Headlines

ஒலுவில் கடலரிப்புக்குத் தீர்வுபெற அர்ஜுன தலைமையில் அமைச்சரவை உபகுழு

ஒலுவில் கடலரிப்புக்கு அவசரமாக, தற்காலிகத்  தீர்வொன்றைக் காணும் வகையிலும், பின்னர் நிரந்தர நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலும் அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் இன்று காலை (09/08/2016) இடம்பெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்தக் குழுவில், மீன்பிடித் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

Read More

இலங்­கைக்கு மேல­தி­க­மாக 2500 ஹஜ் கோட்டா வழங்குங்கள் – ஜனா­தி­பதி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கைக்கு மேல­தி­க­மாக 2500 ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எழு­தி­யுள்ள கடிதம் நாளை சவூதி அரே­பி­யா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இக்­க­டிதம் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்­கையின் தூதுவர் ஊடாக சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு கைய­ளிக்­கப்­பட ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 2240 ஹஜ் கோட்டா சவூதி அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்டு 28 ஹஜ் முக­வர்­க­ளி­னூ­டாக பயண ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லை­மை­யிலே…

Read More

சட்டவிரோத ஆடை இறக்குமதி – கொழும்பு வர்த்தக நிலையத்துக்கு சீல்

புறக்கோட்டை பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்து ஆடைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மூன்று வர்த்தக நிலையங்களில், சுங்கத் திணைக்களத்தின் விஷேட விசாரணை குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போது, ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்ட விதம் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பெருந் தொகை ஆடைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, தகவல் கிடைக்கப்…

Read More

பாரிய பெருந்திட்டம் ஆரம்பம்!

இறப்பர் தொழில்துறையினை நவீன மயப்படுத்த நாம் கடினமான சிரமங்களை எதிர்கொள்கிறோம். உலகசந்தையின் நிலைமை, வழங்கல் துறையில் காணப்படுகின்ற தடைகள், தொழில்நுட்பக் குறைபாடுபோன்றவை எமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்கு செயற்கைஇறப்பர் இறக்குமதி மீதான இடர்பாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். கடந்த வாரம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேசஇறப்பர் மற்றும் பிளாஸ்டிக் கண்காட்சியின் மூன்றாவது பதிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்துக்கொணடு…

Read More

ரியோ ஒலிம்பிக் ; பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள சீனா  5 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்  என 13 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை அவுஸ்திரேலிய, இத்தாலி போன்ற நாடுகள் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களை பிடித்துள்ளன. இதுவரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையிலான…

Read More

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: இலங்கை கண்டனம்!

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் வைத்தியசாலைக்கு அருகில் நேற்றைய தினம் (8) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 70 பேர் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள், நண்பர்கள் தொடர்பில் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கால்நடை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

கால்நடை மருத்துவர்கள் இன்று (9) காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 48 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் விலங்கு உற்பத்தி, சுகாதார துறையில் அரசியல் திருத்தம், சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சந்தைகளில் இறைச்சிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் இறைச்சிகளை…

Read More

ரியோ ஒலிம்பிக் ; இலங்கைக்கு தொடரும் ஏமாற்றம்

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று (8) இடம்பெற்ற போட்டிகளில் பங்கேற்ற இலங்கை, பங்கேற்ற மூன்று போட்டிகளிலும்  தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. ஆண்களுக்கான 62 கிலோகிராம் எடைப்பிரிவில் பழு தூக்கல் போட்டியில் பங்கேற்ற என்டன் சுதேஷ் பீரிஸ் குருகுலசூரிய போட்டியை நிறைவுசெய்யாமல் வெளியேறினார். இந்நிலையில் 10 மீற்றர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் மங்கள சமரகோன் 50 ஆவது இடத்தை பெற்று போட்டியிலிருந்து வெளியெறினார். இதேவேளை ஒலிம்பிக் ஜுடோ போட்டியில் பங்கேற்ற ரிப்பியல்லகே சமீர  9 இடத்தை பெற்று…

Read More

புதிய தொழில்நுட்ப பீடத்தினை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்

காலி, மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யா மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களிடம் கையளித்தார். அறிவை மையமாகக் கொண்ட அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இரண்டாம் நிலைப் பாடசாலைகளை மீள்நிர்மாணிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இத்தொழில்நுட்ப பீடம் இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். அதன் பின்னர் பெயர்பொறி கல்லினை திரைநீக்கம் செய்து புதிய தொழில்நுட்ப பீடத்தை…

Read More

புதிய வரிக்­கொள்கையை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும்

வற் வரியில் இடம்­பெற்­றுள்ள தவ­று­களை நீதி­மன்றம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. எனவே நாட்டில் நிலை­யான அபி­வி­ருத்தி ஏற்­ப­டுத்­து­வதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு புதிய வரிக் கொள்கையை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும். அதில் தேசிய உணவு உற்­பத்­திக்கு சலுகை வழங்க வேண்டும் என அது­ர­லிய ரத்ன தேரர் தெரி­வித்தார். ‘தேசிய நுகர்வோர் வலை­ய­மைப்பு’ எனும் அமைப்பு இன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அது தொடர்பில் தெளி­வு­றுத்­ததும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும்…

Read More

ஒரே மாதத்தில் 200 மில்லியன் டாலர்களை வருவாய் ஈட்டி சாதனை படைத்த போக்கிமோன் கோ

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர். இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் 200 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது கேண்டி…

Read More