Headlines

வட மாகாண தமிழ் மொழிச் சேவைக்கு புதிய பொலிஸ் அவசர இலக்கங்கள்

தமிழ் மொழியில் தகவல்களைப் பெறுவதற்காகவும் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் புதிய பொலிஸ் அவசர அலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்தப் புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 0766 224949 மற்றும் 0766 226363 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்வதன் மூலம் தமிழில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்நடவடிக்கை வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More

சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு கடந்த முதலாம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். நுளம்புகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு வாரத்தில் வீடுகள், நிறுவனங்கள் என்பனவற்றின் சுற்றுச் சூழல்கள் பரிசோதிக்கப்படவிருக்கின்றன. நான்காயிரத்து 500 பேரை உள்ளடக்கிய குழுக்கள் இந்தப்பணியில் ஈடுபடும்.

Read More

இராணுவ அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்காக

திருகோணமலை காலனித்துவம் மற்றும் அண்மைய இராணுவத்தின் வரலாறு  தொடர்பான அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டள்ளது. இலங்கை இராணுவம் திறந்தவெளி அருங்காட்சியகம் ஒன்றை திருகோணமலை உவர் மலை பகுதியில் அமைத்துள்ளது. நேற்று முன்தினம்  (19) 22ம் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனை திறந்து வைத்தார். இன்று முதல் பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும். காலாற்படை ஆயுதங்கள்,கவச வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆடியோ காட்சி  போன்றவை இதில்…

Read More

இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

2015/2016 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள முடியும். 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக 68 ஆயிரத்து 299 பேர் விண்ணப்பித்துள்ளனர். எந்தவொரு மாணவருக்காவது மேன்முறையீடு செய்ய வேண்டுமாயிருந்தால் அதற்கென நேற்று…

Read More

அரபு நாடு­க­ளுக்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெகு­வி­ரைவில் அரபு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்ளார். அவர் ஐக்­கிய அரபு இராச்­சியம், கட்டார், சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கு பய­ணிக்­க­வுள்ளார். சவூதி அரே­பியா விஜ­யத்­தின்­போது சவூதி மன்­ன­ரி­டமும் ஹஜ் மேல­திக கோட்டா தொடர்­பாக கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். இதனை  முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.  ஹலீ­ம் தெரிவித்துள்ளார்.

Read More

வடக்­கிலும் கிழக்­கிலும் சிங்­க­ள­வர்கள் குடி­யேற்­றப்­பட வேண்டும்

-விடிவெள்ளி  ARA.Fareel- நாட்டில் மக்கள் சிங்­கள கிராமம், முஸ்லிம் கிராமம், தமிழ் கிராமம் என பிரிந்து வாழ்­வ­தி­னா­லேயே இன ரீதி­யி­லான மோதல்கள் ஏற்­ப­டு­கின்­றன. கல்­ஹின்னை சம்­ப­வமும் இதன் பின்­ன­ணி­யிலே இடம்­பெற்­றுள்­ளது. எனவே இவ்­வா­றான சம்­ப­வங்­களைத் தவிர்ப்­ப­தற்கு முஸ்லிம் கிரா­மங்­களில் சிங்­க­ள­வர்­களும் சிங்­கள கிரா­மங்­களில் முஸ்­லிம்­களும் குடி­யேற்­றப்­பட வேண்டும் என சிங்­ஹலே அமைப்பின் செய­லாளர் மெதில்லே பஞ்­சா­லோக தேரர் தெரி­வித்தார். கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து காயங்­க­ளுக்கு உள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மூன்று பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளையும் சிங்­ஹலே அமைப்பின் பிர­தி­நி­திகள்…

Read More

மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வித்தியா வழக்கு!

புங்குடுதீவில் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோநாதன் வித்தியா மீதான படுகொலை வழக்கு தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம். றியால் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் இதுவரை பன்னிரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது,…

Read More

அமெரிக்காவின் நிறுவனம் இலங்கைக்கு உதவி

அமெரிக்காவின் (Millennium Challenge Corporation) நிறுவனம் தன்னுடைய ஆரம்ப நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையினை தெரிவுசெய்துள்ளது. MCC நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தனா ஜே ஹைடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று (Loews Regency) ஹோட்டலில் சந்தித்தார். 2016 டிசம்பரில் இடம்பெறவுள்ள MCC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ள செயலாக்க அறிக்கையினை தயாரிப்பதற்காக தம்முடைய குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும்…

Read More

17 ஆயிரத்து 457 பேர் போதை பொருள்களுக்கு அடிமைகள்

இலங்கையில் 17 ஆயிரத்து 457 பேர் ஹொரொயின் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளதாக  சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை,  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது  ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அந்த எண்ணிக்கை எவ்வளவு? மேற்படி நபர்களில் எத்தனை பேர் எச்.ஐ.வி.தொற்றுக்கு…

Read More

பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

ஹிருணிகாவுக்கு பிணை!

தெமட்டகொட பகுதியில் நபர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானதென கூறப்படும் டிபென்டர் வாகனத்தில் நபரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Read More