Headlines

ரணில் சீனாவுக்கு விஜயம்

உத்­தி­யோ­க­பூர்வ விஜ யம் ஒன்றை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் புதன்கிழமை சீனா­விற்கு செல்­ல­வுள்ளார். இதன் போது துறை­முக நகர் திட்­டத்தின் முன்­னெ­டுப்­புகள் உள்­ளிட்ட சீனாவின் முத­லீ­டுகள் தொடர்பில் பரஸ்­பர கலந்­து­ரை­யா­டல்­களில் அவர் ஈடுப்­படவுள்ளதாக தெரிகின்றது.

Read More

குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜரானார் ஜீ.எல். பீரிஸ்

முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜராகியுள்ளார்.

Read More

கொட்டகலையில் பாரிய விபத்து

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை 7.30 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் மேபீல்ட் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றுடன் கொட்டகலையிலிருந்து ஹட்டன் குடாஓயா பகுதிக்கு சென்ற லொறி ஒன்று நேர்க்கு நேர் மோதியுள்ளது.

Read More

பொது எதிரணியினர் ஐ.நா. முன் ஆர்ப்பாட்டம்

பொது எதிரணியினர்  ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா சபை முன்  இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் பொது எதிரணியினர்  குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இலங்கையில் பாராளுமன்றத்தில்  தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக  பொது எதிராணியினர்  ஜெனீவாவில் வைத்து தெரிவித்துள்ளனர். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, உதயகம்மன்பில மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிங்கப்பூர் தரத்தில் இலங்கையில் வைத்தியசாலைகள்

இலங்கை மக்களின் நலன்கருதி சிங்கப்பூரிலுள்ள மவுன்ட் எலிசெபத் வைத்தியசாலை மற்றும் அதற்குச் சமமான தரத்திலுள்ள மூன்று வைத்தியசாலைகளை இலங்கையில் அமைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்த வைத்தியசாலை அமைப்பதற்குப் பொருத்தமான காணியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நிர்மாணித்துத் தருவதற்கு ஜேர்மன் உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Read More

கூகுள் லூன் பலூன் சிகிரியாவில்

இணையத்­தள சேவையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான கூகுள் நிறுவனம் முன்னெடுக்கும் கூகுள் லூன்வேலைத் திட்டத்தின் மற்றுமொரு பலூன் இலங்கை வான்பரப்புக்கு அனுப்புவதற்கான வேலைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிகிரியாவில் நடைபெறும் “யோவுன் புரய” நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பலூன் வானுக்கு அனுப்பபடவுள்ளது. இந்த செயற்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மலிவான விலையில் இணைய சேவையினை பெற்றுகொள்ள முடியும் என்பதோடு தொலைதொடர்புக் கோபுர உதவியின்றி இணைய வசதியைப் பெறும் உலகின் முதல் நாடாக இலங்கை மாற்றம் பெரும்என்பதும்குறிப்பிடத்தக்கது.

Read More

நீரோடையில் முதலை மடக்கிப்பிடிப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 06 ஆம் குறிச்சி டீன் வீதியிலுள்ள நீரோடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை பொதுமக்களால் நேற்று இரவு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலையை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை காத்தான்குடியில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர். மேற்படி  முதலை தொடர்பில் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி என்.சுரேஷ்குமாரிடம் வினவிய போது, காத்தான்குடியில் நேற்று இரவு பிடிக்கப்பட்ட 3அடி சிறிய முதலை மட்டக்களப்பு வாவியில் இருந்து…

Read More

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 28.4.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 25.5.2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மலையகத்தில் பரிசோதனை

உலக டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரேயா நகரத்தில் இன்று காலை லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் லிந்துலை பொலிஸார் உள்ளிட்ட சுகாதார தாதிமார்கள் கிராம சேவகர்கள் உட்பட நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் அடங்கலாக பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது உணவகங்கள் மற்றும் கடைத்தொகுதிகள், மதுபானசாலைகள், பாடசாலைகள் என பல்வேறுபட்ட இடங்கள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் டெங்கு பரவும் சூழலைக் கொண்ட வீடுகள் மற்றும் கடைத்தொகுதிகளுக்கு சிவப்பு பத்திரிகை…

Read More

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பதவியில் சலசலப்பு..

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரராக இருந்த கலகம அத்ததஸ்ஸி தேரர்அண்மையில் காலமானதையடுத்து, அஸ்கிரிய மகாநாயக்கதேரர் பதவியைப் பெறுவதற்கு இரண்டு மகாநாயக்கர்கள் களத்தில் குதித்துள்ளனர். மகியங்கனை விகாராதிபதியான வரகாகொட ஞானரத்னதேரரும் பொலனறுவை 12 தலங்களின் விகாராதிபதியான வெண்டருவே உபாலி தேரருமே இப்பதவிக்கான போட்டியில் குதித்துள்ளனர். தற்பொழுது அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர்களாக பதுளை மகியங்கனை விகாராதிபதியும் பொலனறுவை 12 தலங்களின் விராதிபதியும் உள்ளனர். இது தொடர்பாக அஸ்கிரிய பீடாதிபதி தேரர்கள் குழுவுக்கு இவர்கள் இருவரும் முறையாக அறிவித்துள்ளனர். இதற்குத்…

Read More

7 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 7 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலேயே நாளை  இரவு 10 மணியிலிருந்து தொடர்ந்து 7 மணித்தியால குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பேஸ்லைன் வீதியின் களனி பாலத்துக்கு அருகிலிருந்து தெமட்டகொடை சந்தி வரையான பிரதான வீதி மற்றும் அதனோடு தொடர்புபட்ட குறுக்கு வீதிகள் ஆகியவற்றிலும் செட்டியார்த்தெரு மற்றும்…

Read More

சு.க.வின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Read More