Headlines

இலங்கையில் வொக்ஸ்வெகன் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை

ஜேர்மன் நாட்டின் வொக்ஸ்வெகன் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று இலங்கையில் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னதெரிவித்துள்ளார். குறித்த நிறுவனம், இது தொடர்பான அறிவிப்பினை தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்இதனைத் தெரிவித்துள்ளார். எனவே அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்கென இடத்தை ஒதுக்கும் நடவடிக்கைகள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், வொக்ஸ்வெகன் நிறுவனம் இலங்கையில் தனது தொழிற்சாலையை அமைக்காது என ஏற்கனவே தெரிவித்தமைக்கான காரணம் “குறித்த நிறுவனத்தின் பொருளாதார…

Read More

இன்று பாதுகாப்பு மாநாடு!

கொழும்பு பாதுகாப்பு மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது. வலயம் மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளை அடையாளங்கண்டு அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இன்று ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில், உள்நாட்டு மற்றும் வௌிநாடுகளை சேர்ந்த புத்திஜீவகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பாதுகாப்பு மாநாடு இராணுவ தளபதி லுத்தினல் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின்…

Read More

அநியாயமாக இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் றிஷாத்திடம் முறையீடு

எந்தவிதமான காரணங்களுமின்றி முறைகேடான வகையில், தாங்கள் பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையிட்டனர். அம்பாறை கச்சேரியில் இன்று காலை (01/09/2016) அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த அவர்கள், இந்த திடீர் இடமாற்றத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும், மனக்குறைகளையும் எடுத்துரைத்தனர். முஸ்லிம் கட்சி ஒன்று, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, இந்த தான்தோன்றித்தனமான இடமாற்றத்தை வழங்கியுள்ளதாக அவர்கள் கவலை…

Read More

அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கவேண்டும்

-அமைச்சரின் ஊடகப்பிரிவு – இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னாசிய பிராந்திய வர்த்தகம் தொடர்பான அமெரிக்க உதவிச்செயலாளர்  மைக்கல் ஜே.டெலனி மற்றும் இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர், அமைச்சர் றிசாத் பதியுதீனை இன்று மாலை (31/08/2016) கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய…

Read More