க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை
கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டிற்கு அமையவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 29 வயதான மொஹமட் சகீம் சுலைமான் என்பவர் நேற்றிரவு வெளியில் சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார்,…
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால்சென்ற வாரம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று 22ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார். நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை ஆகி உள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படஉள்ளார். நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த போதே நிதி மோசடி விசாரணை பிரிவினரால் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நாமல்…
மக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சுஹுருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது. ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும். வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்துக்கான சாதாரண சேவை, விசா விநியோகம், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் மற்றும் குடியுரிமைச்…
அதி உயர் மின்னலுத்தங்கள் காணப்படும் இடங்களில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி மொஹமட் அஸ்ரப் சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேடமாக தங்கூசி என்ற நூலினைப் பயன்படுத்தி பட்டங்கள் விடும் போது, பட்டங்கள் மின்மாற்றி அல்லது மின்கம்பங்களால் சிக்குவதுடன் இதன்மூலம் மின்சாரத் தாக்குதலுக்கு சிறுவர்கள் உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பெற்றோர் தமது குழந்தைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், விசேடமாக…
தெல்தெனிய நகரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில், அந்நிலையத்துக்கு எரிபொருள் ஏற்றிவந்த இரண்டு பெளஸர்களும், வீடொன்றும் சேதமடைந்துள்ளன என தெரிவித்த தெல்தெனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீ்ர்மானித்துள்ளதாக மருத்துவ பீட மாணவர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத் தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படும் எனவும் மருத்துவ பீட மாணவர்கள் குழு தெரிவித்துள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2959 பரீட்சை நிலையங்களில் இந்தப்பரீட்சை நடத்தப்படவுள்ளது. இந்தப்பரீட்சையில் 350701 மாணவர்கள் தோற்றுகின்றனர். முற்பகல் 9.30க்கு முதலாம் வினாத்தாள் பரீட்சை ஆரம்பமாகும். 75 நிமிங்களுக்கான இரண்டாம் வினாத்தாள் பரீட்சை முற்பகல் 10.45க்கு ஆரம்பமாகும். இந்தநிலையில் மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்களை, தமது ஆடையின் இடதுபக்கத்தில் பொறித்திருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். பரீட்சை நேரத்தில் மாணவர்களின் பெற்றோர் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதேவேளை, பரீட்சை தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின், அவற்றை…
போலி வீசாவைப் பயன்படுத்தி ஆட்களை கனடாவுக்கு அனுப்ப தயாராக இருந்த சந்தேகநபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கர விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 200க்கும் அதிகமான போலி கடவுச்சீட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அந்த கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட சில கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு நபரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை ஆகிய பகுதில்…
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி உள்ளார். கடந்த அரசாங்கத்தில் அரச பொறியிலாலளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். vk