பாரத லக்ஷ்மன் கொலை: தீர்ப்புக்கெதிராக மூவர் மேன்முறையீடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டு மனுவை முன்வைப்பதற்காக தமது சட்டத்தரணிகள் ஊடாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தமது மனுவை ஒப்படைத்துள்ளனர். அநுர துஷார டி மெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவீ ஜயநாத், சரத் பண்டார, ஆகியோரே…
