Headlines

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழி காட்டலில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கிய பல நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் நாம் வெற்றிகண்டு வருவதோடு,  நாட்டின் பல பகுதிகளில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிப்புற்று இருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, சம்மாந்துறை, மஹாஓயா ஆகிய இடங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும்,…

Read More

கிரிக்கெட் போட்டியால் அதிக லாபம் ஈட்டிய இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிக இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, அவுஸ்ரேலிய சுற்றுலா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டிக்கான அனுமதி சீட்டுக்கள் விற்பனையிலேயே 2,826,150 ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக…

Read More

1595 முறைப்பாடுகளில் 237 விசாரணைகள் நிறைவு

பாரிய ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 1595 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் 237 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் ஜனவரி மாதம் வரை அரச நிறுவனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கிடைத்த முறைப்பாடுகளில் 1049 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதில் 237 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 689 முறைப்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 43 முறைப்பாடுகள் வேறு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

எட்டு விதமான சொர்க்கங்கள் யார் யாருக்கென்று தெரியுமா

முதலாவது சொர்க்கம் – ஜன்னத்துல் பிர்தௌஸ் 1) போதும் என்ற மனம் கொண்டவர்கள். 2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள். 3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள். 4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள். இரண்டாவது சொர்க்கம் – தாருஸ் ஸலாம் 1) அனாதைகளை ஆதரிப்பவர்கள். 2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள். 3) ஸலாம் சொல்பவர்கள். 4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள். மூன்றாவது சொர்க்கம் – ஜன்னத் அத்னு 1) பேச்சை குறைப்பவர்கள். 2) தூக்கத்தை…

Read More

கல்விமான்கள் அமைதி காப்பது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தடையாகவுள்ளது

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். நேற்று முந்தினம் (08) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

Read More

தொழில் வாய்ப்புக்கான புதிய சந்தையில் நிறைவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு பணியாளர்களுக்கு அந்நாட்டில் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு ஏனைய தொழில் வாய்ப்பு சந்தை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததினாலேயே தற்போதய நிலை ஏற்பட்டது. எரிபொருள் நிலை வீழ்ச்சி ஒரு வருடத்திற்கு முன்னரிலிருந்தே ஆரம்பித்தது. இந்த நிலை கடந்த காலங்களில் பெரும் பொருளாதார…

Read More

சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள்

தாய்லாந்தில் சிஅன்காமாய் என்ற நகரில் நடைபெறவுள்ள 2016 சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளவனர். இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான  விமான பயணச்சீட்டுக்களை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமீபத்தில் வழங்கினார். தேசிய ரீதியில் தகுதி பெற்ற அணித்தலைவர்கள் நான்கு பேருக்கும் 16 மாணவர்களுக்குமான விமான பயணச்சீட்டுக்கள் இதன் போது வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை தாய்லாந்தின் அடிப்படை கல்வி…

Read More

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

வழக்கு விசாரணை தாமடைவது தனிப்பட்டவர்களுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பெரும் பாதிப்பாகுமென்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் புவனேக அலுவிகார (Priyasad Depp and Buwaneka Aluwihare) ஆகியோர் தலைமையில் வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பி்ட்டார். வழக்கு விசாரணை தாமதமடைவது குறித்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டதையும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். நீதியமைச்சு கொழும்பு…

Read More

போர் விமானங்கள் 8ஐ கொள்வனவு செய்ய அனுமதி

ஜெட் ரக போர் விமானங்கள் 08 ஐ, இலங்கை விமானப் படைக்குக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது.

Read More

முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த தமிழ் – சிங்கள மாணவ குழுக்களுக்கிடையில் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பின் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதம் 20 ஆம் திகதி மருத்துவ, விவசாய மற்றும் சித்த வைத்திய பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தன. அதனைத்தொடர்ந்து, ஜூலை…

Read More

கோரிக்கையை வாபஸ் பெற்றார் நிசாந்த

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்க ஜக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்காக கொழும்பு மேல் நிதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவரின் சட்டத்தரணியால் இன்று (10) வாபஸ் பெற்றுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை குறித்த அனுமதியை பெற்றுத்தருமாறு இவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் நிசாந்த ரணதுங்கவிடம் கடவத்தை நீதவான் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்றுவரும்…

Read More

பள்ளியிலிருந்து வெளியேறியவர் பலியான பரிதாபம்

-க.கிஷாந்தன் – வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில்  விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற…

Read More