னும் தொடர்கின்றது. இந்தத் திட்டத்துக்கென அரசாங்கம் பல கோடி ரூபா ஒதுக்கியுள்ள போதும், அதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருபுறமும், வன்னி மாவட்ட எம்.பிக்கள், வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாய வர்த்தக சங்கங்கள் மறுபுறமும்…
மெகசீன் சிறைச்சாலையில் மஹிந்த!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச இன்று காலை மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். போலி அட்டர்னி பத்திரம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமாக 11 கோடி ரூபா பெறுமதியான பங்குகளை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் மொஹமட் முஸம்மில்…
உதயகம்மன்பிலவால் வெட்கப்படும் ஜாதிக ஹெல உறுமய
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன்பில போன்ற திருடர்கள் ஜாதிக ஹெல உறுமயவில் கட்சி உறுப்பினர்களாக இருந்தமைக்கு வெட்கப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் உதயகம்மன்பில இதற்கு முதலிலும் சிறைத்தண்டனை அனுபவித்த நபர் எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 2000ஆம் ஆண்டுக்கு முன் உதயகம்மன்பில என்ற ஒரு அரியல்வாதி இருப்பதே இலங்கை மக்களுக்கு தெரியவில்லை என்றும் ஜாதிக, ஹெல உறுமயவே அவரை இலங்கையின் அரசியல்வாதியாக அறிமுகப்படுத்தியது என்றும் ஹெல…
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வைத்திய பரிசோதனை
நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிர்காலத்தில் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். வீதி விபத்துகளால் தினமும் 8 பேர் பலியாவதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரில் அதிகளவானோர் முச்சக்கர வண்டிகளில் கொண்டுவரப்படுவதால் முதலுதவி பயிற்சிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுங்க சட்டத் தயாரிப்பு: பொது மக்களும் யோசனைகளை முன்வைக்கலாம்
150 வருடங்கள் பழமையான சுங்க கட்டளைச் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவது தொடர்பிலான யோசனைகளை முன்வைக்க பொது மக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத் தயாரிப்புக்காக செயற்குழு, தொழிநுட்பக் குழு மற்றும் சட்டமூலக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் தங்களின் யோசனை முன்வைக்க ஜூலை மாதம் 11ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்கு முன்னர் தங்களின் யோசனையை நிதி அமைச்சிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது…
