Headlines

இன்று முதல் குளிர்பான போத்தல்களுக்கு குறியீடு

குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின்  பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஒரு குளிர்பான போத்தலுக்குள் 2-11 கிராம் சீனி மாத்திரம் அடங்கியிருந்தால் மஞ்சல் நிற குறியீடு…

Read More

6 ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை

-ரெ.கிறிஷ்­ணகாந் – மாவ­னல்ல கங்­துன பிர­தேச பாட­சாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கற்றுவ ரும் மாண­வர்கள் சிலர், தமது வகுப்புக்கு புதி­தாக வந்த மாண­வியை பல்­க­லைக்­கழக பாணியில் பகி­டி­வதை மேற்­கொண்­ட­மைக்­காக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆறாம் தரத்­துக்கு புதி­தாக வந்த மாணவி ஒருவர் அணிந்­தி­ருந்த சீரு­டையை, அங்­கி­ருந்த மாண­வர்கள் சிலர் இரண்­டாக கத்­த­ரித்து விட்டு, பின்னர் மாண­வர்கள் மத்­தி யில் நடந்துவரு­மாறு பணித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து, குறித்த மாணவி இது தொடர்பில் பாட­சா­லையின் அதி­ப­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார். அதன்­பின்னர் பகி­டி­வதை புரிந்த மாண­வர்­க­ளிடம் அதிபர்…

Read More

11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை  நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் லங்கா ஜயவர்தன இன்று (01) பிறப்பித்துள்ளார். குறித்த 11 பேரும் நீதிமன்ற உத்ததரவினை மீறி மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக இந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியிருந்துமை குறிப்பிடத்தக்கது.

Read More

தீப்பெட்டி விலை அதிகரிப்பு!

தீப்பெட்டி ஒன்றின் விலை ஒரு ரூபாவினால் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாவாகும். தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்த தான முகாம்

தகவல்: உக்குவெல அஸ்லம் – கடார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உக்குவெல கிளை (31.07.2016) நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வில் 96 நபர்கள் கலந்து கொண்டு 69 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ். உக்குவெல கிளை சகோதரர்கள் மிகவும் சிரமம் பாராது தியாகத்திற்கும் மத்தியில் பல்வேறு நிதி சிரமங்கள் மத்தியில் இதனை ஆர்வமாக நடத்தி முடித்தார்கள் இதில் குறிப்பிட வேண்டியஅதிகாமான சிங்களவர்கள் பாதுகாப்பு சிப்பாய்கள்,மற்றும் பிற சமூகங்களும் பங்கேற்றன….

Read More

பால் குடித்த குழந்தை உயிரிழப்பு

செல்வநாயகம் கபிலன் தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார். இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ்….

Read More

விமான நிலைய, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைதுவிமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான  வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tm

Read More

தற்காலிகமாக மூடப்படும் யால வனவிலங்குகள் சரணாலயம்!

யால தேசிய வனவிலங்குகள் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை இது மூடப்படுவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விலங்குகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விலங்குகளின் இயற்கை நடத்தைகள் குறுக்கீடு இல்லாமல் இடம்பெறுவதற்கும் யால வனவிலங்குள் சரணாலம் மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் குறித்த காலப்பகுதியில், யால சரணாலயத்தை தற்காலிகமாக…

Read More

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைக் காலம் ஆரம்பமாகவுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 02ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இடம்பெற உள்ளது. தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெற இருப்பதால் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் தினம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Read More

‘எமக்கு பயமில்லை’

-வி.நிரோஷினி ‘நிர்ணயிக்கப்படும் திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது. நாம் எதற்காகவும் யாருக்காகவும் பயப்படவில்லை. கடந்த தேர்தல்களில் தைரியமாக முகங்கொடுத்து, வெற்றியீட்டிய எமக்கு, இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றி இலகுவாகவே அமையும்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்…

Read More

யார் சொன்னாலும் போராட்டங்களை நிறுத்தமாட்டோம்

மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் பொய்களால் கல்வியை விற்பதற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. பதிவு செய்த பெயர் முதலாக அனைத்துமே பொய்கள் தான் எனும் குற்றச்சாட்டினை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லகிரு முன்வைத்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், பிரதமர் ரணிலும் தற்போது தெரிவித்துள்ளனர்….

Read More

புத்தளம் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழா!

-சுஐப் – புத்தளத்திலே சிறந்து விளங்கும் அரபுக்கல்லூரிகளிலே குல்லியத்துல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி சிறப்பானதாகும். இக்கல்லூரியின் வளர்ச்சி மிகத்துரிதமானதாகும். 2004 ஆம் ஆண்டிலே 10 மாணவர்களுடன் ஓர் ஓலைப்பள்ளியாக இக்கல்லூரி தில்லையடியில் ஆரம்பிக்கப்பட்டது. பரோபகாரிகளின் உதவியினால் இந்தக்கல்லூரி இன்று புத்தளத்திலே சிறப்பாக இயங்கி வருகின்றது. இதன் துரித வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குபவர் கல்லூரியின் ஸ்தாபகப்பணிபாளர் மௌலவி ஷாஹுல் ஹமீது அஷ்ரப் முபாரக் ரஷாதி அவர்களாகும். இந்தக்கல்லூரியை தரமான ஒரு கல்லூரியாக அமைப்பதற்கு அவர் மேற்கொண்டுவரும் முயற்சி மிகவும் மெச்சத்தக்கதாகும்….

Read More