Headlines

மோனோ ரயில் செயற்திட்டம் கைவிடப்பட்டது!

இலங்கையில் மோனோ ரயில் சேவையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை போக்குவரத்து அமைச்சு தற்போது கைவிட்டுள்ளது. கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மோனோ ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்த புதிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதற்கான சாத்திய வள ஆய்வுகளும் நடைபெற்று, செயற்திட்டத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் மலேசிய நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மோனோ ரயில் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பதற்காக பாரிய தொகை செலவிடப்பட வேண்டி இருப்பதால் அத்திட்டத்தை கைவிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதன் காரணமாக…

Read More

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை இன்றுஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெலேசுதாவின் தங்கை பயன்படுத்திய கார் அவரது அம்மாவின் பெயரில் பதிவு

காருக்குள் ஹெரோயின் மறைத்து வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவின் இளைய சகோதரி பயணித்த கார் அவரின் அம்மாவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அவ் வாகனத்தை பரிசோதித்தபோது இத்தகவல் வெளியாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வெலே சுதாவின் சகோதரி பயணித்த காரிலிருந்து 150 கிராம் ஹெரோயின் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

Read More

குளவித் தாக்குதல்: 10 பேர் பாதிப்பு

– க.கிஷாந்தன் – லிந்துலை  – பேரம் தோட்டத்தில் 10 தோட்ட தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்  இன்மையால் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பாதிக்கப்பட்டோர் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஹம்பாந்தோட்டையில் பெய்த சிவப்பு மழை

ஹம்பாந்தோட்டை – அம்பலந்தோட்டை பகுதியில் நேற்று சிவப்பு நிறத்தில் மழை பெய்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

நாட்டில் வருடாந்தம் 60 ஆயிரம் இளைஞர்கள் போதைக்கு ஆட்படுகின்றனர்!

ஒவ்வொரு வருடமும் நாட்டில் அறுபதாயிரம் இளைஞர்கள் போதைகளுக்கு அடிமையாகின்றனர் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நாட்டின் போதைவஸ்து பாவனை நூற்றுக்கு 5வீதமாக உள்ளது என்று அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆய்வின்படி போதைவஸ்துக்கு ஆட்பட்டுள்ள ஒரு லட்சம் பேரில் 60 ஆயிரம் பேர் இளைஞர்களாவர். இந்தநிலையில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் நாட்டின் நீதியில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பாரியளவில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை போதைவஸ்து பாவனையாளர்களை புனர்வாழ்வுக்கு…

Read More

நவம்­பரில் இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்தல்

எதிர்­வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் மட்டு.மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் மாவட்ட உத­விப்­ப­ணிப்­பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இந்த இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இம் மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இதில் மண்­முனை வடக்கு, ஏறா­வூர்­பற்று, கோற­ளைப்­பற்று தெற்கு, கோற­ளைப்­பற்று, கோற­ளைப்­பற்று வடக்கு ஆகிய பிர­தேச செய­லாளர்…

Read More

நீதிபதியின் மேசையில் விழுந்த இரத்தம் குடிக்கும் பாம்பு

கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் மேசை மீது கூரையிலிருந்து பாம்பு ஒன்று விழுந்த திடீர் சம்பவத்தால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வியாழக்கிழமை (22) கடுவலை நீதிமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக நீதிமன்றத்தினுள் ஏற்பட்ட களேபரத்தை அடக்கி, அமைதிப்படுத்த நீதிமன்ற முதலியார் கடுமையான பிரயத்தனம் எடுக்க வேண்டியிருந்தது. அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளும் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாம்பு நீதிமன்ற ஊழியர்களால் வெளியேற்றப்பட்ட பின்னர்…

Read More

ருஹுன பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம்

ருஹுன பல்கலைக்கழகத்தின் சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்றுமுதல் சத்தியாக்கிரகத்தில் குதித்துள்ளனர். மாணவர்களின் பரீட்சைக்கான உரிமையை உறுதி செய்யுமாறும், பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை கைவிட கோரியும் இணை சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் நேற்று காலி, கராப்பிட்டிய மருத்துவபீடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்பாட்டத்தின் முடிவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்த மாணவர்கள், மருத்துவபீடத்தின் முன்பாக அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். ருஹுணைப் பல்கலைக்கழக…

Read More

கொண்டயா தொடர்பில் வெளியான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப்பேச்சாளரே பொறுப்பு: நீதவான்

துனேஸ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா தொடர்பில் ஊடகங்களில் வெளயான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு என கம்பஹா நீதவான் டிக்கிரி கே. ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் புகுந்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கொண்டயா மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் கைது செய்யப்படும் எந்தவொரு நபரும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் சந்தேக நபராகவே கருதப்படுகின்றார். சாட்சி கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை…

Read More

மாணவா்களுக்கு சீருடைகள் சீருடைகள் வழங்கிவைப்பு

– அஸ்ரப் ஏ சமத் – ”வி கெயாா போ யு” We Care For You பவுன்டேசனித் தலைவா் சர்ஜுன் ஆபுபக்கா் – வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரின் பேரியல் அஸ்ரபின் அமைச்சராக பதவி வகி்த்த காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணிப்பாளா் சபை உறுப்பினராக பதவி வகித்தாா். அவரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த சமுக சேவை நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் படசாலை மாணவா்களுக்கு ஒரு தொகுதி…

Read More

பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்!

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து…

Read More