Headlines

நிர்க்கதியான இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்

நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர்.

Read More

களனி ஆற்றில் குப்பை : 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Read More

இலங்கை பணிப்பெண் குவைத்தில் மரணம்

குவைத்துக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் ணாக தொழி­லுக்கு சென்று அங்கு மர­ண­ம­டைந்த இலங்கை பெண்­தொ­டர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் வெளிநாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பாக வெளிவி­வ­கார அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குவைத்தில் உள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு இலங்கை பணிப்­பெண்­ணொ­ருவர் இறந்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும் அவர்­தொ­டர்­பான வி­ப­ரங்­களை உறு­தி­செய்­து­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது. எனினும் அவர் வெள்­ளத்­தம்பி சித்தி ஷகீரா எனும் பெயரில் N…

Read More

கொழும்பில் மீண்டும் ஒரு போராட்டம்!

சனச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் முன்னிலையில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சனச வங்கி ஊழியர்களின் தொழிற் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அமைப்பை உருவாக்கிய ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இதை கண்டித்தே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தார்கள். சனச வங்கியை மக்கள் மத்தியில் பிரசித்தி பெறச் செய்தவரே குறித்த சங்கத்தை ஸ்தாபித்தவராவார். அரசாங்கத்தின் உதவியுடன் வங்கித் தலைவர்களே இவரை…

Read More

மஹிந்தவின் முன்னாள் செயலாளரின் கடவுச்சீட்டு விடுவிப்பு

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவருக்கு செயலாளராக கடமையாற்றிய லலித் வீரதுங்கவின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் 100 இலட்சம் ரூபா பிணை அடிப்படையில் கடவுச்சீட்டை விடுவிக்க இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் லலித் வீரதுங்கவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தலைக்கவச விவகாரம்: தடை நீடிப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை மீதான இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடை விதித்தனர். பின்னர், இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து, குறித்த தடையை அமுல்படுத்துவக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பில் தாக்கல்…

Read More

19 மீனவர்கள் கைது

கொக்குத்துடுவை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த 19 மீனவர்கள் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களிடமிருந்து 4 கண்ணாடிநார் படகுகள் மற்றும் 3 தங்கூசி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Read More

குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது!

களனி கங்கையில் குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஹேகித்த மற்றும் ஹெமில்டன் பகுதிகளிலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை…

Read More

டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 267 பேருக்கு வழக்கு

டெங்கு பரவும் வகையில் சுற்­றுப்­புறச் சூழலை வைத்­தி­ருந்த 1113 பேருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கவும் மேலும் 267 பேருக்­கெ­தி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கும் சுகா­தார போஷாக்கு மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. மேல் மாகா­ணத்­தி­லேயே டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ளவில் உண­ரப்­பட்­டுள்­ளது. எனவே அம்­மா­கா­ணத்தில் டெங்கு நோயினை ஒழிக்கும் வேலைத்­திட்­டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஈடு­பட்­டுள்­ளது. குறித்த வேலைத்­திட்டம் கடந்த29 ஆம் திகதி ஆரம்­பிக்­க­ப்பட்டு நேற்­று­டன்­ நி­றை­வுக்கு வந்­தது. எனவே கடந்த 29 ஆம் திகதி மாத்­திரம்…

Read More

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 74 ஆயிரத்து 614 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர். அத்துடன் 190 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமையும் குறி்ப்பிடத்தக்கது. மேலும் பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைகடிகாரம் உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பரீட்சாத்திகளின் கைக்கடிகாரம்…

Read More

அரசிடம் வாகனங்கள் கோரும் பாடசாலை அதிபர்கள்

வரி விலக்களிப்பு வாகன அனுமதிப்பத்திரத்தை பாடசாலை அதிபர்களுக்கும் பெற்றுதருமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை அடங்கிய கடிதமானது இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-2006 சுற்று நிரூபத்திற்கு அமைய அதிபர் பதவியானது பதவிநிலை உத்தியோகத்தர்தரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம்சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் குறித்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டமானது 1998ஆம்ஆண்டிலிருந்து அதிபர்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த நல்லாட்சியிலாவது அதிபர்களுக்கு குறித்த வாய்ப்பு மீண்டும்பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆசிரியர்…

Read More