Headlines

சப்ரகமுவ பல்கலையில் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள்.!

சப்ரகமுவ பல்கலைக்கத்தினுள் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் பொது மாணவ சங்க அமைப்பின் தலைவர் சமீர கப்புவத்த தெரிவித்துள்ளார். மாணவர் விடுதி, பரீட்சை பெறுபேறுகள் தாமதிக்கப்படல், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் அங்கு நிலவுவதாக மாணவ சங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு குரல்கொடுக்கும் மாணவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளும் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

கிராம உத்தியோகத்தர் தேர்வு போட்டி பரீட்சை அடுத்த மாதம்

கிராம உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சைகள் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 858 மத்திய நிலையங்கள் ஊடாக இந்தப் போட்டி பரீட்சை நடைபெறவுள்ளதோடு இதில் 109021 பேர் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது இதற்கான அனுமதியட்டைகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.என்.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்பாக அனுமதியட்டைகள் கிடைக்காதவர்கள் 1911 அல்லது 0112 785230, 0112…

Read More

1000 பஸ்களை திருத்துவதற்கு 3000 மில்லியன் ரூபா

போக்குவரத்துக்கு உதவும் நிலையற்ற ஆயிரம் பஸ்களை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பஸ்களை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார். இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பஸ்கள் காணப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Read More

புதிய கட்டளைத் தளபதிக்கு பொலிஸ் மா அதிபர் ஒப்புதல்

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒப்புதல் அளித்துள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. கடந்த 09ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் பொலிஸ் மா அதிபரினால் அதற்கான அங்கிகாரம் வழங்கப்படாதிருந்து…

Read More

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய காலம் நீடிப்பு!

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய இம் மாதம் 26 ஆம் திகதி வரை காலம் ஒதுக்கப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான தேர்தல் படிவங்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே குறித்த படிவங்களை பூர்த்தி செய்து இதுவரை கையளிக்காத நபர்களுக்காக இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் படிவங்கள் கிடைக்காதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தேர்தல் வடிவங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்…

Read More

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ; பாடசாலைகள் மூடப்படும் விபரம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரைமேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 27 பாடசாலைகள்பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 6 பாடசாலைகள் முழுமையாகவும் 21பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு இராஜகிரிய வித்தியாலயம்,நாலந்தா வித்தியாலயம், கண்டி விஹாரமஹாதேவி பெண்கள் மகாவித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை,…

Read More

சலாவ இராணுவ முகாமிற்கு அருகில் மீண்டும் வெடிப்பு!

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத கிடங்கு அண்மையில் வெடித்து சிதறியதன் மூலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் குறித்த இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீட்டு தோட்டத்தில் மேலும் ஒரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீட்டு தோட்டத்தை துப்பரவு செய்துக் கொண்டிருக்கும் போது நிலத்துக்கு கீழ் புதைந்து கிடந்த வெடி குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டு ஒன்றின் மேல் பகுதியே இவ்வாறு வெடித்துள்ளதாகவும், வெடிப்பு…

Read More

வெலிக்கடை சிறைச்சாலை ஹொரணைக்கு மாற்றம்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையை அங்கிருந்து அகற்றி அதற்கு பதிலாக ஹொரணை பகுதியில் சிறைச்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதிக்கிடைக்கபெற்றதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதன்படி, தற்போது…

Read More

இந்த மாணவனை கண்டுபிடிக்க உதவுங்கள்

சாய்ந்தமருதை சேர்ந்த K.M. இப்ராத் என்ற மாணவன் நேற்று (14) கொழும்பிலிருந்து பஸ்ஸில் தனது ஊருக்கு பயணித்தவர் இன்னும் வீடு சென்றடையவில்லை. இடை வழியில் எந்த தொடர்புகளும் இல்லாத நிலையில் காணாமல் போயுள்ளார். இவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு இவரது பெற்றோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தோர் 0777118327 / 0773447490 / 0773165295 என்ற இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு வினயமாய் வேண்டிக் கொள்கின்றனர்.

Read More

சட்டவிரோத மிருகக்காட்சிசாலை

சுற்றுலாத்துறையினரின் பார்வைக்காக சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளைத் தடுத்துவைத்திருந்த ஒருவரை தம்புள்ள பிரதேசத்தில்வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேற்படி சட்ட விரோத மிருகக்காட்சி சாலை தம்புள்ள  பிரதேசத்திலுள்ளகபுவத்தை என்ற இடத்தில் இடம் பெற்று வந்துள்ளது. சீகிரிய வன விலங்குகள்திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி  நேற்று இம்முற்றுகை இடம் பெற்றுள்ளது. ஒரு ஹோட்டலின் பின் பகுதியில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டகூடுகளில் இவை அடைக்கப்பட்டிருந்த வேளை அதிகாரிகள்கைப்பற்றியுள்ளனர். மேற்படி விலங்குகள் காயமடைந்திருந்ததன் காரணமாக வைத்தியசிகிச்சைக்காக அவற்றை தாம்…

Read More

கொழும்பில் வேட்டை ஆரம்பம்

கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ், இன்று திங்கட்கிழமை (15) முதல், விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய படையணி மூலம், இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்புத் தரப்பினர், தேவையேற்படின், விமானப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்றனர். போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம்…

Read More

போலி நிறைகள் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு தொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் மீட்பு

போலியாக நிறையிடப்பட்ட நிலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ஒருதொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் பேதுருதுடுவ பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது, கைப்பற்றப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 100 கிராம் என நிறையிடப்பட்டுள்ள பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 85 கிராமாகவும், 190 என நிறையிடப்பட்ட பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 180 கிராமாகவும் இருந்ததாக, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. எனவே, அந்த பிஸ்கட் பக்கற்றுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த நிறுவனம் மற்றும் அதன்…

Read More