Headlines

அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளர் கொலை! காட்டுக்குள் விருந்து வைத்துக் கொண்டாடிய கொலையாளிகள்

அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளரின் கொலையை அடுத்து, அருகேயிருந்த காட்டுப் பிரதேசத்தில் கொலையாளிகள் விருந்து வைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அநுராதபுரத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் சிராவஸ்திபுர தேக்குமரக் காட்டுப் பகுதியில் இந்த விருந்து வைபவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொலையாளிகள் கொலைக்குப் பயன்படுத்திய கோடரி, தடிகள் மற்றும் இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பவற்றை தீயிட்டு எரித்துள்ளனர். பின்னர் கோடரியின் இரும்பு பாகம் மண்ணிற்குள் புதைக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிசார் இந்தக் கோடரியைக் கண்டுபிடித்துக்…

Read More

முன்னாள் கடற்படைத்தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இரத்மலானையில் அமைந்துள்ள கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் அவர் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சியை பூர்த்தி செய்திருந்தார். இலங்கை கடற்படையினர் கடற்பிராந்தியத்தில் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்த விடயத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அவர் சமர்ப்பித்த கட்டுரை பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஜயநாத் கொலம்பகே கடற்படையின் தளபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தது…

Read More

மஹிந்தவைப் போல் மாற மாட்டேன்: மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போல் தான் செயற்படப்போவதில்லை என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். சீதுவைப் பகுதியில் நேற்று  நடைபெற்ற காணாமல் போனோரின் ஒன்றியத்தின் 25 வது ஒன்றுகூடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  ‘1989 ஆம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற கலவரத்தின் போது கடத்தப்பட்ட சிங்கள கைதிகளைப் பாதுகாப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது. இதன்போது ஒரு சிறந்த மனித உரிமை…

Read More

ஹம்பாந்தோட்டையிலுள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள் – சஜித் பிரேமதாச

– அஸ்ரப் ஏ சமத் – ஹம்பாந்தோட்டையில் பல்லிமல்ல சந்தியில் கடந்த ஒக்டோபா் 12ஆம் திகதி சுத்தமான குடிநீா் பெற்றுத் தருமாரு ஹம்பாந்தோட்டையில் உள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள் அரசியல் லாபம் கருதி மக்களை ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்தினாா்கள் . இம் மக்களின் குடி நீா்த்திட்டத்திற்காக ஏற்கனவே என்னால் சமா்ப்பிக்கப்பட்ட அமைச்ரவைப் பத்திரத்தில் 2149 லச்சம் ருபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். இன்று (29) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே…

Read More

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தினால் புதிய பாடநெறி அறிமுகம்!

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தினால் பொது முகாமைத்துவ முதுமானி இலத்திரனியல் ஆட்சி (MPM – Master of Public Management in E-Governance) என்ற புதிய பாடநெறியொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆரம்பத்தில் பொது முகாமைத்துவ முதுமானி என்ற பிரிவில் மட்டுமே நடைபெற்றது. தற்போது இக்கற்கை நெறியானது இரண்டு பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவ்வகையில் பொது முகாமைத்துவ முதுமானி (Master of Public Management) மற்றும் இலத்திரனியல் ஆட்சி (Master of Public Management in E-Governance) என்ற இரு…

Read More

கொழும்பு துறைமுகத்தில் மிதக்கும் நூலகம்!

எட்டு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு புத்தகங்களை கொண்ட மிதக்கும் உலக புத்தக கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. இக்கப்பலில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விடயங்களைக் கொண்ட பல தரப்பட்ட புத்தக கண்காட்சியும் இடம்பெறுவதாக இக்கப்பலின் தொண்டர் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அதிகாரியான எப். வின்ஸ்டன் தெரிவித்தார். அவர் மிதக்கும் புத்தகக் கப்பல் பற்றிய தகவல்களை மேலும் தெரிவிக்கையில் இலங்கைக்கு மீண்டும் வருகை தந்துள்ள லோகோஸ் ஹோப் கப்பலின் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பயன்…

Read More

கொஸ்லாந்தையில் மண்சரிவு இடம்பெற்று ஓராண்டு!

மலையக மக்கள் பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பேரிடியாக நிகழ்ந்த சம்பவம்தான் கொஸ்லாந்தை மண்சரிவு அனர்த்தம். கடந்த வருடம்  பண்டாரவளை – கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் ஒரு கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போனது யாவரும் அறிந்ததே! ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடம் இதேநாள் காலை வேளையில் ஏற்பட்ட குறித்த அனர்த்தத்தால் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதேவேளை, அவர்களில் பலரின் சடலங்களையேனும் மீட்கமுடியாத அவலநிலை  ஏற்பட்டது. அத்துடன் சுமார் 10…

Read More

பாலியல் தொழிலில் ஈடுபட்டால்: கைதுசெய்வோம்

பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் கிடையாது என்பதனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி அண்மையில் சில பெண்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். எனினும் இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட முடியாது. பாலியல் தொழிலில் ஈடுபடுதல் மற்றும் பாலியல் தொழில் மையங்களை நடாத்துதல் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். வாழ வழியில்லை இதனால்…

Read More

மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் அகற்றப்பட்டது

மரத்தில் இருந்து விழுந்த மாணவனின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்த பலகைத் துண்டு 6 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவனொருவன்தனது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்றுள்ளதுடன்அங்கு மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கீழே விழுந்துள்ளார்.இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த பலகை துண்டு சிறுவனின்  நெஞ்சில் பாய்ந்துள்ளது. தற்போது அறுவைச் சிகிச்சை மூலம் மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் துண்டு அகற்றப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தற்போது கொழும்பு…

Read More

விரைவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

இலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளன.

Read More

சந்தேக நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை: பொலிஸ் மா அதிபர்

சந்தேக நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஏதேனும் ஓர் குற்றச் செயல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர் ஒருவரை தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெற்றுக் கொள்ள எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் சட்டத்தில் இடமில்லை. சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் விஞ்ஞான ரீதியான காரணிகளின் அடிப்படையிலான சாட்சியங்களையும் பயன்படுத்தி விசாரணை நடத்தப்பட முடியும். சந்தேக நபர்…

Read More

உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவுங்கள்

பொத்துவில்-14, அல்-நஜாத் வீதியை அல்லது பொத்துவில்-5 உல்லை சவாளை சேர்ந்த மர்ஹும் முகம்மது முஸ்தபா(தந்தை), முகம்மது அனிபா ஸபுரா பீபீ (தாய்) ஆகியோரின் மகனான முகம்மது முஸ்தபா முகம்மது ஸாஜித் (வயது-21) எனும் இளைஞரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டது. இவ்வேளையில் குறித்த இளைஞரின் சிறுநீரகத்தை சீராக்குவதற்க்கு சுமார் 2750000/= ரூபாய்கள் தேவைப்படுகின்றது. எனவே அன்புக்குரிய சகோதரர்களே குறித்த இளைஞன் சுகமாக அல்லாஹ்விடத்தில் பிராத்திக்குமாறும். உங்களால் முடிந்த நிதியுதவிகளை பின்வரும் விபரம் உடைய கணக்கிக்கு(வங்கி) அனுப்பி குறைந்தது share…

Read More