Headlines

ஞானசாரரின் குரோதப் பேச்சு – பூஜிதவிற்கு ஆதாரம் அனுப்பிவைப்பு




பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த இயக்கம் மீளவும் குரோதப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

முஸ்லிம் பேரவை இது குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான குரோதப் பேச்சுக்களையும் அச்சுறுத்தல்களையும் பொதுபல சேனா இயக்கம் மீளவும் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 23ம் திகதி மஹியங்கனையில் வைத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அலுத்கம சம்பவம் போன்று மீள இடம்பெறுவதற்கு வழியமைத்துக் கொள்ள வேண்டாம் என முஸ்லிம்களை அச்சுறுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் உரை அடங்கிய டி.வி.டி ஒன்றும் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *