Headlines

மஸ்கெலியவில் பாரிய மண்சரிவு

மஸ்கெலியா காட்மோர் கல்கந்த தோட்டத்தில் இன்று காலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13) காலை 07 மணியளவில் இடம் பெற்றது. இந்த அனர்தத்தினால் 41 குடும்பங்களைச் சேர்ந்த 211 பேர் இடம்பெயர்ந்து தோட்டத்தில் உள்ள வெளிகல உத்தியோகத்தரின் விடுதியிலும், தோட்ட ஆலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை மேற்கெள்ள தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகம் முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது. இதேவேளை…

Read More

08 அண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபடிப்பு; விசாரிக்க உத்தரவு

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கடமையாற்றும் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ் பாலசுகமுனியமுக்கு அமைச்சர் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார். வௌிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த மீன்கள், விநியோகம் செய்யப்படாமையினால் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம்…

Read More

கபூரிய்யா அரபிக் கல்லூரி, பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம்-2016

கபூரிய்யா அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்சியடைகிறோம். காலம் : 14-08-2016 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் : காலை 09:30 இடம் : அப்துல் கபூர் ஹாஜியார் கேட்போர் கூடம் இன்ஷா அல்லாஹ் காலை 08:30 மணி முதல் பதிவுகளும், சரியாக காலை 09:30 மணிக்கு கூட்ட நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகும். கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்றை கூட்டத்திற்கு மிக மிக அன்பாக அழைக்கின்றொம்….

Read More

பள்ளியிலிருந்து வெளியேறியவர் பலியான பரிதாபம்

-க.கிஷாந்தன் – வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில்  விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற…

Read More

சீ.எஸ்.என் மோசடி விவகாரம்: நிதியை இடமாற்ற உத்தரவு!

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய வங்கிக்கு இடமாற்றுமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு கடுவலை நீதவானால் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸாமிலுக்கு பிணை!

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த மொகமட் முஸாமிலைபிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொகமட் முஸாமில் சற்று முன்னர் முன்னிலையானபோதே நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில்கடந்த மாதம் 20ஆம் திகதி முஸாமில் கைது செய்யப்பட்டார்.

Read More

பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்குதல் ! நபர் கைது

கடந்த சனி நள்ளிரவு பொரலஸ்கமுவ பிரதேச பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை தொடரும் நிலையில் இன்னும் ஒருவர் அல்லது இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதர சந்தேக நபர்கள் தொடர்பில் கண்டறிய பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வங்கி ஒன்றின் சிசீ டிவி  யை பரீசீலனை செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

சீனியை தொடர்ந்து உப்பு

சந்தையில் விற்பனைக்குள்ள உணவுப் பொருட்களின் சீனி மற்றும் உப்பின் அளவை குறித்துக் காட்டக்கூடிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். இதேவேளை, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறித்து காட்டாதவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

இன்று தீர்வு கிட்டலாம்!

தமது கோரிக்கைகளுக்கு இன்று (8) எழுத்து மூல தீர்வு கிடைக்கலாம் என, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டுள்ளார். ஏழு கோரிக்கைகளை முன்னிருத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 27ம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வேலை…

Read More

பாரிய குழாய்களை பொருத்துதல் தொடர்பான கேள்விப்பத்திரம் கோரல்

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வாரத்தில் பாரிய தொகையான 8.7 பில்லியன் ரூபாய்பெறுமதியான கேள்விப்பத்திரங்களை பிரசுரிக்க உள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை களஞ்சியத்துக்கு எரிபொருளை கொண்டுசெல்லும் பாரிய குழாய்களை பொருத்துதல் தொடர்பான வேலைத்திட்டங்களுக்காகவே இந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன. தற்போது வரை இந்தியா, மலேசியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் இந்த கேள்விப்பத்திர பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்த விலைகளில் கேள்விப்பத்திரங்களை கோரும் நிறுவனத்துக்கே குழாய் பொருத்தும் அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேவேளை குறித்த எரிபொருள் தாங்கிக்குழாய்…

Read More

உயர் தரப் பரீட்சை குறித்து 40 முறைப்பாடுகள் : விசாரணைகள் ஆரம்பம்

க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சையின்போது மோசடியில் ஈடுப்பட்ட மாணவர்கள் தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read More

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த தடை

தரம் 05இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இம்மாதம் 21ஆம் தகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான நாட்களில் அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல் மாத்திரமின்றி, அதுதொடரபான பதாகைகள்,  துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல், ஊடகங்கள் ஊடாக பிரசாரங்கள் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

Read More