Headlines

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

புத்தள கோணகங்கார பகுதியில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல்போன சிறுவனின் சடலம்மாணிக்க கங்கையில் மிதந்து கொண்டிருந்த போது பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தில் 8 வயதுடைய சிறுவனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.’

Read More

ஹெரோயினுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் கைது

ஹெரோயின் போதைப் பொருளுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 111.54 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு பொரளை பிரதேசத்தில் மூன்று இடங்களில் நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடம் பல்வேறு தரத்திலான ஹெரோயின் இருந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். போதைப் பொருளை வைத்திருந்தமை, அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய வெலே சுதா என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தீடீர் மழையை அடுத்தே எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நுவரெலியா, மாத்தளை, பதுளை, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, மொனராகலை, காலி, கண்டி  மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பிரதேசத்தில் உள்ளவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லும் கொண்டயா

சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸார், தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.  சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு மற்றும் ஏனைய சாட்சிகளுடன் ஒப்பிடுகையில் கொண்டயா குற்றமற்றவர் என நேற்றைய தினம்  விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, குறித்த…

Read More

100 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி பாய்ந்து விபத்து: இருவர் படுகாயம்

அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் பிரதான வீதியை விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பெண் ஆகிய இருவரும் படுங்காயம்பட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…

Read More

நோயாளரை பார்க்கச் சென்ற இருவர் வைத்தியசாலையில் கைது

மாரவில வைத்தியசாலைக்கு  மதுபோதையில் நோயாளர் ஒருவரை பார்ப்பதற்கு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ பகுதியைச்  சேர்ந்த நபர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்  பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வீதி விபத்­துக்­க­ளினால் 9 மாதங்­களில் 2,200 பேர் பலி

இவ்­வ­ரு­டத்தின் முதல் ஒன்­பது மாதங்­களில் வீதி விபத்­துக்­க­ளினால் 2,200 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த வருடம் இதே மாத காலப்பகுதியில் 349 பேரே உயிர் இழந்­துள்­ளனர் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா தெரிவித்துள்ளார். வீதி விபத்­துக்­களின் அதி­க­ரிப்பை கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து தேசிய வீதிப் பாது­காப்புச் சபையில் நடை­பெற்ற கூட்­ட­ மொன்றில் அவர் இவ்­வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2014ஆம் ஆண்டு 36,050 வீதி விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ள­துடன் அவற்றில் 2,440 பேர்…

Read More

மீண்டும் மரண பயம்

கஹாவத்தை, கொட்டகெதன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஆயுதத்துடன் மறைந்திருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாட்டின் பின்னர் கொட்டகத்தெனவில் மீண்டும் மரணபயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தாயும் மகளும் மட்டுமே வாழ்கின்ற வீட்டுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைந்திருந்துள்ளவரைக் கண்ட அவ்வீட்டிலிருந்த 29 வயதான யுவதி, கூச்சலிட்டதையடுத்தே அவர் தப்பியோடியுள்ளார். அரைகாற்சட்டை மட்டுமே அவர் அணிந்திருந்துள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டகத்தென பகுதியில் உள்ள வீடுகளுக்கு இரவிரவாக செல்லும்…

Read More

சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்

வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின் அதிரடி முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று வடமராட்சிப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்…

Read More

ஓடையில் விழுந்த மாணவி பாத்திமா அஸ்ரா பலி

– J.M.Hafees – கட்டுகஸ்தோட்டை – நித்தவலை பகுதியில் நேற்று மாலை வீதி ஓரமான சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் ஓடை ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் 16 வயதுடைய  பாத்திமா அஸ்ரா சகாப்தீன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நுவரெலியா, பதுளை, கண்டி  மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Read More

ரயிலில் பிச்சை எடுப்பது தடைசெய்யப்படுகிறது!

ரயில்களில் பிச்சை எடுப்பது எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது. ரயில் பெட்டிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More