Headlines

முன்பள்ளி கல்வியை இலவசமாக வழங்க திட்டம்!

இலங்கையில் முன்பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலேசியாவின் புத்ரஜாயா நகரில் ஆசிய பசுபிக பிராந்திய நாடுகளுக்கான முன்பிள்ளை பருவத்தினர் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை வடிவமைப்புக்கான (Asia – Pacific Regional Policy Forum on Early Childhood Care and Education 2016 )  மாநாட்டில்  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் இலங்கை சார்பில் கலந்துக் கொண்டார். மலேசியா கல்வி அமைச்சரின் தலைமையில்…

Read More

வயலின் வாசித்த வௌிநாட்டு பிரஜை கைது

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோரத்தில் இருந்து வயலின் இசைத்துகொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வயலின் இசைத்துகொண்டே அவர் பிச்சை எடுத்ததாக அறியமுடிகின்றது.

Read More

டீசல் பௌசர் விபத்து : ஒருவர் காயம்

கொழும்பு – பதுளை பிரதான வீதியின், ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் டீசல் பௌசர் ஒன்று இன்று முற்பகல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டீசலை அகற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விமானப்படையினர் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

தெற்கு அதி வேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டண விபரம் அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இக்கட்டணங்கள் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கட்டண விபரம்: மஹரகம – காலி:  ரூபா 390 மஹரகம – மாத்தறை:  ரூபா 470 கடுவெல – மாத்தறை : ரூபா 490 கடவத்தை – மாத்தறை :  ரூபா 510

Read More

முன்னாள் சதோச தலைவர் கைது

முன்னாள் சதோச தலைவர் நலின் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read More

பள்ளிவாசல்களை விட்டு விலகி வரும் ஆலிம்கள்: அதிர்ச்சித் தகவல்

(அஷ்ஷேக் பௌசுல் அமீர்(அல் முஅய்யிதீ) இலங்கையில் நூற்றுக் கணக்கான பள்ளிவாயில்கள் இவ்வருட ரமழானுக்கு பிறகு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற விடயம் உங்களுக்குத் தெரியுமா??? இல்லை… அது புதிதாக நிர்மாணிக்கப்பட்டதல்ல… புனித ரமழான் வரை இமாம்கள் சேவை புரிந்த பள்ளிவாயில்கள்தான் அவை… நடந்தது இதுதான்? சேவை புரிந்த இமாம்கள் ஷவ்வால் தலைப் பிறை கண்டு பெருநாளைக்காக வீடு சென்றவர்கள் திரும்பி வரவேயில்லை! காரணம் என்ன தெரியுமா? இதோ ஒரு இமாம் கூறுகிறார் கேளுங்கள்… நான் கடந்த சில வருடங்களாக ஒரு பள்ளிவாயிலில்…

Read More

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞன் கைது

ரிதிகம பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞர்  (21) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த  இளைஞரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் ரிதிகம பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர். குறித்த போலி நாணயத்தாள்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நுகர்வோர் பாதுகாப்பிற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள்

நுகர்வோர் அதிகார சபையில் முறைபாடுகளை தெரிவிப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையானது புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றல், காலாவதியான பொருட்களை விற்றல் உள்ளிட்ட முறைபாடுகளுக்ககாக இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய 011-7755481,755482,755483 என்ற இலக்கங்களுக்கு அல்லது 076 6670670 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தமது முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வாரம் 16 அத்தியாவசிப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை…

Read More

மாத்தறையில் நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் மீன்

நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன் காணப்படுகின்றது. வெல்பாமுல பிரதேசத்தைச் சேர்ந்த எச்.என். ஜோசப் என்பவரின் வீட்டுக்கு எதிரில் உள்ள சிறிய நீர்நிலையில் வாழும் மீன் ஒன்று ஒரு மணித்தியாலம் வரையில் நீர் இன்றி வாழும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு உரிமையாளர் ஜோசப், “திப்பிலி திப்பிலி” என அழைக்கும் போது அவரது கைகளுக்கு வரும் இந்த மீன் சுமார்…

Read More

நீதிமன்றில் முன்னிலையாகும் பிள்ளையான்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 அம் திகதி கொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பில் பிள்ளையான் 2015 ஆம் ஆண்டு…

Read More

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரி பதுளை, அம்பாறை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Read More

வற்வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களுக்கான வற்வரி (பெறுமதி சேர் வரி) அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (19) பிலியந்தல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கெஸ்பெவ, பிலியந்தல, பொகுந்தர பிரதேச வர்த்தகர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வற்வரி அதிகரிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Read More